Visali Sriram

November 27, 2014

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்....87.

இன்னுமொரு சோக கீதம்....உருக்கும் சோகம்....பாடலுக்கு ஒரு தனி vibe என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் அது மாதிரி அதில் ஒரு சக்தி....கேட்போரை என்னமோ செய்யும்....பார்க்கும் போது கொஞ்சம் சங்கடமாகத் தான் இருக்கும்....ஒரு பெண்ணை இந்தக் கோலத்தில் பார்க்கும் துன்பம்....அவள் உணர்சிகளைக் கனவாக வடிப்பது இன்னும் கொஞ்சம் இதயத்தை அசைத்துத் தான் பார்க்கும்....பார்க்காமலே கேட்கும் போது இன்னும் வீரியம் அதிகம்...காரணம் பாடி இருப்பவரின் ஈடுபாடு....டெடிகேஷன்....

1961,ாக்கியலட்சுமி திரைப் படம் வெளியானது ஸ்ரீதர் சார் இயக்கம்....மெல்லிசை மன்னர்கள் இசை.....கவியரசர் வரிகள்....பாடி இருப்பது இசையரசி....காட்சியில் பாடுவது சௌகார் அம்மா....வீணையோடு ஈ வி.சரோஜா..காதல் மன்னன்.சௌகாருக்கு பால்ய வயதில் விவாஹம் நடந்து கணவன் இறந்ததாக சொல்லப் படுவதால் இளம் விதவை...உடன் பிறவா சகோதரி வீட்டோடு அவருக்கு உதவியாக இருக்கிறார்.,ஈ.வி.சரோஜாவுடன்.....அவர் கணவர் ஜெமினி....அவர்களிடம் தன் வாழ்க்கையின் வெறுமையை கண்ட கனவாகப் பாடுகிறார்....கேட்பவர்கள் கண்கள் குளமாக...நெஞ்சம் கனமாக....

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி..

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லைக் காரணம் ஏன் தோழி....காரணம் ஏன் தோழி"....கனவு கண்டேன் .......இங்கு கொஞ்சம் இழுத்து....நீண்ட கனவாக இருக்குமோ?

வார்த்தைகள் இல்லை.....சொல்ல முடியாத கனவு..வார்த்தையைத் தேடித்தேடி....சொல்லத் தெரியவில்லை...காரணம் கேட்கிறாள் தோழியிடம்....பாடல் ஆரம்பம் வீணையுடன்....தோழி.....ழி..இ.இ.இ....அருமை

அடுத்த இரண்டு வரிகள் ...வலிகள்...

"இன்பம் சிலநாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி..

இன்பம் கனவில் துன்பம் எதிரில்...காரணம் ஏன் தோழி...."....நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் கேள்விதான்....மேலும் மேலும் துன்பம் தாக்கும் போது நம்மை அறியாமல் சலித்து கேட்பது தான்...யதார்த்தம்...வரிகளில்...வலி...குரலில்....

கனவு என்ன சொல்கிறாள்...

"மணமுடித்தவர் போல் அருகினிலே ஒரு வடிவம் கண்டேன் தோழி

மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி..

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி அவர்

மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி....ஆ ஆ ஆ ஆ.."

கனவினில் என் அருகில் ஒரு ஆண் மகன்...எனக்கு மாலையிட்டுக் குங்குமம் தந்தார் மனைவியாக...

எனக்கு என்ன நடந்தது என்று புரியாமல் வழி தவறி அவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன்...அவரும் என்னிடம் உன்னை மறக்க மாட்டேன் என்று சொல்லித்தான் சென்றார்...ஆனால் மறந்தே விட்டார்...'

தொடரும் ஷெனாய் சோகத்தை அதிகரிக்க...

"கனவில் வந்தது யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி..

கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி

இளமையெல்லாம் வெறும் கனவு மாயம் இதில் மறைந்தது சிலகாலம்

தெளிவு மறியாது முடியும் அறியாது மயங்குது எதிர்காலம்...ஆ.ஆ.ஆ....மயங்குது எதிர்காலம்."

...ஆஆஆ ஆ ஆ...மாலை பொழுதின்...

இந்த சரணம் பல இளம் விதவைகளின் உள்ளக் குமுறல்தான்...அதைக் கவியரசர் (ஒரு ஆண்)உணர்ந்து வரைந்திருப்பது மெய்சிலிர்க்கத்தான்

வைக்கிறது...சில உணர்வுகளின் வெளிப்பாடுகள் சொல்லாமலேயே மடிந்துதான் போகிறது பல சமயங்களில்...வந்தவர் கணவர் என்றார்...ஆனால் கனவு முடிந்ததும் மாயமானார்...இப்படியே என் இளமை எல்லாம் வெறும் கனவாகி கானல் நீராகிப் போகும் நிகழ் காலம் என்றால்..... தெளிவும் அறியாமல்...முடிவு என்ன என்று புரியாமல் எதிர்காலம் மயக்கத்தைத் தருகிறது....பெரிய கேள்விகுறியைக் காலத்தின் முன் வைத்து முடிக்கிறாள் பாடலை...

பாடலைப் பற்றி மேலே எதுவும் சொல்லும் நிலையில் நானில்லை...கேட்கும் தைரியம் குறையவில்லை அம்மாவின் பாடல் இனிமையால்....

பாடல் ராகம் சந்திரகௌன்ஸ் என்றார்கள்....பின்னாளில் இந்தப் பாடல் இன்னொரு famous பாடல் பிறக்க காரணமானது...ஆனாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்....சுசீலாம்மா சுசீலாம்மாதான்....பாடல் உங்களுடன்...https://www.youtube.com/watch?v=fcSLkVjupCQ