Visali Sriram

November 18, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..78.

1965,ெமினியின் வாழ்க்கைப் படகு திரைப் படப் பாடல் ஒன்றின் பின்னாலேயே சென்றுகொண்டு அந்தப் பிரமிப்பை உங்களுடன் பகிர விழைந்ததே இந்தப் பகிர்வு.....அத்தனை பாடல்களும் அருமை....சுசீலாம்மா பாடிய பாடல்கள் எல்லாமே இங்கு பகிரப்படும் ஒன்றன் பின் ஒன்றாக...வரிகள் கண்ணதாசன்...இசை மெல்லிசை மன்னர்...காட்சியில் ஜெமினி கணேஷ்,தேவிகா,ரங்காராவ்......

கறுப்பு வெள்ளையில் கொள்ளை கொள்ளும் அழகு தேவிகா...பாடல் பழைய ஹிந்திப் பாடல் "பியார் கி ஆத்தோ "மொகலே ஆசம்"பாடலின் ஈர்ப்பில்,இசையமைப்பாளர் நௌஷாத் அவர்களின் மேல் மெல்லிசை மன்னருக்கு உள்ள மரியாதையின் வெளிப்பாடு.....சுய தன்மை கொஞ்சமும் விலகாமல் அமைக்கப்பட்ட ட்யூன்...

தேவிகாவின் நடனத்தைப் பார்க்க வந்திருக்கும் ஜெமினி...பணக்கார ரங்காராவின் வாரிசு....அதே நடன அரங்கத்தில் அப்பாவும் பிள்ளையும் வேறு வேறு ரசனையில்..முன்னவர்க்குக் காதல்...பின்னவருக்கு அது கௌரவப் பிரச்சனை....அவர் பார்வை தேவிகா மேல்...இவர் பார்வை மகன் மேல்...

இந்த காட்சிக்கு கவியரசரின் வரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமா....அருமை அருமை.....மெல்லிசை மன்னரின் இசை அமைப்பு மேன்மை ,பெருமை.....சுசீலாம்மாவின் குரல் இனிமையோ இனிமை...

பாடல் துவக்க பிரும்மாண்ட இசைப் பின்னணியை மெலிதாய் இழைத்து நம்மை இருக்கையில் இணைத்துக் கட்டும் சாரங்கி.....தொடரும் குயிலின் இனிமை சந்தம்"உன்னைத்தான் நானறிவேன் ( என்) மன்னவனை யாரறிவார்?என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்?"பல்லவி....இதில் ஒவ்வொரு 'தான்"உம் .தேன்.தேன்...உள்ளம் என்னும் மாளிகையில்...".உள்ளம்" டேக் ஆப்....அப்படியே நம்மை "அள்ளும்..

குரலுக்கு அழகு சேர்க்கும் தேவிகாவின் ஒப்பனையும்,பாவமும்..

பி ஜி எம்மைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவில் சொல்லியே ஆகவேண்டிய ஆசை....குழல்,வயலின்.....தொடரும் சரோத்......வேறு உலகத்துக்கே அழைத்துச் செல்லும் வான ஊர்தி... .

"யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லிக் காதல் செய்தோம்

நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம்

ஒன்றையே நினைத்து வந்தோம்..ஒன்றாகக் கலந்து வந்தோம்".....வரிகளின் அழகையும் எளிமையையும் என்னவென்று சொல்வது?மறுக்க முடியாத உண்மை..அதை சொல்லி இருக்கும் மேன்மை...

"யார் சொல்லி"காதல் செய்தோம்.....'.யாரில்' உலவும் குழைவு குரலால் மயிலிறகாய் முகம் வருடும் சுசீலாம்மா..

"விதி வழியே....நாமிருவர் சேர்ந்து வந்தோம்"...".வழியே" வில் வழியும் அமிழ்தம்....வந்தோம்...'.தோமில்' ஒரு சரட் பிருகா....ஒவ்வொரு தோம் ஒவ்வொரு விதம்.....

"காதலித்தல் பாபமென்றால் கண்களே பாபமன்றோ..

கண்களே பாபமென்றால் பெண்களே பாபமன்றோ

பெண்களே பாபமென்றால் மன்னவரின் தாயாரோ?"

காதலுக்கு வக்காலத்து கவியரசரின் வரிகள்....மாற்றுக் கருத்தே சொல்லமுடியாத வக்காலத்து...

மன்னவரின் தாய் யாரோ?....சுசீலாம்மாவின் குரலில் ஒரு கிண்டல் என்றால் அதை அப்படியே பாவத்தில் தேவிகா....கண்கள் பேசும் அழகிற்கு என்றால் குரலினிமை மேன்மைக்கு... எத்தனை முறைக் கேட்டாலும்,எத்தனை தடவைப் பார்த்தாலும் அலுக்காத பாடல்....உங்களோடு...https://www.youtube.com/watch?v=LQ-8LoS5zJ0