பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்.....98..
மறுபடியும்
சுசீலாம்மா....மறுபடியும்
தேவிகா....மறுபடியும்
கர்ணன்...பந்துலு
மாமா...நடிகர்
திலகம்...ப்ரும்மாண்டம்....கவியரசர்
...மெல்லிசை
மன்னர்கள்....என்ன
செய்வது.....பின்னாலேயே
போகின்ற
இசை....மந்திரிச்சு
விட்ட கோழி
மாதிரி
.....இதுவும் ஒரு
கோரஸ்
பாடல்.....சுசீலாம்மாவுடன்
இணைந்து.....இசைந்து...இசைத்து....மயக்கும்
பாடல்...காட்சி
அமைப்பைப்
பற்றி
சொல்லியே ஆக
வேண்டும்...கர்ணன்
மனைவி சுபாங்கி
தாய்மை
அடைகிறாள்.மகளுக்கு
வளைகாப்பு
செய்து
பார்க்க
ஆசைப்படும்
சந்தியா....மறுக்கும்
ஓ ஏ கே
தேவர்....வருந்தும்
தேவிகா.....
அவர்கள்
செய்ய
மறுத்தால்
என்ன ...நான் அதை
செய்ய
மாட்டேனா
என்று
கேட்கும்
சாவித்திரி
அம்மா(துரியோதன்
மனைவி)கேட்டதோடு
இல்லாமல்
வெகு
சிறப்பாக அதை
செய்கிறார்....இந்தப்
பாடல் அந்த
வளைகாப்பில்
சாவித்திரி
அம்மாவுக்கு
சுசீலாம்மா
பாடிய பாடல்
குழுவினருடன்....மங்களகரமான
ஆரம்பம்....'ஆஹா
ஹா ஹா ஹா ...ஆ ஆ ஆ ஆ
ஆ....ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா
......கோரஸ்
பாடிக்
கொண்டே, மஞ்சள்
புடவையில்
பூசிய
வயிறுடன்
தேவதையாய்
இறங்கி வரும்
தேவிகா.....ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ இனிமையே
குரலாய்.....குரலெல்லாம்
இனிமையாய்
சுசீலாம்மா பாடிக்
கொண்டே வந்து
கையைப்
பிடித்து
சுபாங்கியை
அழைத்து
வரும்
பாங்கு......"மஞ்சள்
முகம் நிறம்
மாறி மங்கை
உடல் உருமாறி
கொஞ்சும்
கிளி போல்
பிள்ளை
உருவானதே..."கவியரசரின்
தமிழ்
கொஞ்சும்.....முகமெலாம்
நாணம் பரவி...உடல்
தளர்ந்து....உள்ளெ
சிசு
உருவாகியிருக்கிறது.......கர்ப்பம்
என்பதை
இதைவிட அழகாக
சொல்ல
முடியுமா???சொன்னதை.....இத்தனை
அழகாகப்
பாடல்
இசையமைக்க
முடியுமா?அமைத்த
இசையை மேலும்
மெருகு
கூட்டிப்
பாடத்தான்
முடியுமா???கர்ப்பவதியாக
அழகு கொஞ்ச
இப்படி
நடிக்கத்தான்
முடியுமா?.....இந்தப்
பாடல் அதற்கு
ஒரு
சான்று.....அழகான
காப்பி
ராகத்தில்
ஒரு ராஜ
மரியாதையுடன்
அமைக்கப்
பட்டிருக்கும்
பாடல்....சாவித்ரியின்
பெருந்தன்மை
காட்சியின்
பிரும்மாண்டம்....ஒரு
பெரிய நடன
விருந்து
படைக்கும்
தோழியர்
குழாம்....இதை
விட சுவை அதை
மாடியின்
மேலிருந்து
பார்க்கும்
நடிகர்
திலகம்....அசோகன்....
'கொஞ்சும்
கிளி போல்......'.போல்' இங்கு
ஒரு மயக்கும்
சங்கதி... ...
"அஞ்சி
அஞ்சி
நடந்தாள்
அந்நாளிலே
இவள் அன்ன நடை
பயின்றாள்
இந்நாளிலே..".....சுசீலாம்மா
அஞ்சி அஞ்சி
பாடுவது என்
காதில்
கொஞ்சி
கொஞ்சி
விழுகிறதே.....!!நாணத்தால்
அங்கிருந்து
துள்ளி
நகரும்
தேவிகா...தான்
கர்ப்பவதி
என்பதை
க்ஷணத்தில்
உணர்ந்து
மெல்ல பதவிசாய்
நடப்பது
கண்ணுக்கு விருந்து....அதை
கவனித்த
சாவித்திரி
அம்மா குறும்போடு
பாடுவது
செவிக்கும்
கண்ணுக்கும்
விருந்து.....இருவரையும்
தன் குரல்
இனிமையால் உயர்த்திக்
காட்டும்
சுசீலாம்மா....அஞ்சி
அஞ்சி...கோரஸ்
பாடும் போது
அஞ்சி..ஞ்சி..ஞ்சி...என்று
பாடும்
நேர்த்தி கூட
இனிமைதான்...
அன்ன நடை
....இந்நாளிலே....இந்த
மாதிரி
இடுக்கு
சங்கதி சுசீலாம்மவுக்குக்
கைவந்த கலை....
'துள்ளி
வந்த மான்
இன்று சேய்
கொண்டதே....துள்ளி
வந்த மான்
இன்று சேய்
கொண்டதே...முதல்
துள்ளி மான்
அம்மா
பாடுவது....அடுத்த
துள்ளி ..வந்த
...மான் ....கோரஸ்...
ஆராரி ராரோ
ஆரி ரோ.....பாடிக்
கொண்டே....
சுபாங்கிக்கு
மங்கள
ஸ்நானம்
செய்வித்து அழைத்து
வர ...அந்த
பி.ஜி.எம்.....ஆஹா...
'மலர்கள்
சூட்டி
மஞ்சள்
கூட்டி... பூசி
வளையல் பூட்டி
திலகம்
தீட்டி
மாதுன்னை
வாவென்று
வாழ்த்து
பாடுவோம்....'
சுபங்கிக்கு
பானுமதி மாலை
சூட்டி...மஞ்சள்
கூட்டி... ...வளையல்
பூட்டி...திலகம்
தீட்டி....நெஞ்சு
நிறைய
பெருந்தன்மையும்,முகமெல்லாம்
புன்சிரிப்புமாக........என்ன
கதா பாத்திரம்
அவர்......இப்போது
நினைத்தாலும்
விம்முகிறது...
தோழியர்
கையில் ஒரு
பொம்மையைக்
கொண்டு வந்து
கொடுக்க
சாவித்திரி
அம்மா அதை
வைத்துக் கொண்டு..
"கர்ணன்
தந்த பிள்ளை
என்றால் கார்
மேகம் அல்லவா..
எதிர்
காலத்தில்
இந்த
தேசத்தில்
இவன் கருணை
செய்வான்
அல்லவா..."
இதை
மேலிருந்து
பார்க்கும்
நடிகர்
திலகம் மீசையை
முறுக்கிக்
கொள்வதைக்
காணக் கண் கோடி
வேண்டும்....அதை
ரசிக்கும்
அசோகன்.....துரியோதனைக்
கூட நம்மை
விரும்பச்
செய்து
விடும்...
கர்ணன்
தந்த
பிள்ளையை 'கார்மேகம்"
என்று சொல்லி
இருப்பதும்...."கருணை
செய்வான்
"என்பதும்....அவனும்
தந்தையைப் போல்
பெரிய
கொடைவள்ளல்
ஆக வருவான்
என்பதை சொல்வதற்காகக்
கவியரசர்
எழுதி
இருப்பாரோ?...சிந்திக்கத
தூண்டுகிறது....
கார் மேகம்
"அல்லவா".....பாடி
இருப்பதிலேயே
கர்ணனின் குணம்
சொல்வது போல
"நல்லவன்
அல்லவா"என்பது
போல
ஒலிக்கும்....
எதிர்காலத்தில்.....அதை
வெகு அழகாகப்
பாடி இருப்பார்கள்.....கருணை
செய்வான்
அல்லவா???அல்லவா....ஒரு
அல்வா......அற்புதம்......
சிறிய
பாடல்...இதன்
தொடர்ச்சி
தனிப் பாடல்.....அதில்
பி.பி.எஸ்
அவர்களும்
மென்மைக்கு
மேன்மை
சேர்த்திருப்பார்.....
பாடல்
சிறியது.....இனியது....காட்சி
பெரியது.....மொத்தமாகப்
பார்க்கும்
போது ஒரு டீம்
ஒற்றுமை வெளிப்படுத்தும்
அழகான
பாடல்....உங்களுடன்.... https://www.youtube.com/watch?v=2VjiexpEHPQ
தேவிகாவின்
அந்த ஆண்டாள்
கொண்டை...ஆஹா..ஆஹா..