Visali Sriram

November 30, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...90.

1965,ாமண்ணா அவர்களின் பணம் படைத்தவன் வெளியீடு...புரட்சித் தலைவர்,சௌகார் அம்மா,கே.ஆர்.விஜயா இன்னும் பல முன்னணி நட்சத்திரக் கூட்டணி ...அத்தனை பாடல்களும் வெற்றிப் பாடல்கள்..வாலி அய்யா அவர்களின் வரிகள்....இசை மெல்லிசை மன்னர்....இந்தப் பகிர்வுப் பாடல் ஒரு மனதை உருக்கும் பாடல்...சுசீலாம்மாவின் இனிய குரலில்"தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை"பாடலின் ஆரம்ப வரிகளே பாடலைத் தொடர்ந்து செல்வதற்கான காரணம்...

காட்சிப் படி விஜயா புரட்சித் தலைவரின் காதலி...திருமணம் ஆகிறது..ஒரு குழந்தை கூடப் பிறக்கிறது....குடும்பச் சூழ்நிலை,தந்தையின் கட்டளை ,பணக்காரப் பெண் சௌகார் அம்மாவை மணக்க வேண்டிய நிர்பந்தம் ஒரு புறம்....விஜயாவுக்கு அவரைப் பிரிய வேண்டிய நிர்பந்தம்....அந்தப் பிரிவின் துயரம் இந்தப் பாடல்...

புரட்சித்தலைவர் சோகத்தின் விளிம்பில்,அவரைத் துளைக்கும் அவளின் பாடல்.நம் உயிர் பிரிவதை நம்மால் பார்க்க முடியுமா? என்றுமே நடக்க முடியாத உலக உண்மை....பல சந்தர்ப்பங்களில் நமக்கு மிக நெருங்கினவர்களின் உயிர் பிரிவது கூட நம்மால் பார்க்க முடிவதில்லை....அது ஒரு கொடுமையான கொடுப்பினை...

இங்கே அவன் பிரிவு அவளுக்கு உயிரையே பறித்துக் கொண்டு போகும் காலன்...அவனைப் பிரிந்த பிறகு அவள் வாழ்க்கையே சூனியத்தில் நிலைப்புத் தானே..."தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை..என்னுயிர் பிரிவதைப் பார்க்கின்றேன்...நான்..

என்னுடனே எந்தன் பூவுடல் வாழும்..

உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்..."...உன்னை விட்டுப் பிரிந்த பின் என் பூ உடல் வாழும்...பூப் போலத் துவண்டு போய் வாழும்....ஆனால் என் இன்னுயிர் உன்னுடனே போய்விடும்....செத்தப் பிணம் போல ஒரு வாழ்வு அவளுக்கு இனிமேல்...ஒவ்வொரு வரியிலும் பிரிவுத் துயரத்தை பிழிந்து காட்டியிருப்பார் தன குரலால்...'நான்"...இந்த நானில் என்ன ஒரு அழுத்தம்...பூ உடல் வாழும்...வாவில் ஒரு நெளிவு...உன்னுடனே"உன்"இங்கே ஒரு தீர்மானம்...பாடலைப் பார்ப்பதை விடக் கேட்பதிலேயே சுகம் அதிகம்...

"தெய்வத்தை நினைத்தே தேரென்று வளர்ந்தேன்..

தென்றலை நினைத்தே பூ என்று மலர்ந்தேன்

தேரென்றும் இல்லை பூவென்றும் இல்லை

கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்...கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்...."

அவள், காதல் கணவனை நினைவு தெரிந்த நாளில் இருந்து தெய்வத்தை சுமக்கும் தேர் போல வளர்ந்தேன்...அவரின் தென்றல் போன்ற அண்மை நாடும் பூவாக மலர்ந்தேன்.அவரே இல்லாத போது இனி தேரும் இல்லை பூவும் இல்லை...என் வாழ்நாளெல்லாம் வலியோடும் கண்ணீரோடும் நான்...

வரிகளின் உள்ள வலி எல்லாமே குரலின் இனிமையோடு.....வளர்ந்ததும்,மலர்ந்ததும் உறுதியுடன் என்றால் பூவுமில்லை,தேருமில்லையில் ஒரு சோகம்...துக்கம்....வேறென்ன வேண்டும்....இதில் ஒரு கமறல்...கதறல்...

"மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்

வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்..

மாளிகை இல்லை மன்னனும் இல்லை

கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்.."

மன்னன்,வள்ளல் எல்லாம் புரட்சித் தலைவருக்குப் பொருந்தும் அழகு என்றும் தனிதான்...மையல்.....வாலி தெரிகிறார்...இங்கே....காதல் என்று சொல்லியிருந்தால் அவள் அன்பின் நெருக்கம்,வாஞ்சை இத்தனை ஆழமாக நம்முள் பதியாது..மையல்...தீராக் காதல்...ஒரு மயக்கம்...அவரை

நினைந்து நினைந்து நெருக்கத்தை வளர்த்துக் கொண்டேன்...அவரே போனபின் மனசில் கட்டிய மாளிகை தவிடு பொடியானது...மன்னனில்லாத மாளிகை ஆனதால்....இனி காலம் பூராகக் கண்ணிருடன் கழிப்பதையன்றி வேறு மார்க்கமில்லை..

.மன்னனைநினைத்தே.....பிட்சிங்....அம்சம்...நினைத்தே....."தே'...இதில் ஒரு சின்ன சுழி....பாடல் முழுவதுமே சோகம் என்பதால் ஒரு வேதனையைக் குரலில் படர விட்டு....வார்த்தைகளுக்கு ஒரு தனி அழகு செய்து காட்சியின் தரத்தை உயர்த்தி இருப்பார்கள் சுசீலாம்மா...பாடல் உங்களுடன்....https://www.youtube.com/watch?v=m6K4iHRN5vU