Visali Sriram

November 14, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்....74.

வரிகள் எப்படி இருந்தால் என்ன...என் குரலில் இருக்கும் தேன் கலந்து தெள்ளமுது படைப்பேன் என்று சொல்லும் பாட்டு....கொஞ்சம் விரசமான விரகமான வரிகள்....காட்சியில் லக்ஷ்மி....நடனம் கொஞ்சம் கூச வைக்கும்....ஆனாலும் தெய்வீகக் குரல் கட்டிப்போடும் நம்மை இனிமையில்....படம் 1972 இல் காசேதான் கடவுளடா....பாடல்..அவள் என்ன நினைத்தாள்?"

காட்சிப்படி நாயகி லக்ஷ்மி தன் தோழிகளுடன் ஒரு நெருக்கமான காதல் ஜோடியைக் கண்டு பாடுவதாய்ப் பாடல்...வாலியின் வரிகள் ..மெல்லிசை மன்னர் இசை...துள்ளல் பாடல்..

"அவள் என்ன நினைத்தாள்..அடிக்கடி சிரித்தாள் அவள் ஏதோ ஒரு 'மயக்கம்' கொண்டாள்...

அவன் ஏன் துடித்தான் கட்டிக் கட்டிப் பிடித்தான்...

அவன் காணாததை அணைப்பில் கண்டான்...."

மயக்கம் கண்டாள்....மயக்கம் பாடுவதைக் கேட்டாலே ஒரு ம ய க் க ம்....குரலிலேயே ...

கொண்டாள்....டாள் ....இழுத்துப்பாடி இருக்கும் விதம் மயக்கத்தின் உச்சம்...

போதாதற்கு ஓ ஓஓ ஆஹா ஆஅஹ் ஆஹ்....செடேஷனே கொடுக்காமல் ஆப்பரேஷனே பண்ணலாம்....அப்படி ஒருமயக்கம்..

"நீ கிடைத்த இடத்திலே பூ பறிக்க நினைப்பதேன்...

ஊர் சிரிக்கும் விதத்திலே நீ இழுத்துஅணைப்பதேன்...

என்கன்னிஉள்ளம் என்னவாகுமின்று நீ கட்டிக் கொண்டு காதல் செய்யக் கண்டு....

நந்தவனமே பள்ளியறையோ பச்சைப்பசும்புல் பஞ்சு மெத்தையோ...

ஓ ஓ ஓ ஓஓஹோ..ஓஓஹோ ...."

நீ.....நீண்ட நீ சொல்லும் ஏக்கம்...பூ...தொடரும் நெடில்....நினைப்பதேன்...தேனில் ஒரு தேன்சங்கதி....

இழுத்து அணைப்பதில் ஒரு வேகம்...கன்னிஉள்ளம் என்னவாகும்....ஒரு துரிதம்....நந்தவனமே பள்ளி அறையோ..ஒரு கிண்டல்....

ஓஹோ ஹோ ஓ ஹோ .....

"நீ சிரிக்கும் உதட்டிலே ஒரு வெளுப்பு இருப்பதேன்..

பால் நிறத்தில் இருப்பதேன்...கண்சிவந்து கிடப்பதேன்...

நீ வெட்கம் விட்டுப் பக்கம் வந்து நில்லு

நீ கற்றுக் கொண்ட வித்தை என்ன சொல்லு..

என்ன கலையோ என்னசுவையோ

தொட்டுத் தொடங்க தொடரும்கதையோ

ஓஹோஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ.."

வரிகள் வேறு பாடகி பாடி இருந்தால் கேட்பதற்கு கொஞ்சம் கூசத்தான் செய்யும்..

பாடலில் உள்ள டைனமிக்ஸ் மட்டும் கேட்கணும்....இதுவும் என்னால் முடியும்....அதில் ஒரு கண்ணியத்தைக் குரல் மூலம் கொண்டு வருவேன் என்று அம்மா கட்டியம் கூறி இருக்கும் பாடல்.....உங்களுடன்....https://www.youtube.com/watch?v=1CAT8gIV9W8