Visali Sriram

December 3, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்....93.

லுல்லுலாயி..ஆயி...ஆரிரோ...ஆரிரோ...ஆரிரோ.....

தாலாட்டுப் பாடல்..என்று பார்க்கிறீர்களா???பாடல் ஒத்திகை...

தாய்மை அடைந்திருக்கும் பெண்ணைத் தோழிகள் சூழ்ந்து கொண்டு கேலி செய்து பாடும் பாடல்...கோரஸுடன் இணந்து சுசீலாம்மா பாடும் பாடல்..கோரஸ் பாடல்களில் என் அட்டவணையில் எப்போதும் முதல் இடத்தில்....

1965 இல் ஜெமினி வெளியீடு வாழ்க்கைப் படகு...காதல் மன்னன்,ேவிகா,ரங்கராவ்,எம்.வி.ராஜம்மா...முத்துராமன்...இன்னும் பலர் நடித்தது...பாடல் வரிகள் கவியரசர்...இசை மெல்லிசை மன்னர்.....அத்தனைப் பாடல்களும் டாப்......ஜெமினி ஒரு பெரிய பணக்காரர்...தேவிகாவுடன் காதல்,குழந்தை வரை சென்று விடுகிறது....பின்னர் சந்தேகம்....அழுகை.....சேருகிறார்களா?...அதுதான் கதை

இந்தக் காட்சியின் காணொளி எங்கு தேடியும் கிடைக்கவில்லை....அழகான காட்சி....

கை நிறைய வளையலும்,தலை நிறைய பூவும்,முகம் நிறைய நாணமும்....அழகு தாய்மையில் தேவிகா...சுற்றிலும் தோழியர் கூட்டம்......ஷேஹனாய் மங்களம் சேர்க்க.....தொடரும் க்ளாப்ஸ்....அது ஒரு தனி க்ளாஸ்...எம்.எஸ்.வி முத்திரை......

"தங்க மகள் வயிற்றில் பிஞ்சு மகன் உருவம் தளிராய் வளருதடி...

கொஞ்சுத் தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டுப் புன்னகைப் புரியுதடி..புன்னகைப் புரியுதடி..ஓ ஓ புன்னகைப் புரியுதடி..."

தாய்மையின் பூரிப்பில் அவள்....அவள் வயிற்றில் ஒரு தளிர்....

கருவிலேயே நம் கொஞ்சும் தமிழ்ப் பாடல் கேட்டுப் புன்னகை புரிகிறதாம்....கருவினில் உள்ள மழலைக் கூட கேட்டு மயங்கும் கானம்.....நாம் மயங்குவதற்குக் கேட்கணுமா????

பாடல் அமைக்கப் பட்டிருக்கும் ராகம் பிருந்தாவன சாரங்கா.....அதன் எஸ்ஸென்ஸ் முழுவதும் 'கொஞ்சுத் தமிழ் பாட்டு பொங்கி வரக் கேட்டு..புன்னகை புரிவதில்.......கோரஸின் ஓ ஓ...புன்னகை புரியுதடி...

"அன்புத் திருமகனும் அறிவுக் குலமகளும் ஆசையில் நீராட்ட...

வண்ணத் தமிழ்க் குமரன் எங்கள் திருமுருகன்

மழலையில் தாலாட்ட ..ஓ ஓ மழலையில் தாலாட்ட...."

இவர்களின் சங்கமம் தமிழ்க் கடவுள் முருகனே இவர்களுக்கு மகனாய் வயிற்றில் வளர்கிறானாம்...

"வந்த இடம் வாழ தந்த குலம் வாழ

மனையாள் தாயானாள்....மனையாள் தாயானாள்...

பாவை மடி மீது ஆடி விளையாட

கணவன் சேயானான்...கணவன் சேயானான்...."

வாழ வந்த இடத்தில் குலத்துக்கு ஒரு வாரிசைப் பெற்றுக் கொடுக்க தாயானாள்...அங்கே வாரிசு வரும் வரை கணவனே சேயானான்...கணவன் சேயானான்...

இத்துடன் பாடல் வரிகள் முடிந்தாலும் தொடர்கிறது அம்மாவின் லுல்லாயி...ஆயி....ஆரிரோ...ஆரிரோ.......அந்த லுல்லாயிக்கு கொடுக்கணும் ஆயிரம் பொற்காசுகள்.....லுல்லுலாயி....அது பாடும் ஸ்தாயிக்கு..வேறு .. யாரும் பக்கத்திலேயே நிற்க முடியாது.....தாய்மையின் ஆராரோ அது......பாடல் முடிந்து வெகு நேரம் பின் தொடர்ந்து கொண்டே.....

திரைப் படப் பாடல்களில் எத்தனையோ பாடகிகள் தாலாட்டு பாடி இருக்கிறார்கள்....அது என்னவோ சுசீலாம்மா பாடிய பாடல்களில் தான் தாய்மையின் அண்மையை,தண்மையை,இளம் கத கதப்பை உணரமுடிகிறது..அதனால் தானோ என்னவோ அவர்களை அம்மா என்று அழைக்கும் பொழுது அமுத கானம் பொழிகிறது.....பாடல் உங்களுடன்...

இந்தப் பாடல் குறித்து நான் ஏற்கெனவே எழுதி முடித்த நிலையில் பாலேட்டனிடம் (கிருஷ்ணமூர்த்தி பாலாஜி.)இருந்து ஒரு விண்ணப்பம் வந்தது....பாடல் அவருக்கு சமர்ப்பணம்...https://www.youtube.com/watch?v=N7FpkNn02aM