பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்...69.
1974 இல்
வெளிவந்த
"அக்கரைப்
பச்சை"திரைப்
படத்திலிருந்து
ஒரு
பாடல்.கவியரசர்..மெல்லிசை
மன்னர்..சுசீலாம்மா...மூவரணி...
மென்மையான
பெண்மையான
ஒரு
பாடல்...தமிழ்
கொஞ்சி
விளையாடும்
பாடல்.காதலில்
ஊறித் திளைத்த
நாயகி அதை அணு
அணுவாக
ரசித்து
விஸ்தாரமாகக்
கற்பனையில்
சஞ்சரிக்கும்
பாடல்....பிண்ணனி
இசை மிக
மென்மையாக
அம்மாவுக்குத்
துணை
போயிருக்கும்...
"ஆ ஆ ஆ ஆ
...."ஆரம்பமே
ஆஹா..
"பொதிகை
மலை சந்தனமே,
பூஜை
செய்யும்
மந்திரமே,
மதுரை
நகர்
வீதியிலே
வளைய
வரும்
இளங்காற்றே"..இது
பல்லவி...இங்கு
கவியரசரைப்
பற்றி
சொல்லியே ஆக
வேண்டும்...
ரசித்து
எழுதிய
சந்தம்..'பொதிகை மலை
சந்தனம்..பூஜை
செய்யும்
மந்திரம்
மதுரை
நகர் வீதி
வளைய
வரும்
இளங்காற்று...
மதுரை
நகர் மீது
கவியரசருக்கு
என்ன அத்தனை ஈடுபாடு?அவர்
பிறந்தது
செட்டி
நாடு...தமிழ்
சங்கம் தோன்றியதாலா??அன்னை
மீனாளின்
பால் உள்ள
பற்றா???
பல
பாடல்களில்
மதுரை நகர்
புகழ் பரவி
நிற்கும்..."வளர்
பொதிகை மலைத்
தோன்றி..மதுரை
நகர் கண்டு
பொலிந்த
தமிழ்
மன்றமே"...."மதுரா
நகரில் தமிழ்
சங்கம்"...செம்மதுரை
மீனாள் தேன்
கொடுத்தாள்"....பொதிகை
மலை
உச்சியிலே"...இப்படி
சொல்லிக்
கொண்டே
போகலாம்...
மதுரை
நகர்
வீதியிலே....இரண்டாம்
முறை பாடும்
போது
வீதியிலே...இங்கு
ஒரு சரட்
சங்கதி...அம்மாவின்...அருமை.
..வளைய
வரும்
இளங்காற்றே....வளைய
வருதல்
என்பது பேச்சு
வழக்கு....உலா
வரும் என்று
எழுதி இருக்கலாமே....சந்தத்திற்காகவோ...சிந்திற்காகவோ???மொத்தத்தில்
அது தனி
அழகு...அதிலும்
அந்த காற்றே
என்று
இழுத்து
காற்றை
சுவாசிக்க
வைத்திருக்கும்
அம்மா...
சரணம்..1
"மாலையில்
ஆடிடும்
மலர்கள்
இரண்டு ஒரு
மலர் நானாவேன்..
மங்கலச்
சங்கொலி
பொங்கிடும்
இசையில் மணமகள்
நானாவேன்..
பஞ்சணையில்
உன்னைக்
கொஞ்சுகையில்
பசும்பாலினில்
பழமாவேன்..
இசைப்
பண்ணொளி
காக்கும்
மென்மொழியில்
தமிழ்
வீணையைப்
போலாவேன்......"இந்த
சரணம்
பாடுவது
கடினமே..ஆனால்...அம்மாவுக்கல்ல!...பல்லை
உடைக்கும்
சொற்கள்..லை...கள்..ண்டு...மங்கலம்,மணமகள்,பஞ்சணை,கொஞ்சு...பழம்...பண்ணொளி..மென்மொழி..வீணை...தமிழ்ப்
புலவர்கள்
கூட
சமயத்தில்
தடுமாறும்
சொற்கள்...சிறிதும்
பிழை
இல்லாமல்
இசையோடு
இணந்து
இசைக்க இவரன்றி
வேறு யார்
உளர் இங்கு...
2 சரணம்..
"கங்கையைப்
போலொரு
புண்ணிய
நதியில்
காதலில் நீ
ஆட..
கண்ணனின்
ஆலயக் கலசம்
இரண்டும்
காவியக் கவி
பாட
கைவளையும்
இரு
மைவிழியும்
அந்தக்
கலையினில்
அரங்கேற
இளம்
கன்னி மகள்
இவள்
பெண்ணழகு விளையாடட்டும்
மெதுவாக..."
கற்பனைக்கு
கூச்சம்
ஏது...அவளிஷ்டம்
போல் .....அம்மா
இல்லாமல்
வேறு யாராவது
பாடி
இருந்தால்
இத்தனை
கண்ணியம்
இங்கு
காக்கப்
பட்டிருக்குமா???சந்தேகம்தான்...குரலில்
ஒரு
தெய்வீகம்...நம்மை
அதிலேயே
லயிக்க
செய்து
விடுவதும்
ஒரு காரணம்...
வீணையைப்
போலாவேன்.....ஆவேன்
என்று
முடிக்கும்
சங்கதி...
விளையாடட்டும்
மெதுவாக....மெதுவாக....இங்கு
ஒரு கொஞ்சும்
சங்கதி...ஆஹா...பாடலின்
தரத்தை எங்கேயோ
கொண்டு
நிறுத்தி
விடுவார்
தேன் குரலால்...
பாடல்
முடிந்த
பிறகும் அந்த
இறுதி
வரிகளின்
இசைக் கோலம்
நம்மைக்
கட்டி இழுக்க
மீண்டும்
மீண்டும்
பாடலைக்
கேட்கத் தூண்டுவது
நிஜம்....தொடர்ந்து
கேட்டுக்
கொண்டே...உங்களுடன்.... https://www.youtube.com/watch?v=olTRbk-T8Ho