Visali Sriram

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...85.

ஒரு தித்திப்பு மழைப் பாடல்...கற்கண்டு தேன்,சர்க்கரை வெல்லம் எல்லாமேஇந்தப் பாடலுக்குப் பின்தான்...அப்படி ஒரு தீந்தமிழ் 24X7 பாடல்...

.கேட்டுக் கொண்டே இருக்கும் பாடல்....விருந்து செவிக்கு மட்டுமா...கண்ணுக்கும் தான்....காட்சியில் நாயகி அப்படிப்பட்ட ஒரு அழகி....அன்னாளில் கவியரசர்,வாலி அவர்கள் பாடல் புனையும் முன்பு பாடல் காட்சியில் வரும் நாயகி யார் என்று கேட்பார்களாம்.....வரிகளாலே ஓவியம் வரையத்தான்...அப்படி கவியரசர் வரைந்த ஒரு மீன் விழியாள் பாடல்.."மீனே மீனே மீனம்மா"...சரோஜாதேவி அம்மா நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டுக்கு அந்நாளில் நான் பைத்தியம்...மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கடையில் வித விதமாய் (+,டயமண்ட்,ஹார்ட்,மீன்,மயில்)இப்படி அச்சு கிடைக்கும்...லோ லோன்னு அலைஞ்சு திரிஞ்சு அந்தப் பொட்டுக்களை வைத்து மகிழ்ந்த ஞாபகம் வருதே...!!!

பாடலின் துவக்க இசை தந்தி இசை....சந்தூர் என்று நினைக்கிறேன்...இனிமையை இன்னும் கூட்ட சுசீலாம்மா....காட்சியில் மீன் பொட்டுடன்...மீனை ஒத்த விழிகளுடன்..அலையலையாய்க் கூந்தல் புரள...அபிநய சரஸ்வதி...இரவு நேரம்....அவள் தனிமைக்குத் துணை...நிலா ஒளி...தவழும் தென்றல்....தொட்டியில் அலைபாயும் மீன்கள்....அவள் காதலை மீனிடம் சொல்லி சொல்லி மகிழ்கிறாள்...நீரில் உள்ள மீனுக்கு காது கேட்க வேண்டாமா.....அதனால் உச்சஸ்தாயியில் "மீனே மீனே மீனம்மா ,விழியைத் தொட்டவர் யாரம்மா..

தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா...சங்கதி சொன்னது யாரம்மா..மீனே மீனே மீனம்மா.......

பல்லவி முழுவதுமே ஒரு குதூகலத்தோடும் உற்சாகத் தோடும் பாடும் அம்மா...ஆடும் சரோம்மா...

தொடரும் ஆ ஆ ஆ ஆ ஆஹா...ஓ ஓ ஓ ஓ ஓஓஹோ ....இதைப்பற்றி என்ன சொல்ல......கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...

இந்தப் பாடல் ஒரு கிடார் ட்ரீட்....தொடரும் கிடார் பீஸ் ஒரு மாஸ்டர் பீஸ்...

துள்ளலான சரணம்...பாடி இருக்கும் அம்மா குரலில் ஒரு 16 வயசுப் பெண்ணின் துள்ளல்...

"என் பாட்டுக்கு ஒருவன் இசையானான்

என் பார்வைக்கு ஒருவன் இசையானான்

பேச்சுக்கு ஒருவன் மொழியானான்

பெண்மைக்கு அவனே துணையாவான்

என் தோட்டத்தில் காவல் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா....."

இவள் பாடுவதிலிருந்து இவள் காதலன் ஒரு காவல் காரன்...போலீஸ்காரன் என்று நினைக்கிறேன்

மொத்தத்தில் போலீஸே கைதியாக,இவள் கைகளில்...

பேச்சுக்கு ஒருவன் மொழியானான்.....இந்த இடத்தில் ரொம்ப ஸ்டைலிஷாகப் பாடி இருப்பார்கள் அம்மா...!!சொல்லடி சொல்லடி யாரம்மா.....அருமை...

அடுத்த சரணம் கவியரசருக்கு மரியாதை...சந்தம் அப்படி ஒரு அழகு...

"அவன் ஆட வைத்தான் என்னைத் தேராக

ஓட வைத்தான் எனை நீராக

துள்ள வைத்தானே மானாக

தூக்கம் வராமல் தடுத்தவன் அவனம்மா

சொல்லடி சொல்லடி யாரம்மா...

தேராக...இங்கு அசைந்து,நீராக...இங்கு ஓடி...துள்ளும்போது மானாக..வரிக்கு உயிர் தரும் பாவம்....அற்புதம்...

சொல்லடி சொல்லடி யாரம்மா....மீனுக்குப் புரிந்தது போல இங்கும் அங்கும் ஓடிக் கொண்டே.....குரலில் இவை அத்தனையும் ஜாலம் செய்யும்....இனிமை...அதற்கு மறு பெயர் சுசீலாம்மா...பாடல் முழுவதும் குறும்பான இனிமை....சரோஜாதேவியின் அழகான பாவம்....கேட்டுக் கொண்டே.....பின் தொடர்ந்து கொண்டே....உங்களுடன்....

1964.என் கடமை....கவியரசர்...மெல்லிசை மன்னர்கள் ...சுசீலாம்மா....மீனே மீனே மீனம்மா...http://www.youtube.com/watch?v=Nr86B4RpR7o