Visali Sriram

November 8, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...68.

"ஆரிராரிராரிரோ...ஆரிரரிராரிரோ....

அம்மாவின் ஆராரோ.....அநேகம் பாடல்கள்...அத்தனையும் சிறப்புப் பாடல்கள்.இந்தப் பாடல் அதற்கு சிகரம்...இயக்குனர் சிகரம் அவர்களின் கண்ணா நலமா"படப் பாடல்...."நான் கேட்டேன் அவன் தந்தான் "...தாலாட்டும் தாயானே..நாள் பார்த்து ஊர்சேர்த்துப் பேர் சூட்டும் தாயானேன்...அவனின்றி இவனில்லை என் நன்றி தலைவனுக்கே"காட்சியில் ஜெயந்தி கையில் பிள்ளையுடன்....கணவன் ஜெமினி கணேஷ் அவர்கள்...

ஜெயந்தியின் நடிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?காத்திருந்த தாய்மை பூத்துக் கனியாகக் கையில்.....உணர்வு பூர்வமாக கவியரசரின் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் இசை...உணர்சி பொங்க பாடி இருப்பது சுசீலா அம்மா...

குழந்தைக்குப் பேர் சூட்டும் விழாவில் தொடங்கி அவன் பள்ளிக்குச் சென்று திரும்பும் வரை பாடலில்...

குழந்தை எப்படி இருக்கிறான்???

"மானின் நிழல் மேனியும் மஞ்சள் வெய்யில் சாயலும் ...கோவில் போலத் தோற்றமும் கொண்டான் எங்கள் கண்ணனே,,,ொண்டான் எங்கள் கண்ணனே..."

அமைதியாக பாடிக் கொண்டே வந்தவர்கள் அடுத்த வரியில் ஒரு உச்சத்துக்கே நம்மை அழைத்து சென்றுவிடுவார்கள் குரலால்...

"ஆடாயோ ...ஆடாயோ கண்ணா என் நெஞ்சில் பொன்னூஞ்சல்....தேடாயோ மன்னா நீ என் நெஞ்சில் பூ மஞ்சம்"ஆடாயோ...என்று மேல்ஸ்தாயியில்...தொடரும் இன்னொரு ஆடாயோ ஆஹா.....சற்று இறங்கி என் நெஞ்சில் பூ மஞ்சம்....அருமை அருமை

நான் கேட்டேன் அவந்தந்தான் தாலாட்டும் தாயானேன்...

குழந்தையை குளிப்பாட்டி பொட்டு வைத்து சாப்பாடு ஊட்டி முடித்தாயிற்று...பிள்ளை விளையாடுகிறான்...எதோடு?...கோலமாவுடன்...

அடுத்த சரணம்..

"ஆயர் குலக் கண்ணனால் அன்னைப் பெறும் சோதனை ..

எங்கள் இந்தக் கண்ணனால் நானும் கண்ட சாதனை"

மகனைக் கண்ணனாகவும் தன்னை யசோதையாகவுமே பாவித்துக் கொள்கிறாள்..

"கொண்டாடு.......கொண்டாடு அன்னை நான் நின்றாடும் செல்வம் நீ

வந்தாடும் பூந்தென்றல் என்னாளும் என் இல்லம்"...

மகன் வளர வளர கொண்டாடும் அன்னை...இனிமையை இங்கே கொண்டாடியே ஆகவேண்டும்....கொண்டாடு...என்று நிறுத்துவதாகட்டும்....அடுத்த கொண்டாடுவை எடுப்பதாகட்டும்...கேட்கத் தான் முடியுமே தவிர(பாக்கியம் இருந்தால்)அது பற்றி சொல்ல மொழியே இல்லை..

மகனின் வருகையால் அந்த வீட்டின் நிரந்தர விருந்தாளி பூந்தென்றல்...கவியரசர்...

நான் கேட்டேன்....மயங்கி விட்டேன்....நீங்களும் கேளுங்களேன்....பாடல் உங்களோடு...https://www.youtube.com/watch?v=AzX2qah0ij0