Visali Sriram

December 2, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்.....92.

ஸ்ரீதர் அவர்களின் சிவந்த மண் படத்திலிருந்து இன்றைய பதிவு.இந்தப் பாடலை இன்றைய வளர்ந்து வரும் பாடகிகள் மற்றும் பாடகியாக விரும்பும் இளம் கலைஞர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்..மீண்டும் மீண்டும் நுணுக்கமாகக் கேட்க வேண்டும் என்பது எனது ஆசை...அதிகமாக இன்றைய தலைமுறைக் கேட்டிருக்காத ஒரு பாடல்....பாடல் வந்த புதிதில் நான் எத்தனை முறை கேட்டிருப்பேனோ...அப்போதெல்லாம் டிவி.டிவி டி இல்லை....ரேடியோவில் கேட்டால்தான் உண்டு....பைத்தியமாக அலைந்திருக்கிறேன் இந்தப் பாடலின் பின்..இப்போது ரியாலிடி ஷோக்களில் நாம் அதிகமாகக் கேட்கும் ... ஒருசிலசொற்கள்...ஜோனர்,..விப்ராட்டோ...ட்ரெமெலோ.....

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ .....

அதன் அர்த்தம் என்ன?....ஒரு பின்னணிப் பாடகியின் லக்ஷணம் எல்லா விதமான பாடல்களையும் அதன் இயற்கை மணம் மாறாமல் (நேடிவிடி)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...அப்படிப் பாட வேண்டும் என்பதே...சில பாடல்கள் சிலர்தான் நன்றாகப் பாடுவார்கள் என்று நம்மிடையே ஒரு தவறான கருத்து பரவலாக...அதற்கு ஒரு பதில் இந்தப் பதிவு.இந்தப் பாடல் முழுக்க முழுக்க ஒரு மேற்கத்திய பாணி பாடல் ,நடனமும் அந்த வகையே ....பாடி இருப்பது சுசீலாம்மா....ஆடி இருப்பது காஞ்சனா...பாடல் முழுவதும் பாங்கோஸ்...கிடாரின் ஆக்கிரமிப்பு.....பாடி இருப்பது பற்றி சொல்லவும் வேண்டுமோ?

காட்சிப் படி அவர் பாடிக் கொண்டே நடனம் ஆடி அங்கு காவலுக்கு நிற்கும் காவலாளிகள் ஒவ்வொருவரையும் மயக்கி அங்கிருந்து தப்ப வேண்டும்.பாடல் இதோ...

"சொல்லவோ சுகமான கதை சொல்லவோ.....

சொல்லும் வேளையில் இன்பப் போதையில் சொர்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள்...

சின்ன ராஜாவை ராசாத்திக் கொஞ்ச கொஞ்ச

அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச ..அவன்

விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல?...சொல்லவோ....

சொல்லவோ.....வோ......நெடில்.......சுகமான....சுகத்தை சு க மா..ன...என்று நீட்டிப் பாடி அங்கேயே சுண்டி விடுவார்கள் போதையை

கதை சொல்லவோ......வோ......இங்கு ஒரு டிரமெலோ....வோ..வில் ஒரு சிறு நடுக்கமான இழைவு....

சொல்லும் வேளையில் ..வேளை...இங்கு ஒரு குட்டி சங்கதி....இன்பப் போதையில்...'போதை"யில்...ஒரு சங்கதி....

சொர்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள்....

பாட்டைக் கேட்கும் பொழுதே சொர்க்கம்....காஞ்சனாவின் அழகு நடனத்துடன் என்றால்.....சொர்கமோ சொர்க்கம்...

இந்தப் பல்லவியின் மற்றொரு சிறப்பு பின்னணி பாங்கோஸ்.....

சின்ன ராஜாவை ராசாத்திக் கொஞ்ச கொஞ்ச...

கொஞ்சலோடு.......ஞ்..இந்த மெல்லினம் கொஞ்சலோடு ஊஞ்சலாட....

அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச...என்ன ஒரு அருமையான உச்சரிப்பு...ஜாவும்....தொடரும் ஞ்ச ....கொஞ்சம் நாவில் தடுமாறத்தான் செய்யும்.....இங்கே....என்ன ஒரு லாவகம்....சுசில்லாம்மாவின் சிறப்பே இந்த 'டிக்ஷன்"...எந்த பாஷையாக இருந்தாலும்.....ஆளுமை.....

விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல....விளையாடி இருப்பார்கள் குரலில்....

சரணத்துக்கு முன்னால் வரும் கிடார்....இனிமை.....

"முல்லைப் பூவை அள்ளி மெல்லத் தூவி

அவர் உள்ளம் பாடும் பாடல்.....

கள்ளப் பார்வை அவள் மெல்லப் பார்க்க

அந்தக் கண்கள் பேசும் சிறு ஊடல்

அவன் கையோடு கையாகப் பின்னப் பின்ன

அவள் கன்னங்கள் பொன்னாக மின்ன மின்ன

அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல?"....சொல்லவோ....

இருவரின் அந்தரங்கம் கதையாகச் சொல்லி காட்சிப் பின்னணிக்கு ஒரு போதை ஏற்ற...

கவியரசர் வரிகள்...மெல்லிசை மன்னர்...

மெல்லினத்தில் விளையாடியது போதும் என்று இப்போது இடையினத்தோடு....சொற்ப்ரவாகத்தில்....

கரணம் தப்பினால் மரணம்....முல்லைப் பூ...அள்ளி ..மெல்லத் தூவி..'.ல.'..''....அனாயாசமாக இசையோடு குரலில் வாரி வழங்கி இருக்கும் அம்மா...முல்லைப் பூவில்....பாடி இருக்கும் ஸ்டைலைக் கேளுங்கள்.....ஒரு துள்ளல்...பாடும் பாடல்..."பா..ட...ல்.......கள்ளப் பார்வை அவள் மெல்லப் பார்க்க...எல்லாம் மேல் ஸ்தாயிப் பிரயோகங்கள்....'கண்கள் பேசும்...சிறு ஊடல்...சிறு....சின்னதாக ஊடல்...ஊடலில் ஒரு குறும்பு...

'கையேடு கையாகப் பின்னப் பின்ன.'.....பின்னலில் ஒரு .நாணம்..

'பொன்னாக மின்ன மின்ன '....பளீர் பளீர் என்று வார்த்தைகள்.....மின்னல்...

"விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல?"...'.விளையாட்டை'....விளையாடி இருப்பார் குரலில்....

சொல்லவோ....வோ.......சொல்லவோ......

இரண்டாவது சரணத்திற்கு முன்னால் வரும் ட்ரம்பெட் ....ஆஹா..

"மஞ்சள் மேனி கொண்ட சின்ன ராணி அவன் கொள்ளும் வேளை கொண்ட கோலம்...

இன்னும் வேண்டும் சுகம் இன்னும் வேண்டும் என்றுக் கெஞ்சிக் கேட்கும் ஒரு பாவம்...

அவள் நூறாக முத்தங்கள் சிந்த சிந்த அவன் போதாது தா என்று முந்த முந்த

அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல?சொல்லவோ....."

"சின்ன "ராணி....சின்ன இதைப் பாடி இருக்கும் அழுத்தம்...'கோ..ல..ம்"....

"கெஞ்சி"கேட்கும் அந்த பாவம்...

"தா"...என்று கேட்கும்...தாவில் ஒரு இறக்கம்...முந்த முந்த....நறுக்....

சொல்லவோ.......இன்னும் சொல்லவோ.....

நான் என்ன சொல்வது....பின்னாலேயே சென்று கொண்டிருக்கிறேன்....45 வருடங்களாக.....பாடல் .......https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE