பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்....79.
.....புரட்சித்
தலைவர், ஜெயலலிதாம்மா....பாடல்
வரிகள்
ஆலங்குடி
சோமு....இசை
மெல்லிசை
மன்னர்.சுசீலாம்மாவின்
இனிமைக்
குரலில்
"கட்டழகுத்
தங்க மகள்
திருநாளோ".....காவல்காரன்...1967.
எல்லாப்
பாடல்கள்
பின்னாலும்
போய்க்கொண்டே
இருக்க
வேண்டியது
தான்....அத்தனை
இனிமை...
இந்தப்
பாடல்
காட்சியில்
ஜெயலலிதாவின்
அழகும்
இளமையும்
நடனமும்
கொள்ளை அழகு
என்றால்...சுசில்லாம்மாவின்
குரல்
தேனினிமை....குட்டித்
தங்கையின்
பிறந்த
நாளுக்கு
கட்டித்தங்கம்
அக்காவின்
பரிசுப்
பாடல்.."கட்டழகுத்
தங்க மகள்
திருநாளோ
அவள் கிட்டே
வந்து கட்டி
முத்தம் தருவாளோ"..பெப்பி
ஆன
ட்யூன்...அனாயசமாக
பாடி இருப்பார்கள்
அம்மா.
ஆலங்குடி
சோமு
அவர்களின்
தமிழழகு
சரணத்தில்..
"வெட்டி
வைத்த
செங்கரும்பை
எடுப்பாளோ
அதை
வெல்லத்
தமிழ்ச்
சொல்லாகக்
கொடுப்பாளோ..
பட்டுக்
கன்னம்
செல்லம்
கொஞ்ச
சிரிப்பளோ
அதில்
பங்கு
கொள்ளத்
தோழியரை
அழைப்பாளோ..."
இந்த
வரிகள்
அந்தக்
குழந்தைக்குப்
பொருந்துவதை
விடப் பாடி
இருக்கும்
அம்மாவிற்கு
அற்புதமாய்ப்
பொருந்தும்.வெல்லத்
தமிழ் சொல்லாகக்
கொடுப்பாளோ......தீந்தமிழ்...பைந்தமிழ்
மாதிரி இது
வெல்லத்
தமிழ்....தெலுங்கைத்
தாய்மொழியாகக்
கொண்ட
அம்மாவின்
அமுதத்
தமிழ்...
தொடரும் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ....நீண்ட
அகாரம்
அபாரம்..
"அன்பிருக்கும்
நெஞ்சம் ஒரு
ஆலயமோ அதில்
ஆசையும்
பாசமும்
காவியமோ..
அன்னை
தெய்வத்தின்
நற்சீதனமோ
என்
கண்களில் நீ
தரும்
தரிசனமோ..."
பாசம்...இதைப்
பாடியிருக்கும்
விதமே தூய தாய்ப்
பாசம்...
நற்சீதனமோ....ஓ....அதற்கு
ஒரு ஓஓஹோ..
'தரிசனமோ".....முடித்திருக்கும்
விதம்.....அது ஒரு
தனி ராகம்.,..ரகம்...
பாடல்
உங்களுடன்.... http://www.youtube.com/watch?v=wl5Ud9eNmiU