Visali Sriram

November 22, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...82.

ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம்..ஊட்டி வரை உறவு...அற்புதமான நடிகர்கள் கூட்டம்...வரிக்கு வரி வயிறு வலிக்கும் சிரிப்பு மழை.பாடல்கள் எல்லாமே சூபர் ஹிட்.இது முதல் பாடல்...அதுவும் முத்தான பாடல்....தேடி தேடி இன்று பகிரும் பாடல்"தேடினேன் வந்தது"..கவியரசரின் வரிகள்...மெல்லிசை மன்னர் இசை மழை...மெல்லிசை மன்னரின் வாத்தியத் தேர்வு.,பாடல் இசைக் கோர்வை...பாடியிருக்கும் சுசீலாம்மாவின் டைனமிக்ஸ்....அற்புதம்...

முறை மாமன் கொடுமையிலிருந்து தப்பும் நாயகி ரயிலுக்குப் போகும் வழியில் நடந்த ஒரு விபத்தில் அகப்பட்டுக் கொண்ட பெண்ணின் பெட்டியை எடுத்துக் கொண்டு,அவளைக் காப்பாற்ற நினைத்ததைத் தடுத்த டாக்சி டிரைவரின் மறுத்தலால் பெட்டியுடன் ரயில் ஏறுகிறாள்...அவள் காப்பாற்ற மறுத்த பெண் தன் தங்கை என்று தெரியாமல் நாயகன் காப்பாற்றுகிறான்.

நாயகி பெட்டியில் உள்ள ஆதாரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நாயகன் வீட்டிலேயே மகளாகத் தங்குகிறாள்,நாயகன் அந்த செல்வந்தரின் சொந்த மகன் என்று தெரியாமல்.....அவளைப் பொருத்தவரையில் அவள் மனத்தில் ஒன்றைப் பற்றி நினைத்ததெல்லாம் வெற்றி...அதை பேப்பரில் எழுதி எழுதி கசக்கி எறிகிறாள்....உற்சாகத்தில் பாடல் பிறக்கிறது....கால்கள் ஆடத் துடிக்கின்றது....

ஹம்மிங் ஓ ஓ ஓ........ஹ ஹா ஹ ஹா ஆ.....

தொடரும் பின்னணி இசை ஒரு ட்ரீட்........

"தேடினேன் வந்தது......அதைத் தொடரும் ரிதம்.....அற்புதம்....இசையமைப்பாளரின் மாயா ஜாலம்...வித்தகர்..மெல்லிசைமன்னர்...இது ஒரு மேற்கிந்தியப் பாடல் ரகத்திற்கு கோர்க்கப் பட்டிருக்கும் இசை சங்கமம்...நாடினேன் தந்தது....வாசலில் நின்றது.....வாழவா என்றது.....கீழ ஆரம்பித்து படிப் படியாக உயரும் குரல் வண்ணம்...வாசலில்....."லில்"...இதில் ஒரு விஸ்தாரமான குயிக் சங்கதி...வாழ வா என்றது.....'வா"........விளிக்கும் வா அது...

தொடரும் கிடார்,வயலின்,அக்கார்டின்....சொர்க்கம்.....

என் மனத்தில் ஒன்றைப் பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி...நான் இனி பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி....

பெண் என்றால் தெய்வ மாளிகைத் திறந்து கொள்ளாதோ..."...தோ..ஓ...ஓ..ஓ....இதுதான் விப்ராட்டோ....அசத்தல்...

'இனி கலக்கம் ஒன்றும் இல்லை..இதில் விளக்கம் சொல்வதும் இல்லை

இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே...

மீண்டும் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ???பெண் என்றால் ...பெண்ணில் ஒரு அழுத்தமான பெருமிதம்.....வந்த இடம் நல்ல இடம் என்று ஒரு நிம்மதி...(.பாவம் அதைத் தொலைக்கும் நாயகனின் பளார்....)

பாடலின் இசை அமைப்பு பாடல் பாடி இருக்கும் விதம்...குரலின் டைனமிக்ஸ்.....காலத்துக்கும் நிற்கும் பாடல்....உங்களுடன்.......காது முழுவதும் ட்ரம்ஸ்,பாங்கோஸின் தாக்கம் இன்னும்.....நிறைவாய்....http://www.youtube.com/watch?v=9fHV2XL

AMAZING MESMERIZING COMPOSITION............ASTOUNDING SINGING .......