பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்....76..
'ஆ ஆ ஆ ஆ
அ அ ஆ ஆ ...ஆஹா ஆஹா
ஆஆ ஆ ஆ ஆ ஆ ....
என்ன இன்று
ஆரம்பமே
உற்சாகம்?ஆமாம்....உற்சாகமான
பாடல்,அற்புதக்
காட்சி,அருமையான
இசையமைப்பு..
பாடலின்
ஆரம்ப இசையே
பிரும்மாண்டம்....பந்துலு
மாமா பாடம்
என்பதாலோ?
அழகான
நடனம்...மெல்லிசை
மன்னர்,சுசீலாம்மா.......இன்னும்
என்ன
வேண்டும்
உற்சாகத்துக்கு
...இளசுகளின்
பாஷையில்
தூள் பாடல்....
காட்சியில்
ஒரு புறம்
புரட்சித்
தலைவரும்,ஜெயலலிதாவும்,இன்னொரு
புறம்
அசோகன்......
1968 இல்
பந்துலு மாமா
தயாரிப்பில்
ரகசிய போலீஸ்115....'உன்னை
எண்ணி என்னை
மறந்தேன்....."
வெண்ணிறை
ஆடை
நிர்மலா....சுழன்று
சுழன்று நடனமாட....புரட்சித்தலைவர்
தாளம் போட்டு,தலை
ஆட்டி
ரசிக்க...ஜெயலலிதா
கோபிக்க...அசோகன்
தன்னை எண்ணிப்
பாடுவதாய்
உணர்ச்சி
பொங்க
துடிக்க.....பாடல்
"உன்னை
எண்ணி என்னை
மறந்தேன்...
.தொடரும்
குழல்.....நிர்மலா
எம்.ஜி ஆரைப்
பார்த்துப்
பாட.....
அவர்
பாணியில்
அவர்
ரசிக்க...."உன்னை
எண்ணி என்னை
மறந்தேன்....அங்கு
காத்திருந்தேன்
உன்னைக் காண
வந்தேன்...அன்று
உன்னைத் தொட்டத்
தென்றல்
வந்து
என்னைத்
தொட்டதோ..தோ ஓ
ஓ ...நெடில்.
பாடல்
வேகமான
பாடல்...சுசீலாம்மாவின்
ஸ்பீட்....அதிலே
விழும்
ப்ருகா........காத்திருந்தேன்.....நீண்ட
நேரம்
காத்திருப்பு
போலும்...அதனால்
அந்தக்
கா.....வும்
கொஞ்சம்
நீளம்.. காண
வந்தேன்....நீண்ட
காத்திருப்பு.....காண
வந்த
உற்சாகம்....கா....ண
வந்தேன்
நெடிலானது....உன்னைத்
தொட்ட
தென்றல்
வந்து என்னை
தொட்டதோ.......தென்றல்
தொட்டதை...
மின்னல்
வேகத்தில் பாடி
இருப்பார்கள்...அது
முடிந்து
பல்லவி எடுக்கும்
இடம்....எம்.எஸ்.வி.முத்திரை...
புரட்சித்
தலைவர்
சங்கீத ஞானம்
நாடறிந்தது...அவர்
தாளம் போடும்
அழகும்..தலையை
ஆட்டும் லாவகமும்
அமர்க்களம்....அசோகன்
தானும் சளைத்தவரில்லை
என்று தாளம்
தப்பாமல்
போடுவது கண்கொள்ளாக்
காட்சி...
வயலின்களின்
பின்னணி
அருமை...
"காதலர்
கண்கள்
சங்கமம்
ஆனால் கன்னம்
சிவக்க
என்னென்ன
நடக்கும்..."என்ன
நடக்கும்
என்று புரட்சித்
தலைவர்
ஜெயலலிதாவிடம்கேட்பதும்
அவர் பல்லைக்
கடிப்பதும்
சுவையோ சுவை...
நானதைப்
பார்க்க
நாழிகை ஆனால்
...நாழிகை அதிகம்
ஆனதால் நா
வில் ஒரு
இழுப்பு...ஆஹா..
நடையோடு
இடைகூட
மெலிவாகுமே.....சிருங்காரம்....காத்திருந்து
இடை
மாத்திரம்
மெலியவில்லை...நடையும்
நலிந்ததாம்....வெண்ணிற
ஆடை நிர்மலா
அப்படிப்பட்ட
உடல் வாகு
கொண்டவர்
ஆதலால்
அழகாகப் பொருந்தும்...மெலிவாகுமே...தொடரும்
ஒரு மே
சங்கதி....ஓஓஹோ....
அடுத்த
சரணம்
ஆரம்பமே ஒரு
மின்னல்
அகாரத்தோடு....அதற்கு
இணை அதுதான்..
"பொன்னிற
உடலும்
செம்மணி
இதழும்
காதல்
கனியும்
உனக்கென
கனியும்...
நேரம்
குறைவு
நினைவுகள்
அதிகம்
நிழலோடும்
விழியோடும்
முகம் காண
வா.."...ஆ ஆ ஆ ஆ ......உன்னை
எண்ணி என்னை
மறந்தேன்..."
கவியரசரின்
சிருங்காரம்
வரிகளில்....பொன்னிற
உடலும்,செம்மணி
இதழும்,காதல்
கனியும்...உனக்கெனக்
கனியும்....முதல்
கனி, பழம்...
இரண்டாவது
கனி....உனக்காகக்
கனியும்....இல்லை
மறைகாயாக
"கனி"
நேரம்
குறைவு...நினைவுகள்
அதிகம்....அவ்வளவு
காதல்
வயப்பட்டிருக்கும்
அவசரம்...நிழலாடும்
விழியோடு
முகம் காண
வா...உனது
விழியில்
எனது
பார்வைக்கு
வா..திரும்பியும்
அந்த வாவில்
ஒரு நெடில்
சுழிவோடு
பல்லவி"உன்னை
எண்ணி"......இந்தப்
பாடலின்
வேகம்...அந்த
வேகத்திலும்
ஒரு
இனிமை....பிண்ணனி
இசையின்
மென்மை...பாடலுக்கு
ஒரு தனி
சிறப்பு
சேர்க்கும்
சுசீலாம்மா.....பாடல்
முடிந்தும்
ஒரு
பிரமிப்பு....தொடர்ந்து
சென்று
கொண்டே........உங்களோடு...https://www.youtube.com/watch?v=8z_HoJmZj_c