பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்..67
இந்தப்
பாடலைத்
தொடர்ந்தே
செல்வதற்குக்
காரணம்.....கவியரசர்,மெல்லிசை
மன்னர்கள்,சுசீலாம்மா,சாவித்திரி
அம்மா,குழந்தைக்
கமலஹாஸன்...இவர்களோடு
பாடல் இறுதியில்
ஒரு நொடியே
வந்தாலும்
நெஞ்சமெல்லாம்
நிறைந்து
நிற்கும்
நடிகர்
திலகம்.
எட்டு
வயதில்
இந்தத்
திரைப்படத்தில்
நடிகர்
திலகம்
நடிகையர்
திலகம்
தூக்கிக் கொஞ்சிய
இந்த
அதிர்ஷ்டக்
குழந்தைக்கு
இன்று 60 வயது....அவரின்
ஒவ்வொரு
அசைவிலும்
இந்தக் நடிப்புப்
பல்கலைகழகங்களின்
சாயல்
இருப்பதால்
தான் அவர்
உலகநாயகன்
ஆகினாரோ???பிறந்த
நாள்
வாழ்த்துக்களுடன்...பாடலைத்
தொடர்கிறேன்...
இதே பாடல்
முதலில்
அம்மாவும்
திரு.ஏ.எல்.ராகவன்
அவர்களும்
பாடும் டூயட்
பாடல்...அதுவும்
ஹிட் பாடலே
என்றாலும்
அம்மா பாடி
இருக்கும்
இந்தத் தனிப்
பாடல்...காட்சி
வேறு,வரிகள்
வேறு....பாடினவரும்
மெட்டும்
ஒன்றே....எத்தனை
வித்தியாசம்
இந்தக்
குரலில்..எத்தனை
பாவங்கள்....சாவித்திரி
அம்மாவுக்கு
கண்பறிபோய்
விடுகிறது...பிரிந்த
கணவனைத்
தேடித் தன்
மகனைக் கூட்டிக்
கொண்டு
இந்தியா
வந்தவர்,கணவனோடு
நண்பர்,தான்
சகோதரனாகப்
பாவிக்கும்
நடிகர் திலகத்தை
சந்தித்து,அவருடனேயே
தங்கி
விடுகிறார்,தங்கையாக...
நடிகர்
திலகம் வேலை
தேடிப் போன
இடத்தில் நண்பனை
சந்தித்து
அவன் மூலம்
ஒரு வேலையும்
பெறுகிறார்..வீட்டிற்கு
வந்து
தங்கையிடம் சொல்கிறார்...நடிகர்
திலகத்துக்கு
அப்போது ஜெமினி
கணேஷுக்கு
மறுமணம் ஆனது,அவருக்குக்
குழந்தை கூட
இருப்பது
தெரியாது...
இந்த
நிலையில்
இந்தப்
பாடல்..
கணவன்
உயிரோடு
இருக்கிறான்...அவனை
சந்திக்கப்
போகிறோம்
என்ற
மகிழ்சியில்
அவனோடு
முதலில்
பாடிய பாடலை
நினைவு
கூறும் முகமாக"அன்று
ஊமைப்
பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ".."அய்யா
உனக்காக
உயிர் வாழும்
பெண்ணல்லோ"..
ஓடிச்
சென்று
தடவிப்
பார்த்துக்
குங்கும் இட்டுக்
கொள்ளும்
நேர்த்தி
சாவித்திரி
அம்மாவின்
கீர்த்தி
என்றால்..குரலில்
அந்த சந்தோஷத்தை
இனிமையோடு
வாரி வழங்கி
இருப்பது சுசீலாம்மாவின்
மேன்மை...."மஞ்சள்
பூசி மாலை அணிந்து
வாழ வந்த
பெண்ணல்லோ..குங்குமப்
பொட்டு நெற்றியில்
இட்டுக்
கொஞ்சும்
காதல் கண்ணல்லோ"....இந்த
வரிகளுக்கு
வாழ்வு
கொடுத்திருப்பார்கள்
அம்மாவும்
சாவித்திரி
அம்மாவும்...
கணவனை
சந்திக்கப்
போவதைக்
கூவிப்
பாடும் குயிலாக.."கன்னிப்
பெண்ணைத்
தேடி தெய்வம்
வந்தல்லொ..கண்கள்
இல்லை
என்றேன்
கண்கள் தந்தல்லோ..கையிரண்டில்
என்னை
அள்ளிக்
கொண்டல்லோ??காலம்
வரும் என்றே
சொல்லிச்
சென்றல்லோ..."..இதெல்லாம்
நடந்த கதை
நமக்கு
சொல்வது..."கண்கள்
இல்லை
யென்றேன்"..அப்போது
அவருக்குக்
கண்
இருந்ததே...நம்
மனதில் எழும்
கேள்விக்கு
கவியரசர்
சொல்ல வருவது"அப்போது
அவளுக்கு
படிப்பறிவு
இல்லை...அன்று
அவளுக்கு ஆனா
ஆவான்னா...சொல்லித்தந்து
எழுத்தறிவித்தவனாக
கண்
தந்தவனாகக்கணவனை
சொல்வது என்று
பொருள்
கொள்ளவேண்டியது...
"கையிரண்டில்
என்னை
அள்ளிகொண்டல்லோ..காலம்
வரும் என்றே
சொல்லிச்
சென்றல்லோ..."என்
அறிவுக்
கண்ணைத்
திறந்தவர்
என் மீது காதல்
கொண்டு என்னை
அள்ளி
ஏற்றுக்
கொண்டுக் காலம்
வரும் நாம்
இனிதே வாழ
என்று
சொல்லிச் சென்றார்..
இனி இன்றைய
நிலை..."காத்திருந்ததாலே
காதல் தந்த
தெய்வம் இன்று
என்னைத் தேடி
இங்கே
வந்தல்லோ....
காலம்
வரும் என்றே
சொல்லிச்
சென்றல்லோ.....சென்றதில்
இழுத்துச்
சொல்லும்
சொல்லல்லோ..இன்று
என்னைத் தேடி
இங்கு
வந்தல்லோ.....இதைப்
பாடும் போது
அந்தக்
குரலில்
தெறிக்கும்
நம்பிக்கை...
அங்கு
வரும்
குழந்தைக்
கமலஹாசன்...அவரை
வைத்துக் கொண்டு
அடுத்த
சரணம்...அவர்
வந்த
கதை"மங்கை எந்தன்
காதல் வாழும்
உன்னாலே..மழலைப்
பேசும் பிள்ளை
வரவும்
உன்னாலே..
பெண்மை
இன்று பேசும்
வார்த்தை
உன்னாலே..
கண்ணில்லாத
போதும்
காட்சி
உன்னாலே..
காலம்
வரும் போகும்
காதல் என்றும்
வாழும்..
பெண்மை
சொல்லும்
உண்மைக்
கண்டேன்
உன்னாலே"....ஒவ்வொரு
வார்த்தையும்
எளிய தமிழில்
நடந்தது
பற்றி...வாழும்
காதல்
பற்றியது...குழந்தையைத்
தோளில் உப்பு
மூட்டையாய்
தூக்கிக் கொண்டு...ஆடும்
லாவகம்
சாவித்திரி
அம்மா...விளையும்
பயிர்
முளையிலெயே
தெரியும்
விழிகளுடன்
குட்டிக்
கமல்....தாய்,மகனின்
உணர்வுகளையும்
சந்தோஷத்தையும்
குரலிலெயே
ஜாலம் காட்டி
இருக்கும்
அம்மா....கண்ணில்லாத
போதும்
காட்சி
உன்னாலே...இந்த
இடத்தில்
என்ன ஒரு
உணர்ச்சி
குரலில்...காதல்
என்றும்
வாழும்....அதில்
ஒரு
அழுத்தம்...
இத்துடன்
பாடல்
முடிந்தாலும்
தொடரும்
பிஜிஎம்.....அதற்குத்
தக்கவாறு
சாவித்திரி
அம்மாவின்
ஸ்டெப்ஸ்....கமலின்
தலை அசைவு,காலை
இழுத்து
இழுத்து
வேகமான
நடிகர் திலகத்தின்
நடை.......காலம்
எத்தனை
ஆனாலும்
மாறாத மறையாத
அற்புதக்
காட்சி....அழியாப்
பாடல்......தொடர்ந்து
கொண்டே
இருக்கிறேன்.....உங்களோடு
இங்கும்....https://www.youtube.com/watch?v=vo2GLz4JHh8