Visali Sriram

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..43.

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்.....இந்தப் பாடல் இரண்டு முறை வரும்....முதலில் கப்பலில் சந்தோஷமாகப் பாடுவதாகவும்,இரண்டாவது நடிகர் திலகம் உறக்கம் வராமல் தவிக்கும் பொழுது ஒரு தாலாட்டு மாதிரி கொஞ்சம் சோகமாக ஒலிக்கும்.இரண்டு உணர்ச்சிகளிலும் சுசீலாம்மா மிக அற்புதமாகப் பாடி யிருப்பார்கள் (வழக்கம்போல்)வரிகள் இரண்டிலும் ஒன்றேதான் என்றாலும்...பாடியிருக்கும் விதத்தில்தான் எத்தனை வித்தியாசங்கள்.முதலில் சந்தோஷமாகப் பாடும்போது ஒரு நாணம்,மென்மை.........தாலாட்டுப் பாடத் தாயாகவில்லை என்று பாடும்போது குரலில் ஒரு வெட்கம் காட்டியிருப்பார்கள்.அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை.....பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன...இந்த இடத்தில் சரோஜா தேவி ஒரு கையசைப்பு....ஆஹா.....ஆயிரம் என்ன...என்ன...என்று கேள்விகளை ஒரு கையசைப்பில் காட்டுவார்...

இதே பாடல் சோகத்தில் பாடும்போது இரவின் நிசப்தத்தில் ஒரு குயில் இழைக்கும் சோக கீதம் போல் மெல்லிசை மன்னர் அமைத்திருப்பார்.

தூக்கம் வராத நடிகர் திலகத்துக்கு சரோஜாதேவி பாடும் மென்மையான உன்னை ஒன்று கேட்பேன்.....

இதிலே பின்னணி கொஞ்சம் நிதானம்..ஒன்று கேட்பேன்.....இரண்டாம் முறை கேட்..பேன்...அங்கே ஒரு அழுத்தம்...என்னைப் பாடச் சொன்னால்...என்னைப் பாட அதிலே ஒரு பாவமான" என்னை...."...

நிலவிலா வானம்....நீரிலா மேகம்...அந்த நீரிலெ ஒரு ஓட்ட சங்கதி.....கண்ணை மெல்ல மூடும்....மெல்ல...அந்த ல்லாவிலே ஒரு அழுத்தம்...என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்?கேட்கும் நயம் குரலில்...பார்க்கும் நயம்..சரோஜாதேவி நடிப்பில்...தூக்கத்திலும் ஒரு நயம்...அது நடிகர்திலகத்திடம்....

சுசீலாம்மாவோ.......சொல்லவே வேண்டாம்....அதுவும்.....கண்ணை மெல்ல மூடும்....இந்த வரிகளில் மூடாத நடிகர்திலகத்தின் விழிகள் மெல்ல மூடும் பார்க்கணுமே.....காண,கேட்க கோடி கண்ணும்,காதும் வேண்டும்...இந்தப் பாடலில் மற்றொரு சிறப்பு பின்னணி இசை.....அதுவும் அந்தக் குழலோசை.....இரவின் மடியில் இந்தப் பாடலைக் கேட்டால் ஒரு இனம் புரியாத சுகமான சோகம் இழையோடுவதை உணரவேண்டும்.எத்தனை முறை கேட்டிருந்தாலும்,உங்களுடன்,இந்த உணர்சிகளுடன் இதைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு தனி சுகம்.....இதோ உங்களுடன்....