Visali Sriram

November 10, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்.70..

இத்தனை நாள் இந்தப் பாடல் பதியப் படாததன் காரணம் என்ன??நெஞ்சைப் பிழியும் சோகம்தான் ....சில பாடல்கள் அம்மா பாடியது.....ரொம்பப் பிடித்திருதாலும் பின் தொடர்ந்து செல்வதில் ஒரு தயக்கம்...காரணம் அதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே என்னைப் பாதிக்கும் என்கிற சுயநலம்தான்..

இந்தப் படமாகட்டும்..பாடலாகட்டும்...தமிழில் என்னைக் கவர்ந்த அளவிற்கு பிற மொழிகளில் கவரவில்லை...பாடல் "கண்ணா கருமை நிறக் கண்ணா"விஜயகுமாரி காட்சியில் வாழ்ந்திருந்தார் என்றால் அதற்கு முழு காரணம் அம்மாவே....கண்ணன் பாடல்கள் பாடும்போது அம்மா மீரா ஆகிவிடுவார்...அப்படி ஒரு ஈடுபாடு...

தான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மை அவளுக்கு மட்டுமில்லை...அவள் புகுந்த வீட்டில் முக்கியமாக மாமனாரின் வெறுப்பு அவள் நிறத்தில்.....என்ன செய்வாள் பேதை...அன்பான கணவன் ஆனாலும் வயதில் பெரியவர்,மாமனார் தன்னைப் பார்க்கக் கூட விரும்பாதது அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை...புழுங்கும் நெஞ்சத்துடன் வாசலில் காற்றாட நின்றுகொண்டிருக்கும் கண்ணன் பொம்மையிடம் தன் குமுறலை வெடித்துச் சிதறுகிறாள் பாடலாக....கதறுகிறாள்.....

"கண்ணா.....கருமை நிறக் கண்ணா....உன்னைக் காணாத கண்ணில்லையே...உன்னை மறுப்பாரில்லைக் கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை.."கவியரசரின் வரிகள்...சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில் பாடல் உங்களுடன்...

"கண்ணா...அந்த ஓலம் கோகுலத்தில் இருக்கும் மாயக்கண்ணனைக் கண்டிப்பாகக் கட்டி இழுத்திருக்கும்...அப்படி ஒரு ஓலம் இனிமை இம்மியும் குறையாமல்....உன்னைக் காணாத கண்ணில்லையே....இப்படி நிறுத்தியவுடன் நாம் என்ன செய்வோம்....அடுத்து என்ன வரப் போகிறதோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்போம்..."உன்னை மறுப்பாரில்லைக் கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை"இந்த வரிகளைக் கேட்டதும் ஆடித்தான் போவோம்...ஆண்டவனிடமன்றி அவள் குறையை யாரிடம் சொல்ல முடியும்...அதற்கு வக்கீலா வைக்க முடியும்....நிறம் தான் கறுப்பு....அவள் மனம் வெள்ளை....தனக்குத் தானே வாதாடுகிறாள்...கண்ணனிடம்...

கண் இல்லையே....நிறுத்தும் லேன்டிங் நோட்ஸ்.....அக்மார்க் சுசீலாம்மா...

"மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா..நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா..

இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய்க் கண்ணா.....

நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய்க் கண்ணா..."

எளிய வரிகள்...என்னை நீ கொண்டு வந்து சேர்த்திருக்கும் இடம் எப்படிப் பட்டது....கறுப்பு நிறம் பார்த்து என்னை வெறுக்கும் இவர்கள் என் வெள்ளை மனதைப் புரிந்து கொள்ளவில்லை...இப்படிப்பட்ட இடத்தில் என்னை சேர்த்துவிட்டு இங்கேயே நீ சிலையாக நின்று கொண்டிருக்கிறாயே இது என்ன ஞாயம்????அதை பாடலில் கேட்கும் போது வரிகளின் வலிமை...அப்பப்பா.....சொல்ல வார்த்தையில்லை...

அடுத்த சரணம் என்னை மிகவும் கவர்ந்தது.....அடிக்கடி நானே

கேட்டுக்கொள்வது...

"பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா

அதில் பூ போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா..

கண் பார்க்க முடியாமல் மறைத்தாய்க் கண்ணா...

எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா...."

நல்ல மனம் கொடுத்தாய்...அதில் நல்லதையே நினைக்க வைத்தாய்..ஆனால் அது பிறர் கண்களுக்குத் தெரியாதபடி செய்து விட்டாயே?எந்தப் பிறவிக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கண்ணா....இதைத் திரைப் படத்தில் மறைந்து பார்த்துக் கொண்டிருக்கும் மாமனார் ரங்காராவ் மனமிளகுவதாய்க் காட்சி.....அதற்கு அம்மாவின் குரல் ஒரு முக்கியமான காரணம்....என்னை நீ....இப்படிக் கேட்கும் போது கல்லும் கரையும் அந்தக் குரலின் குழைவில்....

பாடல் முழுவதும் சுசீலாம்மாவின் அரசாட்சிதான்....விஜயகுமாரி என்னதான் சோகத்தைப் பிழிந்து நடித்திருந்தாலும் தன் குரலால் அதை நனைத்த பெருமை அம்மாவையே சேரும்.....இன்னும் எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் அருவியாகத் தான் பொழிகிறது......அழுகைக்குப் பயந்தால் இனிமை கிடைக்காதே.....தொடர்கிறேன்....பாடலை...http://www.youtube.com/watch?v=xO1RW80P8YU