பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்....88.
இன்று நான்
ஒரு கதை
சொல்வேன்....தொடர
வேண்டி...
நவராத்திரி....1964 வெளியீடு...அருட்செல்வர்
ஏபி.என்.,நடிகர்
திலகம்,நடிகையர்
திலகம்.......படமா
அது....காவியம்...ஒரு
வேடம்
என்றாலே
அசத்துவார்...இதில்
9 வேடம்...அவருக்கு
ஒவ்வொரு
வேடத்திலும்
ஈடு கொடுக்கும்
நடிகையர்
திலகம்...சில
காட்சிகளில்
அவரையே மிஞ்சும்
நடிப்பு...அவரே
வியக்கும்
பாவம்....நான் இப்போது
பகிர
இருக்கும்
பாடல்
படத்தின் முதல்
ராத்திரி
பாடல்....ஆரம்பமே
பாடலுடன்...அதுவும்
சுசீலாம்மாதான்...ஆனால் இது
முதல் நாள்
சாவித்திரி
வீட்டை
விட்டு வெளியே
வந்து
தற்கொலைக்கு
முயலும் போது
காப்பாற்றும்
நடிகர் திலகத்தின்
முதல்
நவரசம்...அற்புதம்....அற்புதராஜ்
அவர்
பெயர்...அவருக்கு
மனைவி
இல்லை..ஒரு பெண்
குழந்தை
குட்டி
பத்மினி....அந்த
இரவு அந்தக்
குழந்தையுடன்
கழிக்க
வேண்டிய அவரை ,குழந்தை
ஒரு கதை
கேட்கப்
பிறக்கிறது
பாடல்...கவியரசரின்
வரிகளுக்கு
இசை
மாமா....பாடி
இருப்பது
சுசீலாம்மா
..காட்சியில்
சாவித்திரி
அம்மா....குழந்தைக்கு
கதை
புரிந்ததோ
இல்லையோ....கவியரசரின்
வரிகள்
நமக்குப்
புரியும்...சுசீலாம்மா
குரலின்
சோகம்
வருடும்...
காட்சியின்
இன்னொரு
விசேஷம்
தன்னுடைய அறையில்
கையில்
சிகரெட்டுடன்
படு ஸ்டைலாக
நடிகர்
திலகம் கதையை
வரி விடாமல்
கேட்டுப்
புரிந்து
கொள்வது....என்ன
முகபாவம்....ஆஹா..
"சொல்லவா..கதை
சொல்லவா
நடந்த கதை
சொல்லவா...
பிறந்த கதை
சொல்லவா
வளர்ந்த கதை
சொல்லவா
பெண்ணென்று
பூமியிலே
மலர்ந்த கதை
சொல்லவா...."
சொல்லவா....குழந்தைக்கு
சொல்லும்
கதையல்லவா.....அதில்
ஒரு பாசமான
கெஞ்சல்....கொஞ்சல்....இந்த
4 வரிக்குள்ளே
குழந்தைக்கு
தூக்கம் வர
தூங்கி
விடுகிறது....சொல்லவா.....அந்த
வா வில் ஒரு
இனிமை....அதில்
தூங்கி
இருக்கும்...
நடந்த
கதை...நடக்கும்
கதை...முதல்
சரணம்..
"துணையிருக்க
நினைத்தவர்க்கு
மனமில்லை..இங்கு
மனமிருக்கும்
மனிதருக்கோ
துணையில்லை..
அவருக்கென்றே
நானிருந்தேன்
அவரில்லை..இங்கே
அவளுக்கென்றெ
இவர்
இருந்தும்
அவள் இல்லை..."
நான்
ஒருவரைக்
காதலித்தேன்
அவருக்கு
என்னை மணக்க
மனமில்லை
இங்கே இவரோ
இறந்த
மனைவியை
இன்னும்
மறக்காமல்
அவள்
நினைவுடன்...
எளிமையான
வரிகள்...ட்யூனும்
எளியதே ...பாடி
இருக்கும்
பாவம்....அந்த
இனிமை...சாவித்திரி
அம்மாவின்
முகம்
எல்லாமே
அற்புதம்....
"கள்ளமில்லா
வெள்ளை
நெஞ்சுப்
பிள்ளையே
நான்
காலமெல்லாம்
உன்னைப் போல
இல்லையெ
உள்ளம்
ஒன்று
வளர்ந்ததால்
தொல்லையே
நெஞ்சில்
ஒரு பொழுதும்
அமைதி
இல்லையே..."
பிறந்து
வந்த போது
நெஞ்சு திறந்திருந்தது..பிள்ளையோடு
தெய்வம் வந்து
குடியிருந்தது...வளர்ந்த
வந்த பிறகு
நெஞ்சில்
மயக்கம்
வந்தது..அங்கு
வாழ்ந்திருந்த
தெய்வம்
கொஞ்சம்
விலகிச்
சென்றது"...அதே
கவியரசரின்
வரிகளின்
அர்த்தம்
தான்
இங்கும்...பிள்ளைகளாய்
இருந்து
விட்டால்
இல்லை ஒரு தொல்லை....வளர
வளர உள்ளம்
வளர்ந்து
கன்னா பின்னா
என்று எண்ண
ஓட்டத்தினால்
நெஞ்சில்
அமைதி இல்லை
ஒருவருக்கும்....பெரிய
உண்மை...சின்ன
வரிகளில்....கவியரசர்...smile emoticon..
காலமெல்லாம்
உன்னைப் போல்
இல்லையே....இல்லையே....இதை
பாடி
இருக்கும்
அழகிற்கு
என்ன சொல்வது......அமுதம்...அவ்வளவே...
ஒரு
பொழுதும்
அமைதி
இல்லையே.....அமைதி.....நிம்மதியே
இல்லாமல்
பாடி
இருப்பது
புரியும்....
கேட்பதற்கு
எளிதாக
இருக்கும்
இந்தப் பாடல்
பாடிப்
பாருங்கள்
தெரியும்.....அம்மாவால்
மட்டுமே
இப்படி பாட
முடியும்...சாவித்திரி
அம்மாவால்
மட்டுமே
இப்படி
லிப்சின்க்
செய்ய
முடியும்....
பாடல்
உங்களுடன்.... https://www.youtube.com/watch?v=PMbieMcg0wk