பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்....83.
பீம்சிங்கின்
பாதுகாப்பு....1970 வெளியீடு.....கண்ணதாசன்
வரிகளுக்கு
மெல்லிசை மன்னர்
இசை.....அருமையான
சாருகேசி....சுசீலாம்மா
குரலில்....இது
ஒரு
நாட்டியப்
பாடல்.....நடனம்
புரட்சித்
தலைவி......சாருகேசி
ராகம்
சிருங்கார
ரஸத்திற்கே
உரியது...இது
ஒரு நாயகி,தன்
தோழியிடம்
தலைவனை
இல்லத்திற்கு
அழைத்து வரச்
சொல்லும்
பாடல்....
"வரச்
சொல்லடி...அவனை
வரச்சொல்லடி
என்
வாயார ஒரு
முத்தம்
நானாகத்
தரவேண்டும் வரச்
சொல்லடி....பாகவதர்,ஏழிசை
வேந்தன்
சாருகேசிக்கு
என்னுடையது எந்த
விதத்திலும்
குறையில்லை
என்று ஒரு ஈடுபாட்டுடன்
அம்மா பாடி இருக்கும்
பாடல்...நாயகி
பாவம்
என்றாலே
கொஞ்சம்
விரகம்....அதைக்
கூட ஒரு
தெய்வீகமாகப்
பாடி
இருக்கும்
சுசீலாம்மா...
"தெய்வானைப்
போல் என்னை
நினைத்தாலென்ன..
என்
செந்தூரம்
கலையாமல்
அணைத்தாலென்ன..
கையோடு கை
கொஞ்சம்
கலந்தாலென்ன.......நான்
கல்யாண
சுகம் யாவும்
அறிந்தாலென்ன???"
இது
முருகனை
நாயகனாக
வரித்துப்
பாடும் பாடல்
என்று
தெரிகிறது...
என்னை நீ
உன்
மனைவியாகவே
பாவித்து
எனக்கும்
கணவனாக
இருந்தாலென்ன?.....கொஞ்சம்
வெளிப்படையாகவே
இருந்தாலும்
நாட்டியத்தில்
இத்தகைய
பாவம்
சம்பிரதாயமானதே...
கையோடு கை
கொஞ்சம்
கலந்தாலென்ன.....இதைத்
தொடரும் ஒரு
சாருகேசி
ரஸம்...அம்மாவின்
குரல் என்கிற
தங்கக்
கிண்ணத்தில்
வடித்து எடுத்தது...
'அறிந்தாலென்ன"....ஒரு
நியாயமான
அநியாயம்...
"மலைக்
கோவில்
குமரேசன்
அறியாததா..என்
மடி என்ன கதை
சொல்லத்
தெரியாததா..
கலைக்கோவில்
அவன் காண
முடியாததா..அது
கனிவானதா
கொஞ்சம்
பதமானதா.."
வள்ளி
தெய்வானை
இரண்டு மனைவி
இருக்கும் கந்தனுக்கு
இது என்ன
புரியாத
விஷயமா???
இனி வரும்
வரிகள்
"வந்தானை
சேலையொடு
முந்தானை
காதலோடு
கண்டானை
தேனருவி
கொண்டானை"....
"பக்திச்
சுவையோடன்
தித்தித்தொரு
இதழ்
முத்துத்
தரம் என
நின்றானை
வள்ளிக்
குறமகள்
அள்ளிப்
பருகிட
பள்ளித் தலம்
வரை சென்றானை
முருகனைக்
குமாரனைக்
கந்தனை
வேலனை....
முருகனைக்
குமாரனைக்
கந்தனை வேலனை
வசந்தம்
நிறைந்து
மயங்கும்
இரவில்
மானிவள்
ஆனந்த
சாலைக்கு....வரச்
சொல்லடி....
இதற்கு
வியாக்கியானம்
தேவையில்லை
என்பதால்....ஒரே
வரியில் அவனை
கணிகையாகிய
தன்
வீட்டிற்கு, மயக்கும்
மாலைப்
பொழுதில்
வரச்
சொல்லுகிறாள்..வசந்தம்...நிறைந்து
மயங்கும்
இரவில்......போதை
தரும் வரிகள்
தெய்வீகக்
குரலில்
கண்ணியத்தோடு......
பாடல்
உங்களுடன்......இந்தப்
பாடல் ஒரு
நேயர் விருப்பம்....நானும்
தொடர்கிறேன்...http://www.youtube.com/watch?v=qWnvM0VrQ10