Visali Sriram

December 10, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்......100...

100 என்பது அம்மாவுக்கு ஒரு எண்ணிக்கை இல்லை....எனக்கு ஒரு பெரிய விஷயம்....பாடல் எல்லாமே தித்திக்கும் முத்துக்கள்....அதில் எதை எடுப்பது எதை விடுவது?தேர்வு செய்வது ஒரு பெரிய பரீட்சை....அதில் பாஸ் மார்க் வாங்கி இருப்பேன் என்று நம்பிக்கை...பாடலை ஏற்கனவே பலமுறை கேட்டிருந்தாலும் பகிரும் போது கூடியவரை பிழையில்லாமல் பகிரணும்...பிறர் பாராட்டா விட்டாலும்....பிழையில்லாமல் இருக்க வேண்டுமே ...உள்ளுர பயம்தான்....ஒரு பெரிய லெஜண்ட்...அவருடன் பல ஜாம்பவான்கள்....அவர்களைப் பற்றி எழுதும் போது ஒரு பக்தியோடு..(நம்பினால் நம்புங்கள்)..ஒவ்வொரு பாடலுக்கும் 2 நாளாகும்...ஆனாலும் அதை எழுதாமல் உறக்கம் வருவதில்லை....என்னை யாரும் வற்புறுத்துவதில்லை...எழுத வாய்ப்புக் கொடுத்ததற்கே கோடி நன்றிகள்...

ஒரு பாடல் கவியரசர் எழுதி முடித்து மெல்லிசை மன்னர் 3 மாதம் நேரம் எடுத்துக் கொண்ட பாடல்,இசையமைக்க......அதன் சிறப்பு எப்படி இருக்கும்.....காலத்தால் அழிக்க முடியாத மறக்க முடியாத பாடலாகத் தானே இருக்கும்.....அந்தப் பாடல் இன்றைய 100 வது பாடலாகப் பகிர்வு....

பாடலுக்கு வயது 51....இன்றுவரை இந்தப் பாடலை சுசீலாம்மா தவிர யாரும் ஒரு வரி கூட

சரியாகப் பாடவில்லை....பெரிய பின்னணிப் பாடகிகள் எல்லோரும் முயற்சி செய்து சொதப்பிய பாடல்....அவர்கள் மீது குறையில்லை...பாடலும்...பாடியவரும் தனி ரகம்..தன்னிகரில்லா ராகம்....தணியாத மோகம் எனக்கு இந்தப் பாடல் மீது....

பாடல் ஒரு காதலி பாடும் காதல் பாடல் என்றாலும் அதில் என்னவோ ஒரு அமானுஷ்யம் உணர முடியும்.....கதைக்கு ஒரு முன்னுரையாய்...

பாடல் ஆரம்பமே சுசீலாம்மாவின் நெஞ்சைத் துளைக்கும் ஹம்மிங்....நீளமான ஹம்மிங்....மூச்சு எடுக்க நேரமில்லாத லாங் ஸ்ட்டெரிட்ச் ஹம்மிங்....ஆ..ஆ.ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..அ ,,அ அ..அ,,,,,, ,,,,,,,ஆ....ஒரு குயில் கூவல் அதை கேட்டு...

தொடரும் சிதார்....மாண்டொலின்....தபலா...

"நெஞ்சம் மறப்பதில்ல்லை..அது நினைவை இழப்பதில்லை..நான்

காத்திருந்தேன்..உன்னைப் பார்த்திருந்தேன்..

கண்களும் மூடவில்லை.என் கண்களும் மூடவில்லை..."

ஹம்மிங் முடிந்ததும் தொடரும் பாடல் வரிகள்...தேவிகா தன் காதலனைப் பார்க்க வந்திருக்கிறார்.அவரைக் கூவி அழைத்ததும் ஓடி வருகிறார் கல்யாண்குமார்.அவரை பார்த்த சந்தோஷத்தில் பாடல் ஆரம்பம்...பாடல் வரிகள் கவியரசர்....இசை மெல்லிசைமன்னர்.கவியரசரின் வரிகளில் ஏதோ ஒரு அமானுஷ்யம் ஒலிக்கிறது...

காதல் பாடல்....அதில் என்ன அமானுஷ்யம்???நெஞ்சம் மறக்கவில்லை...அது நினைவை இழக்கவில்லை என்று சொல்லி இருக்கலாமே....ஏன் நெஞ்சம் மறப்பதில்லை..அது நினைவை இழப்பதில்லை...என்கிறார்....பின்னாலே வரப் போகும் கதைக்கு இது ஒரு முன்னுரையாக இருக்கலாமோ???

ப்ரிமோனிஷன் (premonition) என்று இதைஆங்கிலத்தில் சொல்வார்கள்....

நெஞ்சம் மறப்பதில்லை,அது நினைவை இழக்கவில்லை...

நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை...என்..கண்களும் மூடவில்லை....

காதலன் வந்து நெஞ்சிற்குள் புகுந்து கொண்டு விட்டான்....அவன் நினைவை அவளால் மறக்க முடியவில்லை...பாடப் பாட அவனும் வந்து விடுகிறான்...நான் உனக்காகக் காத்திருந்தேன்...உன் வரவை எதிர்பார்த்து பார்த்து என் கண்கள் மூட மறுப்பதால் கண்களும் மூடவில்லை...

பாடல் காதல் பாடல்,காதலனும் எதிரில் இருக்கிறான்....ஆனாலும் குரலில் ஏதோ ஒரு சோகம்...எல்லமே மேல் பிரயோகங்கள்...நெஞ்சம் மறப்பதில்லை.....நினைவை இழக்கவில்லை.....இனிமையின் ஊடே ஒரு நெகிழ்ச்சி...நான்.....நானில் ஒரு அழுத்தம்... காத்திருந்தேனில்... ஒரு தவிப்பு...உன்னைப் பார்த்திருந்தேன்.........எதிர்பார்ப்பு....கண்களும் மூடவில்லை.......மூடவில்லை....அதில் ஒரு தாபம்....'என்"...இதில் ஒரு உறுதி....கண்களும் மூடவில்லை....முயன்று தோற்ற அனுபவம்...

உன்னை.....உன்...னை...இந்த உன்னை சொல்லும் ஒரு கோடிக் காதல்....பார்த்திருந்தேன்......பா ஆர் த்திருந்தேன்...தேடும் பார்வை....அதைத் தொட்டுக் காட்டும் ஒரு சங்கதி...

"காலங்கள் தோறும் உன் மடி தேடிக் கலங்கும் என் மனமே

வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும் நான் காண்பதும் உன் முகமே...

நான் காண்பதும் உன் முகமே...."

ஒவ்வொரு வரியிலும் அடித்தட்டில் ஒரு சோகம் இழையோடும்...எப்போதும் உன்மடி தேடும் என் மனம்....கலங்கும்...கலக்கம் ஏன்?அதுவே நெருடல்...வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும் நான் காண்பதும் உன் நினைவே....நான் காண்பதும் உன் நினைவே...கனவினில் உன் நினைவே ...அது சரி....வரும் காற்றினிலும்....அதுவும் ஒரு ?...காலங்கள் தோறும்...பாடி இருக்கும் நேர்த்தி...அதில் ஒரு சுருதி சுத்தம்....உன்....உன்னில் ஒரு கெஞ்சல்...கலங்கும்...குரலிலேயே கலக்கம் கலந்து....மனமே...மன மே..ஏ ஏ

....அந்த இழுப்பு ஒரு நெஞ்சைத் துளைக்கும் மனமே..

வரும் காற்று ...சரி...அதென்ன பெருங்கனவு.....நீண்ட கனவு....மகிழ்ச்சி...பெருங்கனவு.....கொஞ்சம் பயம் தான்....நான்....அந்த நான்....அவளின் நிலை...அதை பாடி இருக்கும் அழகு சொல்லும் அவளின் நிலை...காண்பதும் உன் முகமே....உன்னையன்றி வேறு எந்த முகமும் என் நினைவில் இல்லை...அதுதான் அந்த நான்...காண்பதும் உன் முகமே....பாடலைக் கேட்டு காட்சியை யூகிக்கிற இந்த அதிசயம்....இந்தக் குரலுக்கு மட்டுமே சொந்தம்...

இங்கே பின்னணி இசையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்....வயலின்கள்,தபலா....மொராகொஸ்.....அதன் வேகம்....காட்சிக்குத் துணை சேர்க்கும்...

"தாமரை மலரில் மனதினை எடுத்துத் தனியே வைத்திருந்தேன்...

ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை....கண்ணில்...

தூக்கம் பிடிக்கவில்லை...."

இந்த சரணம் இன்னும் புதிர்....மனதை எடுத்து தனியே தாமரை மலரில் வைக்க வேண்டியதன் காரணம்????மனதை அவனிடம் கொடுத்திருக்கலாம்..தொலைத்தேன் என்று சொல்லலாம்....எதற்கு தனியே எடுத்து வைக்க வேண்டும்....பின்னால் இவர்கள் இருவரும் மறு ஜென்மம் எடுத்து இணைவதுதான் கதை....அதனால் ஒரு வேளை உயிரை பத்திரமாக தாமரை மலரில் வைத்திருந்தேன்...உன்னிடமிருந்து ஒரு தூதும் இல்லை...நீயும் வரவில்லை...அதனால் என் கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை...கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை...

எங்கோ ஏதோ இடறும் உணர்விலேயே இந்தப் பாடல் ஒலிக்கும்...பாடி இருக்கும் விதத்தில் இழையோடும் ஒரு சோகம் மனத்தை மிரட்டும்....அப்படி ஒரு உணர்வை பரிபூரணமாகக் கொண்டு வர சுசீலாம்மா என்ன ஜாலம் செய்தாரோ....இது ஒரு காதல் மெலடி....அதை (haunting melody) ஹான்டிங் மெலடி யாக இசைத்திருப்பார்கள்...

இந்த இடத்தில் மெல்லிசை மன்னரைப் பற்றி சொல்ல வேண்டும்....ஒரு பாடல் கம்போசிங் செய்வதற்கு அவர் 3 மாதம் அவகாசம் எடுத்துக் கொண்டதின் காரணம்...இப்படி ஒரு இதயம் பிளக்கும் பாடல் பிறக்க .....இதை எண்ணும் போது....இவரை நம் நெஞ்சம் மறப்பதில்லை...

வரிகளில் வலி வைத்து...வலியை மறக்கும் மாய சர்க்கரையை அதில் குழைத்து வடித்திருக்கும் கவியரசரை நம் நெஞ்சம் மறப்பதில்லை...

இப்படி ஒரு பாடலிலேயே..படத்தின் கதையை நம்மை யூகிக்க விட்டிருக்கும்

இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை நெஞ்சம் மறப்பதில்லை...

காட்சியில் உதடுகளில் சிரிப்பைக் காட்டி கண்களில் ஏதோ ஒரு மிரட்சியைக் கூட்டி நம்மை சுண்டி இழுக்கும் தேவிகாவை நெஞ்சம் மறப்பதில்லை...

இவை எல்லாவற்றையும் தன் குரலில் உள்ள தேனை எல்லாம் மொத்தமாக வடித்து எடுத்து வார்த்தகளை உயிர்ப்பித்து நம்மை இன்று வரை தொடர வைத்திருக்கும் அம்மா...இசைவாணி...கானசரஸ்வதி சுசீலாம்மாவை நம் நெஞ்சம் என்னாளும் மறப்பதில்லை....மறக்க சாத்தியம் இல்லை...

.காலங்கள் தோறும் உன் குரல் தேடி

ஏங்கும்.....(விசாலியாகிய என்) என் மனமே......என்று சொல்லி பாடலை உங்களுடன் பகிர்கிறேன்....https://www.youtube.com/watch?v=NdnCxcEderU.......

இதே பாடலை திருமதி சித்ரா அவர்கள் பாடி இருக்கும் ஒரு காணொளியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=NdFZhp5zFLI

..இருவரையும் ஒப்பிடுவது என் நோக்கமில்லை....அம்மாவின் ஒரு தனித்துவம்...அதை நீங்கள் உணர....அவரை மாதிரிப் பாட வேண்டாம்....அந்த தனித்துவம் கெடாமல் பாடுவது நாம் அவருக்குத் தரும் மரியாதை என்பது என் கருத்து...

குரல் ஆண்டவன் அவருக்கு அளித்த கொடை...பிட்சிங் அவருக்கு தந்த பாக்கியம்...டிக்க்ஷன் அவர் உழைப்பு...உணர்வு,உணர்ச்சி அவருடைய தனித்துவம்....இதை எல்லாம் மீறி அவரின் எளிமை..அவர் பாடலை ப்ரெசென்ட். செய்திருக்கும்(அளித்திருக்கும்)விதம்........அவருடைய அர்ப்பணிப்பு....தெய்வீகம்...தெய்வீகம்....வானத்தில் வருவது ஒரு நிலவு....ஒரு சூரியன்....பெண் குரலில் மென் குரல்,மேன்மை தாங்கிய குரல் இப்புவியில் இன்றுவரை இவர் ஒருவருக்கே..காலம் உள்ளவரை காற்று உள்ளவரை என் மூச்சு உள்ளவரை இவருக்கு நான் அடிமை.....இவர் குரலுக்கு நான் அடிமை...அனந்த கோடி நமஸ்காரங்கள் சுசீலாம்மா......விசாலி..