பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்....94.
இழுத்துப்
போர்த்திய
புடவை,பெண்ணுக்கே
உரிய அச்சம்
மடம் நாணம்,பயிர்ப்பு
எல்லாம்
சேர்த்து
வைத்த செப்புச்
சிலையாக ஒரு
பெண்மணியால்
இப்படிப்பட்ட
பாடலைப் பாடி
இருக்க
முடியுமா???குரலிலே
இத்தனை
ஜாலங்கள்
செய்ய
முடியுமா...இன்னும்
வருகின்ற
தலைமுறைப்
பாடகிகள்
கற்றுக்
கொள்ளட்டும்
இவரிடம்
இருந்து......குரல்
மட்டும்
தெய்வீகம்
இல்லை....அவரே
தெய்வீகம்...அவர்
பாடலை 55 வருடங்களாகப்
பின்
தொடர்வதற்கு
இதுவும் ஒரு
காரணமே.....
1972 இல்
வெளிவந்த
இந்தப் படம்
பட்டி
தொட்டியெல்லாம்
பட்டையக்
கிளப்பின
படம்...."பட்டிக்காடா
பட்டணமா"....மூக்கய்யா
தேவராக
தலையில் ஒரு முடிச்சுடன்,முறுக்கி
விட்ட
மீசையோடு
கலக்குவார்
நடிகர் திலகம்...படத்தின்
கதாநாயகி
ஜெயலலிதாம்மா....புதுமைப்
பெண்ணாக ஒரு
புரட்சியே
செய்திருப்பார்.ஹிப்பி
கலாசாரம்
அப்போது
பரவலாக
இருந்த நேரம்....இந்தப்
பாடலிலும்
அது
பிரதிபலித்திருக்கும்.
மூக்கய்யாவின்
மனைவி
கல்பனா...பட்டணத்து
நாரீமணி...பட்டிக்காட்டில்
நண்பர்களை
அழைத்துப்
பிறந்த நாள்
கொண்டாட
விரும்ப,காதல்
மனைவியின்
விருப்பத்துக்கு
ஓ கே சொல்ல.....அத்தனை
நண்பர்
நண்பிகளை
அழைத்து ஒரு
பார்ட்டிக்கு
ஏற்பாடு( மது
உட்பட
)செய்திருப்பார்...அப்போது
பாடி ஆடும்
பாடல் இன்றைய
பகிர்வு....காட்சியை
கற்பனை
செய்து
கொள்ளும் நம்
கற்பனைக்கு
சற்று
அதிகமாகவே
அசத்தி
இருப்பார்கள்
சுசீலாம்மா..
பாடல்....ஆரம்பமே
கோரஸாகக்
கத்தும்
ஹிப்பிக் கூட்டம்....புதுமைப்
பெண் பாடல்
இதோ.....இதுவும் ஒரு
க்ளாப்ஸ்
பாடலே....
"முத்துச்
சோலை தங்கக்
கிளிகள்
துள்ளும் நாளல்லோ...
முன்னும்
பின்னும்
தாளம் தட்டி
ஆடும்
நாளல்லோ...
காலம்
போகும் வேகம்
போல நாமும்
போகின்றோம்...
ஆசை போல
நம்மை நாமே
ஆளப்
போகிறோம்....."
தாளம்
தட்டி......க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்...பின்னணியில்
பாங்கோஸ்...
பெர்பெக்ட்
பிட்சிங்
என்று
சொல்வார்கள்...ஆங்கிலத்தில்...மேல்
ஸ்தாயியில்
அப்படி ஒரு
துல்லியம்...ஒவ்வொரு
சொல்லிலும்
ஒரு
துள்ளல்...நாளல்லோ.....லோ...வில்
ஒரு விப்ராட்டோ....
முன்னும்
பின்னும்....என்ன
வேகம்...தாளம்
தட்டி....தாளத்தை
படு
ஸ்டைலாகப்
பாடி
இருப்பார்...
காலம்
போகும் வேகம்
போல நாமும்
போகின்றோம்...வேகத்தில்
ஒரு உச்சம்.
ஆசை போல
நம்மை நாமே
ஆளப்
போகின்றோம்....
ஆசை
போல.....அது பாடி
இருக்கும்
விதத்துக்கு
ஒரு பெரிய
ஓ...நம்மை
நாமே...மே வில்
சிறு பெண் போல
ஒரு இழுப்பு...
"வானம்
பார்க்கும்
கொடியென்ன
ஆடை கொண்டதோ...
வாடைக்
காற்று
விளையாட
நாணம்
கொண்டதோ...
அந்தி மலர்
சந்திரனை
இங்கு யாவரும்
கொண்டாட
ஆணும்
பெண்ணும்
எண்ணம் போல
ஆடட்டும்
ஆடட்டுமே..."
ஆடை கூட
தொந்தரவு
என்னும்
ஹிப்பிக்
கூட்டம்...அதற்கு
வியாக்கியானம்
சொல்லும்
புதுமைப்
பெண்...
ஆணும்
பெண்ணும்
எண்ணம் போல
ஆடட்டும்
ஆடட்டுமே..படு
காஷுவலாக
அதைப் பாடி
இருக்கும்
சுசீலாம்மா.....அதற்கு
100%நீதி
வழங்கும்
ஜெயலலிதாவின்
முகபாவம்.....
"பாடிச்
செல்லும்
குயில்
எந்தக் காவல்
உள்ளதோ...
ஆடிச்
செல்லும்
கடல் என்ன
வேலி உள்ளதோ..
வண்டுகளை
இரு கண்களை
சிலர்
சொல்வது
எதனாலே...
அங்கும்
இங்கும்
உள்ளம் போல
ஓடட்டும்
ஓடட்டுமே...."
மொத்தத்தில்
அவள் ஒரு
சுதந்திரம்
விரும்பும்
பறவை...ஒவ்வொரு
வரியிலும்
அவள் சுதந்திரம்
சொல்லும்
உவமைகள்...குயிலுக்கு
என்ன
காவல்...கடலுக்கு
என்ன வேலி...
வண்டுகளை....அது
பாடி
இருக்கும்
அழகைப் பாருங்கள்....பட
படன்னு
பறந்து
போகிறார்
போல்...
ஆடட்டும்
ஆடட்டுமே.....கேட்டால்
நமக்கே ஆடணும்னு
தோணும்....
என்ன
பாவமானாலும்
சரி.....அதற்கு
முழு நீதி வழங்கி
விடுவார்
குரலால்....
பின்னணி
இசை....தாளம்...பாடி
இருக்கும்
ஸ்டைல்....காட்சியின்
துள்ளல்....காலத்தை
வென்ற பாடல்....உங்களுடன்...https://www.youtube.com/watch?v=e7TbDduIsuE