பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்...77.
1967 "நெஞ்சிருக்கும்
வரை"....நினைவிருக்கும்
என் அபிமான
இயக்குனர்
ஸ்ரீதர்
சாரின்
திரைப்படம்...நடிகர்
திலகம்...கே.ஆர்.விஜயா..முத்துராமன்......முக்கோணக்
காதல்...நடிகர்
திலகம்
விஜாயவைக்
காதலிக்கிறார்...விஜயா
முத்துராமனைக்
காதலித்து
மணக்கிறார்.தாம்பத்யம்
இனிக்கிறதா
இல்லை...முத்துராமன்
மூக்கு
முட்டக் குடித்து
விட்டு
வீட்டிற்கு
வர அதைப்
பார்க்கும்
விஜயா
மனக்குமுறல்
இந்தப்
பாடல்.....
கீழே விழப்
போகும்
கணவனைத்
தாங்கிப்
பிடித்து
"எங்கே நீயோ
நானும் அங்கே உன்னோடு...அதைத்தானே
கொண்டுவந்தேன்
நான் உன்னோடு...என்
கண்ணோடு"நானும்....அந்த
நானில் உள்ளக்
குமுறல்
எல்லாம்
இனிமையோடு
குரலில் சுசீலாம்மா...
'தானே.'.....அதைத் தவிர
வேறு எதையுமே
நான்
சீதனமாகக் கொண்டு
வரவில்லை...எதை...என்
காதலை....அதை
எப்படி பாடலில்
குரலில் சொல்வது....அதற்காக
அந்த
தா...னே...மெல்லிசை
மன்னரின்
அபிப்ராயம்
இதெல்லாம்....கவியரசரின்
சந்தத்திற்கு
இதை விட அழகாக
யாரால்
சிந்து கூட்ட இயலும்?
கணவனைத்
தோளில்
சார்த்திக்
கொண்டு படி
ஏறி மாடிக்கு
செல்லும்
காட்சி....அதை
பின்னணி இசை சொல்லும்..
"வாசலிலே
உன் காலடி ஓசை
கேட்டிருப்பேன்...
வந்தவுடன்
உன் ஆசை
முகத்தைப்
பார்த்திருப்பேன்..
கண்ணில்
நீரைக்
காணாமல் கவலை
ஏதும் கூறாமல்
என்னை
எண்ணி
வாழாமல்
உனக்கென நான்
வாழ்வேன்...."
இப்படி ஒரு
மனைவி
நம்மக்கு
கிடைக்க
மாட்டாளா
என்று
ஒவ்வொரு
ஆணும்
எங்கும்
வரிகள்....இசை...பாடல்..விஜயா..
இந்தக்
காலத்தில்
இந்தப் பாடல்
பயங்கர விமர்சனத்தை
எதிர் கொள்ள
வேண்டி
இருந்திருக்கும்....பிழைத்தார்கள்
இவர்கள்....ஆனால்
இது கூடஒரு
அழகுதான்
என்று
நம்மைப்
போன்றவர்களுக்குத்
தானே
புரியும்.
கணவன்
நல்லப்படியாக,ஒழுக்கமாக
வீடு
திரும்பியிருந்தால்
சரி...இங்கேதான்
அதுவும்
இல்லையே.....ஆனாலும்
அவள் காதல்
தெய்வீகமானது.வந்ததும்
வராததுமாகப்
பிரச்சனைகள்
எதுவும்
சொல்லாமல்,என்னைப்
பற்றி
எண்ணாமல்
உனக்கென்றே
நான் வாழ்வேன்...
'வாசலிலே' ...இங்கே ஒரு
எதிர்பார்ப்பு...கேட்டிருப்பேன்...கேட்டிருப்பேனின்
இறுதி சங்கதி
சொல்லும் அவள்
காத்திருத்தலின்
சோகசங்கதி.
"காலம்
வரும் என்
கனவுகள்
எல்லாம்
கனிந்துவரும்.
காத்திருப்பேன்
உன் ஆசை
முகத்தைப்
பார்த்திருப்பேன்"..
"காதல்
என்றால்
சேயாவேன்..கருணை
என்றால்
தாயாவேன்...
கண்ணா
உந்தன்
நிழலாவேன்..உனக்கென
நான் வாழ்வேன்..."
மஞ்சத்தில்
உன் கையில்
குழந்தையாகவும்...கருணை
காட்டுவதில்
உனக்குத்
தாயாகவும்....உன்னோடு
நிழலாக
உனக்குப்
பின்னாலேயே உனக்காகவே
வாழ்வேன்...இவள்
சொன்னதைக்
கேட்கும்
நிலையில்
அவன் இல்லை
...ஆனால் அவள்
ஆதங்கம்...சொல்லித்
தீர்க்கிறாள்...உனக்கென
நான் வாழ்வேன்.....
இங்கு
காட்சியில்
விஜயாவும்...குரலில்
சுசீலாம்மாவும்
என்றும்
வாழ்ந்து கொண்டே
இருப்பார்கள்.....அருமை......விஜயாவின்
உருவம்(ஒப்பனை
இல்லாத)....முகம்...அந்த
மின்னும் மூக்குத்தி.....ஆஹா....
பார்க்காமலேயே
அந்த
லக்ஷ்மிகரமான
முகத்தைக்
குரலில்
காட்டும்
சுசீலாம்மா.......காலத்தை
வென்ற
பாடல்...காட்சி...படம்....உங்களோடு...https://www.youtube.com/watch?v=lxCBuYyVvvo