Visali Sriram

November 12, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..72.

பெண்ணே....உன் பெருமையே பெருமை இன்றைய பதிவு."1952 இல் ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் திரைப்படத்திலிருந்து "இளமை கொலுவிருக்கும்"...கவியரசரின் வரிகள்..மெல்லிசை மன்னர் இசை...பாடியிருப்பது சுசீலாம்மா.....சாவித்திரி அம்மாவுக்காக...இதே பாடலை ஜெமினி கணேஷ் அவர்களுக்காக பி.பி ஸ்ரீனிவாசும் படி இருக்கிறார்...ஆனால் இனிமை இதில் கொஞ்சம் தூக்கலாக......பின்னணி இசைக்கருவிகளின் மென்மைக்குத தன்னால் மேன்மை சேர்க்க இயலும் என்று அம்மா உணர்த்தி இருக்கும் பாடல்...குழலும்,மாண்டலினும்,வயலினும் இனிமையை வாரி வழங்கி இருக்கும் பின்னணி இசைப் பாடல்...

சாவித்திரி அம்மா பாடுவதாகக் காட்சி...எளிமையான அழகு...ஆரம்பமே ஓஓஓஓஓ...........ஓஹோ...என்றால்....ஒரு சின்ன பிட் ஓஓஓ......ஓஹோஓஹோ....இனிமை இனிமை அப்படி ஒரு இனிமை..

"இளமைக் கொலுவிருக்கும் இனிமை சுகமிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே....

பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே..."..இதுதான் பல்லவி..

"அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ...

அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ..

கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்

இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ

பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ..."

தாயல்லவோ...தாயில் ஒரு குட்டி சங்கதி..வோ வில் ஒரு நெடில்..

பெண்ணல்லவோ...அதை சொல்வதில் ஒரு குறும்பு...

சீதனப் பரிசல்லவோ..அதில் ஒரு பெருமிதம்....ஒவ்வொரு வரிக்குள்ளும் ஓராயிரம் விஷயங்களை ஒளித்துப் பாடியிருக்கும் அழகு....பார்க்க பார்க்க ...கேட்க கேட்க.....ஆனந்தம்...

"பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா?

பூவைக்கு மாலையிடும் மணம் வருமா?

இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?

எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா???"

உருண்டோடும் பணம் காசு நிலையில்லை...என்றும் சிரித்தபடி அமுதிடும் பெண்மைக்கு நிகர் எதுவுமில்லை....உறுதியான வரிகள்...

மொழி சொல்லுமா??ஆ ஆ ....

பூவைக்கு மாலையிடும்......மாலை இடும் ,இரண்டாம் முறை பாடும் போது இடம் விட்டுப் பாடி இருக்கும் நயம்...

சிரித்தபடி அமுதிடுமா?..கேலி கொப்பளிக்க...

சுகம் தருமா?அழுத்தமாக தருமா?.....வார்தைகளுக்கு அழகு சேர்க்கும் படி பாடும் கலையை இவரிடமிருந்துதான் கற்றுக் கொள்ளவேண்டும்.....சாவித்திரியின் குறும்பு சிரிப்பு பாடல் முழுவதும் மனதை வருடிக் கொடுக்கும் என்றால் அம்மாவின் பாடல் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும்......எத்தனை பேர் இந்தப் பாடலைக் கேட்டிருப்பார்கள் என்று தெரியாது....பி.பி.ஸ் பாடல் மிகவும் பிரபலம்...கேட்டிராதவர்கள் கண்டிப்பாகக் கேட்கவே இந்தப் பதிவு......நான் தொடர்கிறேன் உங்களோடு....https://www.youtube.com/watch?v=l_04ZN_p8Hw