இன்று ஐம்பத்தி எட்டில் வெளிவந்த உத்தமபுத்திரன்

திரைப்படத்தில் ஜி.ராமநாதன் இசையில்,இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலக்ருஷ்ணன் அவர்கள்

வரிகளில் சுசீலாம்மா பாடிய"உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே"....

என்னுடைய ஆறுவயதில் நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்தப் பாடலை,இன்றுவரை பிரமித்துப் போய்க் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

சுமார் நான்கு நிமிடங்கள் வரும் இந்தப் பாடலில் அந்த நாளிலேயே மெல்லிசையை அதி லாவகமாகக் கையாண்டிருப்பார் இசை மேதை ராமநாதன் அவர்கள்,மேற்கத்திய இசையின் வாசனை சற்றுத் தூக்கலாக...

கெட்டவனான கதாநாயகன்(இரட்டை வேடம்)அவனிடமிருந்து ஒரு சாவியை நைச்சியமாக அவனைக் கிறங்க அடித்து வாங்கும் ஒரு சாகசப் பாடல்.இந்தப் பாடலின் சிறப்பு 

இதில் சில வார்த்தைகளை அம்மா உபயோகித்திருக்கும் விதம்...சொன்னதினாலே..ஆனதினாலே,கொண்டதினாலே,உள்ளைத்தைப்போலே...இந்த"னாலே...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக ஒலிக்கும்....அந்த"போலே"அதில் ஒரு துள்ளல்,அலட்சியம்...நம்பிக்கை தொனிக்கும்.

பொன் போலே மின்னும் கண்ணா உன் அங்கம்....இந்த அங்கம்...இங்கு ஒரு பொடி சங்கதி...அதே மாதிரி விழியாலே பேசும் கலை மானைப் பாராய்..."பாராய்"அங்கு ஒரு பிரட்டு சங்கதி...

இந்தப் பாடலின் சிறப்பு...பிரமிப்பு எல்லாமே அந்த அகார சங்கதிகளில் தான்.....நான்கு நிமிடப் பாடலில்,வரிகள்,பின்னணி இசை போக கிட்டத்தட்ட ஐம்பது வினாடிகள் வெறும் அகார சங்கதிகள்.....அவை அசுர வேகத்தில் வேறு விழும் அற்புதங்கள்....

சுசீலாம்மவைத் தவிர வேறு யாராலையும் பாட முடியாத இசை அருவிகள்.....இன்று கேட்டால் கூட ஆ என்று வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக்கொண்டிருப்பேன்...கண்மூடி கண் திறப்பதற்குள் மின்னல் மாதிரி என்ன ஒரு வீச்சு.....பின்னால் பொழியும் மழையாய் அது என்ன ஒரு காலப்ரமாணம்.....இறுதியில் காட்டாறு வெள்ள சுழலாக ஒரு முத்தாய்ப்பு ப்ருகா...ஆஹா..

.இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் இது.....நடிகர் திலகத்தின் போதை...பப்பிம்மாவின் வேகமான ஆட்டம்...சுசீலாம்மாவின் அபார இசை வெள்ளம்.......இசையின் ஒரு உச்சப் பரிமாணம்....இதோ உங்களுடன்....

http://www.youtube.com/watch?v=Pa91CW-G4bk