பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்...75....வைர நாள்
பாடல்....
எனக்கு
இரண்டு வயது
சுசீலாம்மா
பாடலைக் கேட்க
எழுந்தோடி
வந்தேன்...இந்த
தோடியைக்
கேட்ட நாள்
முதல் இவர்
பாடல்
பின்னால்
தொடர்ந்து
சென்று
கொண்டே
இருக்கிறேன்...உங்களுடன்
சில
பாடல்களைப்
பகிர
ஆரம்பித்து
இன்று 75வது
நாள்...பாடல்
என்ன என்று
யூகித்து
இருப்பீர்கள்.....1957இல் தஞ்சை
ராமய்யா தாஸ்
வரிகளுக்கு
இசை மேதை
ஜி.ராமநாதன்
அவர்கள் இசை
அமைப்பில்
"வணங்காமுடி
"படத்தில்
சாவித்திரி
அம்மாவுக்காக
சுசீலாம்மா
பாடிய அச்சு
அசல்
அக்மார்க் தோடி ராகப்
பாடல்
"என்னைப்
போல்
பெண்ணல்லவோ"...
கர்நாடக
சங்கீத
விற்பன்னர்கள்
மேடைக் கச்சேரிகளில்
நல்ல
தேர்ச்சி
இருந்தாலேயன்றி
பாட முடியாத
ராகம்
தோடி.தோடியின்
ரசத்தைப்
பிழிந்து ஒரு
சின்னப்
பாடலில்
கொடுத்த
ராமநாத அய்யரையும்
சுசீலாம்மாவையும்
மறக்க
முடியாமல்
செய்த பாடல்....
"என்னைப்
போல்
பெண்ணல்லவோ...நீ
என்னைப் போல்
பெண்ணல்லவோ....உலக
இருள்
நீங்கும் கண்ணல்லவோ
தேவி
நீ...".சாவித்திரி
அம்மா காட்சியில்
மனமுருகி
அம்பாள்
முன்னால்
நெகிழ்ந்து
பாடுவது....நெகிழ்ச்சி
என்று ஒரு
வார்த்தை சொல்லி
விட்டாலே
போதும்
சுசீலாம்மாவிற்கு...உருக்கி
விடுவார்
அப்படியே
மெழுகாக...
பெண்ணல்லவோ...வோ....இதிலே
முதலில்
இளக்கி இரண்டாவது
வோ வில்
உருக்கி
விடுவார்
நம்மை....தேவி....தோடியின்
சாயலை
அங்கேயே
காட்டிவிடுவார்...ராகச்
சாயை...
பொன்னோடு
பொருள்
யாவும்
இருந்தாலும்
தாயே....."....தாயே...இங்கு
ஒரு குட்டி
தோடி
ஆலாபனையே செய்து
விடுவார்..இந்தக்
கதறலுக்கு
செவி சாயாதார்
யார்???
"நான்
மின்னாத உடல்
போல
வாழ்ந்தேனம்மா..
சொன்னாலும்
புரியாத
உலகத்திலே
குறையை..சொன்னாலும்
புரியாத
உலகத்திலே
என் வாழ்வில்
உனையன்றி
துணை
ஏதம்மா..நீ
என்னைப்
போல்
பெண்ணல்லவோ?"
எல்லா
செல்வமும்
இருந்தாலும்
ஒரு பெண்ணுக்கு
கணவன் துணை
இல்லாமல்
என்ன வாழ்வு
இருக்கிறது...என்
குறையை
சொன்னாலும்
இந்த
உலகத்தில்
உள்ளவர்களுக்குப்
புரியப்
போவதில்லை...உன்னையன்றி
எனக்கு வேறு துணை
யார்
அம்மா...நீயும்
என்னைப் போல்
ஒரு பெண்ணல்லவோ..'.சொன்னாலும்
புரியாத.'...மேல்
ஸ்தாயி.....சுருதி
சுத்தம்னா
இதுதான்..'.உனையன்றி
துணையேதம்மா??'?பிசிறு
இல்லாத
துணையேதம்மா...
"மலரோடு
மணம் சேர விலை
வேண்டுமா?
மனதோடு
மனம் சேர விலை
வேண்டுமா??
மலை போன்ற
இடர் தீரக்
கதியாரம்மா??
ஜகன்மாதா
உன் அருள்
தந்து குறை
தீரம்மா...நீ...."
உன்
அருளால் என்
குறை தீரம்மா,ஜகன்மாதா....நீ......தீரம்மா...தீர...இங்கு
இறங்கி,இரக்கம்
வேண்டி....
நீ.....இங்கு
ஏறி....கதறி....ஒரு
நீ...நெடிலில்
ஒரு ராகத்தையே
கட்டிப்
போட்ட
வித்தை.....இதுதான்...
பாடல்
முழுவதும்
சாவித்திரியின்
பாவமான முகபாவம்.....சுசீலாம்மாவின்
நெகிழும்
குரல்.....ஜி.ஆரின்
திறமை.....எல்லாம்
அபாரம்...அபாரம்....ஆனந்தம்....பிடில்
மிருதங்கத்துடன்
ஒரு கச்சேரி
கேட்ட உணர்வு
பாடலில்.........இசையமைப்பாளர்
சொன்னதை
என்னால்
முடிந்த அளவு
ஒரு
ஈடுபாட்டுடன்
பாடுகிறேன்
என்று ஒரு உரையாடலில்
சொல்லி
இருந்தார்கள்
அடக்கமாக சுசீலாம்மா.....இந்த
வினயமே அவரை
அவருக்கு நிகர்
அவரே என்ற
இடத்தில்
அமர்த்தி
இருக்கிறது....10,12 வருஷம்
குருமுகமாக
இசை கற்று
பயிற்சி (அசுர
சாதகம்
செய்திருந்தாலும்)இனிமையான
குரலும்
கலைவாணியின்
பரிபூரண
அருள்
இருந்தாலேயன்றி
இப்படிப்
பட்ட கடினமான
ராகத்தை
இவ்வளவு
அனாயாசமாகப்
பாடமுடியாது
என்பது என் தாழ்மையான
கருத்து....தோடி
என்றாலே
நினைவில் நிற்கும்
பாடல்
உங்களுடன்.....https://www.youtube.com/watch?v=HociHH7_pb4