Visali Sriram

December 9, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...99

கோமல் சுவாமிநாதன் அவர்களின் "தண்ணீர் தண்ணீர்",இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது.....பாடல் வரிகள் திரு.வைரமுத்து...இசை மெல்லிசைமன்னர்....காட்சியில் சரிதா...ஒரு கிராமம் முழுவதும் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக அலைமோதும் ஏழை மக்கள் ...அவர்களின் பிரதிநிதியாக சரிதா பாடும் இந்தப் பாடல் ஒரு தாலாட்டுப் பாடல்...அம்மா அசத்திவிடுவார் என்றால் சரிதா நெகிழ்த்தி விடுவார்.

வைரமுத்து கிராமத்து தமிழுக்குப் புத்துயிர் தந்திருப்பார்...மெல்லிசை மன்னர் வெறும் கடம் பின்னணியில் பாடல் அமைத்திருப்பார்......பாடல் முழுவதும் சுசீலாம்மாப் பின்னி பிழிந்து விடுவார்கள்.

"கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணு ஆறாகிப் பெருகி வந்து

தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை

ல்லுலாயி லுல்லாயி ஆயி ஆயி ஆராரோ லுல்லாயி ஆயி ஆயி ஆரரிரோ...

ஆரிரோ....ஆ...ரி...ரோ........

கண்ணான பூமகனே.....ஆரம்பமே பாச ஊற்று...மகனே....அழைக்கும் 'னே.'..

கண்ணுறங்கு சூரியனே...ஏ ஏ..ஏ...நிறுத்தி நிதானமான சூரியனே.......

ஆத்தா அழுத கண்ணு.......ஆஹா....சரிதாவின் கண்ணில்....கீழே விழ மனமில்லாமல் தேங்கி நிற்கும் கண்ணீர்....குளம்.....பெரிய கண்கள்...அதனால் அணை என்று கூட சொல்லலாம்...அவருக்கு மட்டுமே அது கை வந்த கலை...

ஆறாகப் பெருகி வந்து......ஆ....றாகி...நீண்ட ஆறு...பெருகி வந்து....வெள்ளம் வந்த உணர்வு குரலில்...தொட்டில் நனைக்கும் வரை....ஒடி வந்த ஆறு போய்க் குழந்தை (தூளியில் தூங்கிக் கொண்டிருக்கும் )குழந்தையின் தூக்கம் கலைக்கும் வரை....தொட்டில் மேலே இருப்பதால்....மேல பாடியிருப்பார்...தூக்கம்.....தூ...க்கம்....அந்த ஆழ்ந்த தூக்கம் கலையும் படி இழுத்து நீட்டி.....

ல்லுல் லாயி லாயி ஆயி ஆயிராரி ஆராரோ....ரோ....

ல்லுல் லாயி லாயி ஆயி ஆயிராரி ஆராரோ....ஆரிரோ...ஆரிரோ..ஆ ரி ரோ.....

இதை எழுதி புரிய வைக்க முடியுமா.....உருக்கி விடுவார்.....அந்த ஆ ரி ரோ......தாய்மை.....

"ஊத்துமலைத் தண்ணீரே என் உள்ளங்கை சர்க்கரையே....

நீ நான் பெத்த தங்க ரதம்...இடுப்பில் உள்ள நந்தவனம்...

காயப்பட்ட மாமன் இன்று கண்ணுறக்கம் கொள்ளவில்லை

சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்லை

ஏகப் பட்ட மேகம் உண்டு..மழை பொழிய உள்ளமில்லை....."

குழந்தையை கிராமத்தில் கொஞ்சும் அழகே அழகு...

எளிமை தாய்மை இதே அதில் பிரதானம்...

அங்கு இப்போது முக்கியமான தேவை தண்ணீர்....

அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம்....அதுவே அவள் பாடலில்....

ஊத்துமலையில் வரும் தண்ணீரே.....என் உள்ளங்கை சர்க்கரையே....

கேட்கவே இனிமையான வரிகள் அதை இப்படி இனிமையாகப் பாடினாலும் திகட்டாத இனிமை....சர்க்கரையே......யே.....அந்த சங்கதிக்கு கங்கையே பிரவாகமாக வந்தாலும் போதாது....

நான் பெத்த தங்க ரதம்....இந்த மண்வாசனை மிக்க சொற்கள்....எவ்வளவு நாளாயிற்று ..இதெல்லாம் கேட்டு......பெற்ற ..என்று சொல்லியிருந்தால் இவ்வளவு சிறப்பு இருந்திருக்காது....தங்கத்தில் ஒரு அழுத்தம்.....இடுப்பில் வைத்துக் கொண்டிருக்கும் குழந்தை ...அது அவளுடைய நந்தவனமாம்....பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டம்.....ஆஹா...

உள்ளே படுத்துக் கொண்டிருக்கும் மாமன் கண்ணுறங்கவில்லை....

வெளியிலோ சோகப் பட்டிருக்கும் கிராமத்து மக்களுக்கு இந்த துன்பத்தில் அன்னம் தண்ணீர் செல்லவில்லை....

குவிந்திருக்கும் மேகக் கூட்டத்திற்கு உள்ள நீரை மழையாகப் பொழிய மனமில்லை....என்ன அழகான வரிகள்.....இயற்கை பொய்த்தால் மனிதன் வாழ்வு எங்கே????அந்த சோகத்தை வெகு அழகாக சொல்லி இருப்பார் வைரமுத்து...சோகப்பட்ட ......இந்த வார்த்தையில் தொக்கி நிற்கும் சோகம்.....குரலில் கமறிய குரலில்....சோறு தண்ணி....இந்த சொல்வழக்கு இந்த இசையரசியிடம் நீதி பெறுகிறது....

மழை பொழிய உள்ளமில்லை....துக்கம் தொண்டையை அடைக்க "உள்ளமில்லை"...

ல்லுல் லாயி லாயி ஆயி ஆயி ஆயி ஆராரோ......

"கால் முளைச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே...

நீ தேன்வட்ட அத்திப் பழம் முத்தம் தரும் முத்துச் சரம்..

தண்ணிதந்த மேகமின்று ரத்தைத் துளி சிந்துதடா..

காத்திருந்த பானைக்குள்ளே கண்ணீர் பொங்குதடா...

வீட்டு விளக்கெரிவதற்குக் கண்ணீர் எண்ணையில்லையடா..."

ஏழை அம்மா ஆனாலும் பிள்ளையைக் கொஞ்சும் போது சீமாட்டி...

நடக்க ஆரம்பித்திருக்கும் குழந்தை....அதை தாயார் சொல்லும் அழகு...கால் முளைச்ச மல்லிகையே...கண்டெடுத்த ரோசாவே...

தேன் வட்ட அத்திப் பழம்....ஆஹா.....வட்டமான தித்திப்பான அத்திப் பழம்......தேன் வட்ட...முத்தம் தரும் முத்துச் சரம்.....பாசி மணி அணிந்திருக்கும் தாயார்....அவளுக்கு பிள்ளையின் முத்தமே முத்துச் சரம்....

கால் முளைச்ச மல்லிகையே....இதை மேல் ஸ்தாயியில் ...கண்டெடுத்த ரோசாவே.....அது மந்த்ரஸ்தாயியில்....ரோசாவே.....வே....அந்த சுழிப்பு.....செழிப்பு...

மழை பொழிந்து தண்ணீர் கஷ்டம் தீர்க்க வேண்டிய மேகம் இன்று வறண்டு ரத்தம் சிந்துதாம்...

காத்திருந்த(நீருக்கு)மண்பானைக்குள்ளெ மக்களின் கண்ணீர் பொங்குது....

காத்திருந்த......காத்திருந்த சோகத்தை அழுத்தி சொல்ல அதை மேல் ஸ்தாயியில்...கண்ணீர்...கீழே...

உச்சகட்ட சோகம்....வீட்டிலே விளக்கு ஏற்றுவதற்குக் கூட கண்ணீர்...எண்ணையில்லையடா....எண்ணை இல்லாத சோகம் இல்லையடாவில் முழுவதுமாய் இறக்கி இருப்பர்கள்....

ஆரிராரி ராரி ராரி ஆராரோ.....ஆரிரோ....ஆரிரோ....ஆ....ரி...ரோ......

ஒரு பாடல் முழுவதும் குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டே...கஷ்டத்தை

பகிரும் தாய் சரிதாவும்....குரலில் சுசீலாம்மாவும்....வரிகளால் வைரமுத்து அவர்களும்...இசையால் மெல்லிசை மன்னரும்....இப்படி ஒரு காட்சியை அமைத்த இயக்குனர் சிகரத்தையும் வார்த்தைகளால் பாராட்ட முடியாது....பாடலைக் கேட்டு பின் தொடர்ந்து செல்வதைத் தவிர....பாடல் உங்களுடன்.. https://www.youtube.com/watch?v=JGR3PipdVOw