பாடலைத்
தொடர்ந்தே சென்றேன்....84.
1966 தமிழ்த்
திரை உலகுக் கதவுகள்
திறந்து
ஒரு திறமையான,அழகான
துரு துரு கதாநாயகியை
(சாவித்திரி அம்மா
அளவுக்குத் திறமை
என்று கூட சொல்லலாம்)ஆந்திராவிலிருந்து
அழைத்து வந்தது.இவருடைய
வசந்த மாளிகை,குலமா
குணமா இன்ன பிற
படங்கள் இவரது
திறமைக்கு சான்றுகள்.இந்தப்
பாடல் இவரது முதல்
பாடல் காட்சி என்று
நினைக்கிறன்..ஜோசப்
தளியத் அவர்களின்
காதல் படுத்தும்
பாடு ...பாடல் :வெள்ளி
நிலா வானத்திலே".....வரிகள்
ஆலங்குடி சோமு...இசை
டி.ஆர். பாப்பா
அவர்கள்.டி.ஆர்
பாப்பா ,அம்மா
கூட்டணி சோடை போனதில்லை...இதுவும்
அப்படிப்பட்ட
பாடலே...மெலிதான
சோகம் பாடல் முழுவதும்...இரவு
தூக்கம் வராமல்
புரண்டு படுப்பவர்களை
இளந்தென்றலாய்
வருடிக் கொடுக்கும்
ஸ்லோ பாடல் சுசீலாம்மாவின்
சுகமான குரலில்...
"வெள்ளி நிலா
வானத்திலே வந்து
போகுதடா
அது வந்து போன
சுவடு அந்த வானில்
இல்லையடா....வானில்
இல்லையடா"....ஒரு
மென்மையான குழல்
ப்ரல்யூட்....அந்த
இனிமையோடு தொடங்கும்
பல்லவி...வானத்தில்
வந்து மறையும்
வெண்ணிலா காதலுக்கு
உவமை சொல்ல...வந்த
நிலா தங்காமல்
நீலவான் ஆடைக்குள்
முகம் மறைத்துக்
கொள்ள வந்து மூடிக்
கொண்ட மேகம் நிலவின்
சுவடு கூடத் தெரியாமல்
மறைத்து விடுகிறதாம்....அவள்
மனத்தில் பிரிவுத்
துயரம்........நிலா இது
பாடும் பொழுது
ஒரு நிதானம்....வானத்திலே....லே
யில் ஒரு நெடிய
சங்கதி...சுவடு
மட்டும்..வானில்
இல்லையடா.....துன்பத்தை
அழுத்திச் சொல்ல
இரண்டு முறை....
"கொடி
மடியில் ஊஞ்சல்
போட்டுத் தென்றல்
போகுதடா" அது
ஊஞ்சல் போட்ட
சுவடு அந்தக் கொடியில்
இல்லையடா.....கொடியில்
இல்லையடா."
நிலவு மட்டுமா
கண்ணாமூச்சி விளையாடுகிறது..தென்றலும்
தான்..
கொடியில் தலை
தடவிச் செல்லும்
தென்றல் காற்று...அதுவும்
வந்து போன அடையாளம்
கூட இல்லாமல் கொடியில்
உள்ள இலைகள் அசையாமல்
நிற்கிறதாம்...
இது எதற்கு
இவ்வளவு பீடிகை....காதல்...
"உள்ளத்திலும்
காதல் நிலா வந்து
மின்னுதடா...ஆ ஆ
ஆ..
அந்த ஊர்வலத்தின்
சுவடு மட்டும்
மறைவதில்லையடா....மறைவதில்லையடா.."
உள்ளத்தில்
தோன்றிய காதல்
திருமணம் வரை போகும்
என்றெண்ணியிருந்தேன்...அந்த
சுவடு மட்டும்
வடுவாக மனத்தில்.....அது
மட்டும் மறையவே
மறையாதடா...உயிருள்ள
வரை மறக்க முடியாத
காதல் அதை சொல்வது
போல....மறைவதில்லையடா.....பாடி
இருக்கும் நயம்.
சுசில்லாம்மா
குரலில்
.அதற்கு
வாணிஸ்ரீயின்
சோக பாவம் முகத்தில்...ஒரு
பாடலில் எப்படி
உணர்ச்சிகளைக்
குரலில் கொட்டிப்
பாடவேண்டும்...அதற்கு
இதுதான் பாலபாடம்...தொடர்ந்து
செல்கிறேன் உங்களுடன்...http://www.youtube.com/watch?v=32TjlUzV5yw