பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்.....97.
அன்பே
வா.....நான்
இன்றும்
ரசித்துப் பார்க்கும்
ஒரு
படம்.புரட்சித்
தலைவர் அழகை
சொல்வதா...சரோஜா
தேவி
அம்மாவின்
கொஞ்சும் தமிழை
சொல்வதா...நாகேஷின்
நகைச்சுவையை
சொல்வதா....இதை
எல்லாம்
மிஞ்சும்
மெல்லிசை
மன்னரின்
இசையை
சொல்வதா......பாடலைத்
தொடர்ந்து
சென்றேன்
என்று வந்து
விட்டு வேறு
எதை சொல்வது...1966 இல் அன்பே
வா வெளியீடு
இன்று வரை
அதன் பாடல்களைத்
தொடர்ந்து
சென்று
கொண்டே
இருக்கேன்..இன்றைய
பதிவு ஒரு
உற்சாகப்
பாடல்...வாலியின்
வரிகள்...மெல்லிசை
மன்னரின் துள்ளல்
இசை...அம்மா
அசத்தி
இருப்பார்கள்....படத்தின்
இறுதி
பாடல்...."வெட்கமில்லை
நாணமில்லை
"......நினைத்தது
நிறைவேறிய
சந்தோஷத்தில்
சரோஜா தேவி....கதாநாயகன்
புரட்சித்தலைவர்
பாலுவை மணக்கப்
போகும்
சந்தோஷத்தை
பாடி ஆடி
சொல்கிறார் கீதா
என்கிற சின்ன
பாப்பா....
பாடல்
ஆரம்ப இசை
அற்புதம்....கையில்
பூவாய் நீரைத்
தெறிக்கும்
ஷவரில்
குளித்து....பூத்துவலையை
சுற்றிக்
கொண்டு
காலில் உள்ள
நீரை ஸ்டைலாக
ஆடி உதறி அவள்
பாதம் சுமக்க
காத்திருக்கும்
அழகுக்
காலணிக்குள்
தன்... காலை
சொருகிக்
கொண்டே..."வெட்கமில்லை
நாணமில்லை
காலமில்லை
நேரமில்லையே....ஆ
ஆ ஆ ..
நினைத்தேன்...
முடித்தேன்
அதனால்
சிரித்தேன்"...வேகமான
பாடல்...ஒவ்வொன்றையும்
ஒரு பாவத்தோடு
அம்மா பாட
அதற்கு
சரோம்மா
காட்டும்
பாவம்.....ஆஹா....
நேரமில்லையே....ஆ..ஆ..மில்லையே....ஒரு
உச்சம்....அதைத்
தொடரும் ஆ
ஆ....ஆஹா.......நினைத்தேன்...முடித்தேன்..கொம்புத்
தேன்
என்றால்....சிரித்தேன்....கிண்ணத்தில்
வடித்த
தேன்...பாடிய
தேன் அம்மா....
"இமையிரண்டும்
படபடக்க
இருவிழிகள்
துடி துடிக்க
தொடுவதற்கே
துணையிருக்கத்
தொட்டவுடனே
சிலு
சிலுக்க...."..அவள்
தனிமையைக்
கலைக்கும்
தோழியர்
கூட்டம்.....கோரஸ்...
இந்த சரணம்
சரோம்மாவுக்காக
எழுதப்
பட்டது போலும்...
அவருடைய
இமைகள் பட
படக்க நீள்
விழிகள் துடி துடிக்க..
பார்க்க
பார்க்க
ஆனந்தம்...இன்றும்..
துணை
கிடைத்த
சந்தோசம்....கூச்சம்
தவிர்த்து தொட்டவுடனே
ஜில் ஜில்
என்கிறதாம்...
அம்மா பட
படக்க பாடி
இருப்பதில்
பட படப்பு....துடி
துடிக்க....சொல்லும்போதே
அந்த
துடிப்பை நாம்
உணர
முடியும்....அப்படி
ஒரு உணர்வு
பூர்வமாய்
பாடி இருப்பதைக்
கேளுங்கள்...தொடுவதற்கே,,,'கே'
யில்
ஒரு
நெடில்...தொட்டவுடனே.....னே....அதில்
ஒரு மின்சாரம்
பாய்ந்த
உணர்வு....சிலு
சிலுக்க....சிலிர்த்துத்தான்
போனேன்...
கோரஸின் ஆ
ஆ ...அது கூட
இனிமைதான்
'பருவ
நிலா அருகில்
வர பழம்
நழுவிப்
பாலில் விழ
உறக்கம்
வந்தே
விலகிச் செல்ல
தலைவன்
வந்தான்
உறவைச்
சொல்ல..'
காதல்
நிறைவேறித்
திருமணம் வரை
வந்த தைரியம்...வெட்கம்
விட்டு காதல்
பகிர்கிறாள்...பருவ
நிலா....நிலா...அதை
சுருக்கி...பழம்
நழுவி பாலில் விழ...அதை
விரிவாகப்
பாடி....உறக்கம்
வந்தே விலகிச்
செல்ல ...இங்கு
கொஞ்சம்
நாணம்
படரவிட....தலைவன்
வந்தான்
உறவைச்
சொல்ல...வெளிப்படையாகவே
உறவை பாடலில்
சொல்லி
விடுகிறார்கள்...வந்தே.....தே...யில்...ஒரு
குட்டீ
சங்கதி...விலகிச்
செல்ல...வி..ல...கி...ஒதுங்கி
சொல்ல...தலைவன்
வந்தான்...வந்தான்....சந்தோசம்
பூரா அந்த 'தானில்..'.......பாடல்
முடிந்து
வெகு நேரம்
சரோஜா
தேவியின்
அழகும்...அம்மாவின்
குரல்
இனிமையும்
அறை
முழுவதும்
சாம்பிராணி
வாசனையைப்
போல்
சூழ்ந்திருப்பதை
உணர்ந்திருக்கிறேன்...பாடல்
உங்களுடன்....