Visali Sriram

November 20, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்....80.

இன்றைய பகிர்வு ஒரு அருமையான தாள வாத்திய ட்ரீட்.இதன் மறு பாதிப்பு அடைந்த வெற்றி இந்தப் பாடல் பெறவில்லை என்று ஒரு கருத்து...இந்தப் பாடல் 1968 என் தம்பி படத்தில் சுசீலாம்மா பாடியது மறு வருடம் வெளி வந்த சிவந்த மண் படத்தில் வந்த பாடல் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடியது....காட்சி அமைப்பின் பிரும்மாண்டம்....கலர்....ஈஸ்வரி அம்மாவின் ஹ ஹ ஹஹஹ

விசிப்பு....இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்....ஆனால் இந்தப் பாடல் கறுப்பு வெள்ளை.....அதே நடிகர் திலகம்....கூட ஆட சரோஜா தேவி, பாலாஜி....படம் என் தம்பி...."தட்டட்டும் கை தழுவட்டும்"தட்டட்டும்......அந்த ட்ரம்சும் பாங்கோஸும்......ஆஹா...என்ன ரிதம்.....கவியரசர்....மெல்லிசை மன்னர்..சுசீலாம்மா...

எத்தனையோ சுசீலாம்மாவின் அருமையான பாடல்கள் இருக்க நான் ஏன் இந்தக் கூட்டணி பாடல்களையே அதிகமாகப் பகிர்கிறேன்?...சிலர் அதை ஜாடை மாடையாக எக்ஸ்பர்ட் கம்மென்ட் கூட செய்திருந்தார்கள்......மன்னிக்க வேண்டுகிறேன்......எல்லாப் பாடல்களையும் நானும் கேட்டுக் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன்.....சில பாடல்களின் இனிமையாலும் தாக்கத்தாலும் அதோடு அதிகமாகப் பயணிக்கிறேன்....தவிர்க்கவே முடியாத பாடல்கள் அவை என் வாழ்க்கைப் புத்தகத்தில்......

என் விருப்பத்தைத் திணிக்கவில்லை....பகிர்கிறேன் நீங்களும் ரசிக்க....

காட்சியில் பாலாஜி சிவாஜியின் தம்பி....சரோஜா தேவி அத்தை மகள் ...கண்ணனான சிவாஜியிடம் அவளுக்குக் காதல்...பொறாமையால் கண்ணனைக் கொன்றதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவர் முன் அச்சு அசல் இன்னொரு கண்ணன் வருகிறான்....அவனைப் பரீட்சித்துப் பார்க்க எண்ணும் விஸ்வம்(பாலாஜி),சிறு வயதில் ராதாவின் கூந்தல் மலர்களை கண்ணன் சாட்டையால் குறிதவறாமல் பறிப்பது வழக்கம்....அந்தப் பரீட்சை மறுபடி வைக்கிறான்.....ராதாவும் கூந்தலில் மலர் சூடி ஆடுகிறாள்...கண்ணன் கையில் திணிக்கப் படும் சாட்டை....பாடலில் ஒரு சரணம் முடிய....ஒன்,டூ

த்ரீ விஸ்வம் சொல்லக் கண்ணன் அடிக்கணும்...மலர் பறிக்கணும் அவள் மேல் அடி படாமல் ...ஒரு வில்லியம் டெல் கதை இங்கே...

சுசிலாம்மா பாடுகிறார் "தட்டட்டும் கை தழுவட்டும்...திட்டத்தை வெல்லட்டும்,நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ ஏனோ...."அந்த பாங்கோஸும் டிரம்ஸும்.....ஆஹா...கிழி...

நடிகர் திலகம் முக பாவனை....அழகு....சரோஜாதேவியின் நடனம் பாங்கு....பாலாஜி...வீம்பு...

"கன்னத்தில் விழுந்த முத்தங்கள் எண்ணத்தில் நிலைத்து நிற்கட்டும்

வீரத்தை அணைத்து கொள்ளட்டும் வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்"ஒவ்வொரு வரியும் கண்ணனுக்கு ஊக்கம் அளிக்க....பாடியிருக்கும் நேர்த்தியும் அதை சொல்லுவது போல் ஒரு உற்சாக வேகமாய் வெள்ளமாய்..."விரைந்து செல்லட்டும்".....'விரைந்து 'உச்சத்தில்.....தாளத்தோடு இணைந்து வேகத்தை அளந்து...சுசீலாம்மா சுசீலாம்மாதான்...

பிண்ணணி இசை இன்றைய பாணியில் சொல்லப் போனால் தூள்...

விச்வம் ஒன்,டூ சொல்ல...கண்ணன் சாட்டையை சுழற்ற தவறிய குறிக்கு விஸ்வம் கெக்கலிக்க....என்ன சொல்ல என்ன சொல்ல.....

அவன் தோற்பதை சகியாமல் வேகத்தைப் பாடலில் கொஞ்சம் கூட்ட...

"நூலாடும் மேலாடை சிரிக்கின்றதே...மேலாடும் பொன்னாடை அழைகின்றதே

சேலாடும் கண் இன்று துடிக்கின்றதே போராடும் உனைக் கண்டு தவிக்கின்றதே....''.கன்னத்தில் விழுந்த முத்தங்கள்..'...

அவன் படும் பாட்டைக் கண்டு அவள் படும் பாடு......இந்த துடிப்பு....தவிப்பு..."தவிக்கின்றதே..".....தவிப்பு மொத்தமும் அந்த "தே"வில் கொட்டி இருப்பார்கள்.....

கண்ணனின் சாட்டைக்கு விழும் மலருக்கு அடுத்த சரணம்..

"பதமாகக் கால் பின்னி நடக்கின்றதே பரிதாப உணர்வோடு நடிக்கின்றதே

மலர் கூட உனைக் காக்க நினைக் கின்றதே

வழி சொல்லத் தெரியாமல் தவிக்கின்றதே"....

அவள் நிலையை சொல்லிய விதம் அவனுக்கு ஏற்றிய வீரம்....சுழலும் சாட்டை...விழும் மலர்கள் ஒன்று இரண்டு மூன்று என .....பின்னணி இசை நிற்க விஸ்வத்தைப் பின்னி எடுக்கும் நடிகர் திலகத்தின் சாட்டை.....என்ன வேகம்...அதைக் காட்டும் முகபாவம்.....நடிகர் திலகத்திடம் வைத்த கண்ணைத் திருப்பமுடியாது....பாடல் வேறு முடிந்து விட்டதே!...மறக்க முடியாத பாடல்...காட்சி...அந்த இசையமைப்பு.....ஆஹா.....பாடியது ஆஹாஹா...அற்புதம் ஆனந்தம் பரமானந்தம்.....உங்களோடு தொடர்கிறேன்...http://www.youtube.com/watch?v=BTNvznQYGIA