Visali Sriram

November 21, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...81.

சாவித்திரி அம்மாவுக்காக சுசீலாம்மா பாடிய பாடல்...1963 வெளியீடு புரட்சித் தலைவர் நடித்த பரிசு திரைப் படத்திலிருந்து கண்ணதாசன் வரிகளுக்குத் திரை இசைத் திலகம் மாமா இசையமைப்பில் "ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே..."..இது ஒரு மென்மையான ஸ்லோ மெலடி.மாமா,சுசீலாம்மா கூட்டணி பாடல் சோடை போனதே இல்லை....இதுவும் அதில் ஒன்று...

ஆரம்பமே குளிர்த் தென்றலாய் ஒரு ஹம்மிங்....ஆ ஆ ஆ ஆ ஆஹா ஆஹா..ஆஹா...

"ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே...

ஆரவார நடையைப் பார்த்து மயக்கம் கொள்ளாதே.."படகுத் துறையில் ஆற அமர சாவித்திரி அம்மா ......ஆசை வைக்காதே...வையில் ஒரு அழுத்தம்....'மயக்கம் கொள்ளாதே'....மயக்கமான அறிவுரை...கொள்ளாதேயில்..

"சூட்டைப் பார்த்து கோட்டைப் பார்த்து

தூண்டில் முள்ளில் மீனைப் போல

விழுந்து வைக்காதே சொக்கி நிற்காதே."....ஆளைப் பார்த்து.

உடையைப் பார்த்து,மீனைப் பிடிக்க முள்ளில் சொருகியத் தூண்டிலாக ஏமாந்து போகாதே..தேன் கலந்த அறிவுரை...கோட்டைப் பார்த்து....கிண்டல் த்வனிக்கும் "பார்த்து'....'முள்ளில்"..ஒரு ரவை..."விழுந்து"....விழவைக்கும் இனிமை..."சொக்கி நிற்காதே".....சொக்கி நிற்காமல் நிற்க முடியாத குரலினிமை....தொடர வைக்கும் சொக்க வைக்கும் இனிமை..

"கண்ணை விழித்துப் பார்ப்பதாலே உண்மை தெரியாது

கன்னத்தின் மேல் கை வைத்தாலும் உண்மை புரியாது

நீட்டி நிமிர்ந்து சாய்வதாலே நிலைமை விளங்காது

நின்னு நின்னு தவம் செய்தாலும் பொண்ணு மயங்காது"

நான் இந்தப் படம் பார்த்ததில்லை....காணொளியும் கிடைக்கவில்லை...

என் யூகத்தில் காட்சியை சொல்கிறேன் அம்மா குரலை வைத்து....படம் பார்த்தவர்கள் என் யூகம் சரிதானா என்று சொல்லுங்கள்..அது அம்மாவுக்கு,அவர் குரல்,பாவத்துக்குக் கிடைத்த வெற்றி...

படகுத் துறையில் சூட்டு கோட்டுடன் புரட்சித் தலைவர்,சாவித்திரி அம்மாவைக் குறு குறுப் பார்வையில்..அவருக்குப் பாடலிலேயே பதில்...புரட்சித் தலைவர் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு...நீட்டி சாய்ந்து கொண்டு....கண்கொள்ளாக் காட்சியாக...

'உண்மை தெரியாது"...அழகாகப் பாடி இருப்பார்கள் இங்கே அம்மா...

'கன்னத்தின் மேல்"....கன்னத்தின் அழகு குரலில்...

புரியாது....அற்புதம்...ஆனந்தம்..'நின்னு நின்னு தவம் செய்தாலும் பொண்ணு மயங்காது'..ஆனா நாங்க மயங்கிட்டோம் அம்மா...உங்கள் குரலுக்கு....அதுவும் அந்த ஓ ஓ.ஓ ஓ....ஓஹோ..ஆ ஆ ஆ ஆ ஆஹா..பாடலைத் தொடர்ந்தே நீங்களும்...நானும்.....http://www.youtube.com/watch?v=OJkHiNz7B9A