பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்..95..
மனித
உறவுகளில்
தாய்க்கு
அடுத்த முறை
உறவு தாய்
மாமனுக்கு....அதைத்
தொடர்ந்து
நெருக்கம்
சித்தி....இந்த
சித்தி
தாயின்
சகோதரியானால்
இனிமை,தந்தையின்
தம்பி
மனைவியானால்
அண்மை....அவளே,தந்தையின்
மறு
மனைவியானால்..என்னதான்
மாற்றாந்தாய்
என்றாலும்,வழிவழியாக
நம் உணர்வு
வன்மை...கொடுமை...அங்கும்
இங்கும்
தேடினால்
நல்லவளாக
இருப்பவளும் உண்டு.இப்படிப்பட்ட
ஒரு தன்மையான,தண்மையான
ஒரு
மேன்மையான
கதாபாத்திரம்
இயக்குனர்
திலகம்
அவர்களின்
"சித்தி"..பப்பிம்மா
அந்த
பாத்திரத்துக்கு
ஒரு ஒளி
சேர்த்தார்
என்று
சொன்னால்
மிகையாகாது....தான்
காதலித்த
முத்தய்யா(ஜெமினி
அவர்களை)
மறந்துவிட்டு
குடும்ப
பாரத்தைக்
கரையேற்ற
ராதா அண்ணனுக்கு
இரண்டாம்
தாரமாக
வாழ்க்கைப்
படுகிறார்.ராதா
அண்ணனுக்குக்
கும்பகோணம்
அடுக்கு
மாதிரி வரிசையாய்ப்
பிள்ளைகள்...மூத்த
பெண் விஜய
நிர்மலா கல்லூரி
மாணவி...கடைசி
குட்டிப்
பாப்பா பேபி ராணி
தொட்டில்
குட்டி..பப்பிம்மாவுடைய
தம்பி
முத்துராமன்...விஜயநிர்மலாவுடன்
அவருக்குக்
காதல்..
எம்.ஆர்.ராதாவுக்கு
ஆசை
நரைக்கவில்லை...மனைவியைப்
படுத்தும்
பாடு படாத
பாடுதான்...அதற்கும்
ஈடு
கொடுக்கும்
பப்பிம்மா...மாமியார்
சுந்தரிபாய்...இத்தனை
பேருக்கும்
ஓரே ஆறுதல்
பப்பிம்மா....அந்த
பாத்திரத்துக்கு
ஒரு மெருகு
சேர்த்திருப்பார்...மறக்கமுடியாத
படம்...அவருக்கும்
அந்தக்
குட்டிக்
குழந்தைக்கும்
உள்ள
பிணைப்பு
தெய்வீகம்....இப்போது
நான் பகிர இருக்கும்
பாடல் அந்தக்
குழந்தைக்கு
அவர் பாடும்
ஆரிராரோ
ஆரிராரோ....வார்த்தைக்கு
வார்த்தை,வரிக்கு
வரி ஒரு
யதார்த்தமான
வேதம்....கவியரசர்......13 வயசில்
அவரைப்
பிடித்திருந்தது
இது கேட்டு...
..இப்போது
கேட்டு
கேட்டு துதிக்கின்றது....இசை
மெல்லிசை
மன்னர்.....அவருடைய
தாலாட்டு
மெட்டிலேயே..இது
ஒரு சுகமான
மெட்டு..
.பாடி
இருப்பது
சுசீலாம்மா...அம்மா,தாலாட்டு.......தேவகானம்.
குழந்தை
தூங்காமல்
தொட்டிலில்....குழந்தைக்குப்
பாடல்
ஆரம்பம்...
தொகையறா....'பெண்ணாகப்
பிறந்தவர்க்குக்
கண்ணுறக்கம்
இரண்டு
முறை...பிறப்பில்
ஒரு தூக்கம்...இறப்பில்
ஒரு
தூக்கம்....இப்போது
விட்டு விட்டால்
எப்போதும்
தூக்கமில்லை...என்னருமைக்
கண்மணியே
கண்ணுறங்கு..கண்ணுறங்கு....ஆரிராரிரோ
ஆரிராரோ...ஆரிராரிராரோ...ஆரிராரி
ராரிராரோ..ஆரிராரிராரோ...."..
குழந்தைக்கு
வரிகள் புரியவில்லை
என்றாலும்
அம்மாவின்
குரலினிமை பிடித்திருக்கிறது
புரிகிறது...என்னருமைக்
கண்மணியே......கண்மணியே...என்ன
இனிமை
அதில்....கண்ணுறங்கு..கண்ணுறங்கு...'கண்ணு...றங்கு....கண்ணில்
ஒரு
அழுத்தமான
சங்கதி....
பிறப்புக்கும்
இறப்புக்கும்
நடுவில் ஏன் தூக்கமில்லை...காரணம்
சொல்கிறார்..வயது
வாரியாக....
"நாலு
வயதானபின்னே
பள்ளி
விளையாடல்
நாள்
முழுதும்
பாடச்
சொல்லும்
தெள்ளுத் தமிழ்ப்
பாடல்"நாலு
வயது முதல் 10..12 வயது வரை
பள்ளி,விளையாட்டு,ஆடல்,பாடல்
இதிலே
ஈடுபாடு
அதிகம்
ஆதலால்
தூங்கும்
நேரமே
குறைவு....
வயதான
பின்னே....முதலில்
பாடும்
பொழுது..'ன்னே'...இங்கே ஒரு
நீட்டல்...இரண்டாம்
முறை....'பின்னே'......இங்கே ஒரு
சின்ன
கஷ்டமான
சங்கதி...படு
கேஷுவலாக.....ஆங்கிலத்தில்
இதை வித்
ஈஸ்...என்பார்கள்....விளையாடல்...ல்....இங்கு....நீட்டி....ல்..ல்..ல்..
பாடச்
சொல்லும்...சொல்லும்
இதில் ஒரு எதிர்பார்ப்பு
தெள்ளுத்
தமிழ்பாடல்....தீந்தமிழ்...தேன்
தமிழ் பாடல்
என்று
சொல்லாமல்
சொல்லும்...
"எண்ணிரண்டு
வயது வந்தால்
கண்ணுறக்கம்
இரண்டு முறை...
ஈரேழு
மொழிகளுக்கும்
தீராத
தொல்லையடி...தீராத
தொல்லையடி"...
தொட்டில்
குழந்தை
தூங்கியதால்
இப்போது 16 வயது
கன்னிக்காக
இந்த இரண்டு
வரி...
16 வயசில்
படிப்புத்
தொல்லை...பல
மொழிகள் கற்க
வேண்டிய
நிலை....அத்தோடு
போராடுவதால்
எங்கிருந்து
தூங்குவது?
ஈரேழு....மொழிகளுக்கும்...நிறுத்திப்
பாடி அசத்தி
விடுவார்
அசத்தி....தீராத
தொல்லையடி...இரண்டு
முறை
அடியில்....அசைத்து...நம்மை
அசைத்து
விடுவார்..
இனி வரும்
சரணம் அடுத்த
பருவத்துக்கு......அதைக்
குறிக்க
மங்களகரமான
ஷெனாய்....
விஜய
நிர்மலா,முத்துராமன்
காதலுக்கு
ஒரு சின்ன
அறிவுரை....
"மாறும்
கன்னி மனம்
மாறும்...கண்ணன்
முகம் தேடும்
ஏக்கம்
வரும் போது
தூக்கம்
என்பதேது..
தான்
நினைத்த காதலனை
சேர வரும்
போது
தந்தை அதை
மறுத்து
விட்டால்
கண்ணுறக்கம்
எது?கண்ணுறக்கம்
எது?
மாலையிட்டத்
தலைவன் வந்து
சேலை தொடும்
போது
மங்கையரின்
தேன் நிலவில்
கண்ணுறக்கம்
ஏது?
கண்ணுறக்கம்
ஏது?"
மாறும்...இங்கு
பாடலின்
வேகமும்
கொஞ்சம் மாறும்...காதல்
வயப்
பாடுவிட்டால்
தூக்கம்
வராது...தந்தை
ஏற்காத காதல்
என்றால் ஏது
தூக்கம்....துக்கம்தான்..
ஏற்றுக்
கொண்டு
திருமணம்
முடிந்தாலும்
தேன் நிலவில்
ஏது தூக்கம்?
உறங்கிக்
கொண்டிருந்த
குழந்தை
எழுந்து தாயைத்
தேடி வருவது
அடுத்த சரணம்
துவக்கம்....அதற்கு
ஒரு
பி.ஜி.எம்.கொடுத்திருப்பார்
மெல்லிசைமன்னர்....குழந்தையின்
தளர்
நடைக்கு....
அது நடந்து
வந்து
சமையலறையில்
இருக்கும் தாயின்
முந்தானையை
இழுக்கத்
திரும்பும்
பத்மினியின்
முகபாவத்துக்கு
ஆயிரம்
பொற்காசுகள்....
அடுத்த
சரணம்
தாய்க்கு....
'ஐயிரண்டு
திங்களிலும்
பிள்ளை
பெறும் போதும்
அன்னை
என்று வந்த
பின்னே
கண்ணுறக்கம்
போகும்...'
பிள்ளை
பெரும்
தாய்க்கும்
தூக்கம்
இல்லை....பிள்ளைக்கு
தாயாக வந்த
மாற்றாந்தாய்க்கும்
தூக்கம்
இல்லை...
சரி
இனிமேல்
யாருக்கு
தூக்கம்?
அங்கு
உட்கார்ந்த
நிலையிலேயே
தூங்கிக் கொண்டிருக்கும்
மாமியார்
சுந்தரி
பாயைப் பார்த்து..
"கை
நடுங்கிக்
கண் மறைந்து
காலம் வந்து
சேரும்...காணாத
தூக்கமெல்லாம்
தானாக
சேரும்"...
வயாதான
பிறகு,உடல்
நலிந்து ,கண்மறைத்து...தள்ளாத
நிலை வரும்
போது இத்தனை நாள்
வராத
தூக்கமெல்லாம்
தானாக வந்து
சேர்ந்து
கொள்ளும்....இந்தத்
தூக்கம்
மீளாத தூக்கம்
வந்து சேரும்
வரை.....
காணாத
தூக்கமெல்லாம்....தானாக.....இரக்கத்துடன்
ஒலிக்கும் ........
பல
பருவங்களைக்
கண்டு.....பாடலின்
உண்மையை
உணர்ந்து....இப்போது...கண்மறைந்து..கைநடுங்கும்
காலம்
நெருங்கிக்
கொண்டிருக்கும்
எனக்கு
இந்தப் பாடல்
இப்போது
நன்றாகவே புரிகிறது.....தூக்கம்தான்
வருவதில்லை..மனம்
முழுவதும்
இந்தப்
பாடல்தான்......அம்மா
அம்மா என்று
வாய் நிறைய
இவரை
அழைக்காமல்
யாரை
அழைப்பது.....உருக்கிவிடுவார்
இந்தப் பாடலில்....
மறைந்த
டி.எ.மதுரம்
அம்மா
அவர்களுக்கு
மிகவும்
பிடித்த
பாடல் என்று
மெல்லிசை
மன்னர் ஒரு
நேர்முக
உரையாடலில்
சொல்லி
இருந்தார்...சுசீலாம்மாவின்
முதல்
குழந்தை
(தவறிவிட்டது)அது
உயிருடன்
இருக்கும்
போது இந்தப்
பாடலுக்கு
தலையை
எழுப்பி
எழுப்பிக்
கேட்கும் என்று
சொல்லி
இருக்கார்...
இந்தப்
பாடலை இது வரை
எத்தனையோ
பேர் பாட முயன்று
தோற்றதுதான்
மிச்சம்....இனிமேலாவது
யாரும் இதை
முயற்சி
செய்ய வேண்டாம்
என்ற
விண்ணப்பத்துடன்.....பாடல்
உங்களுடன்....https://www.youtube.com/watch?v=FsXFtHuIWkU