பாடலைத்
தொடர்ந்தே சென்றேன்....3....:)
இன்றைய
பகிர்வு.....1964 இல் எ.வி.எம்.நிறுவன
வெளியீடு சர்வர்
சுந்தரம் திரைப்படத்தில்
இருந்து.
குயிலும்....கிளியும்...தத்தை
நெஞ்சம் முத்தத்திலே
தித்தித்ததா.......இந்தப்
பாடல் ஒரு பரவசம்....பார்த்துக்கொண்டே
கேட்டால் கொள்ளை
இன்பம்...சர்வர்
சுந்தரம் படத்தில்
கதையின் நாயகி
தன் காதலை கிளியிடம்
சொல்லும்படி அமைக்கப்
பட்டிருக்கும்..இது
ஒரு அழகான பேசும் கிளி..
.மெல்லிசை மன்னர்
குழுவில் சதன்
என்று ஒரு பலகுரல்
மன்னன் இருந்தார்....அற்புதக்
கலைஞன்.அவர் கிள்ளைமொழி
பேச....குயிலம்மா
கே.ஆர்.விஜயாவுக்ககப்
பாடி இருப்பார்கள்.பாடல்
முழுவதுமே தேன்மழைதான்.
வார்த்தைகள்
வேறு தத்தகாரம்
அடுக்கு....தத்தை
,முத்தம்,தித்தித்ததா....வித்திட்டதா....ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விதமாக
பளிச்சென்று பாடி
இருப்பார்கள்
.பாடல் ஆரம்பம்
கிளி கூவினதும்
ஒரு குழல் பின்னணி....எங்கேயோ
இழுத்துக்கொண்டு
போக....தத்தை நெஞ்சம்
என்று மெதுவாக
ஆரம்பித்து,முத்தத்திலே
நாணிக்கொண்டு,தித்தித்ததா
இல்லையா என்று
ஒரு கொஞ்சலுடன்
வெகு அழகாக பாடி
இருப்பார்கள்
...அதைத்தொடர்ந்து
வரும் பின்னணி
இசை அது ஒரு தேனிசை....அக்கார்டின்
புகுந்து விளையாடி
இருப்பார்....இல்லையா....அது
ஒரு ஏக்கத்தின்
இல்லை ...யா....கத்தும்
கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா.....பொட்டிட்டதும்
அத்தான் நெஞ்சைத்
தொட்டிட்டதா இல்லையா....இந்த
அத்தான் என்கிற
பதத்திற்கு இத்தனை
இனிமை இருக்கா
என்று என்னை வியக்க
வைத்ததே..சுசீலாம்மாவின்
அத்தான் தான்....அது
பற்றி ஒரு பெரிய
கவியரங்கம்...இசை
அரங்கம்....ஏன் டாக்டரேட்
வாங்க தீசிசே எழுதலாம்....இந்த
அத்தானில் ஒரு
சுருக் சங்கதி.....சொல்லவோ
எழுதவோ முடியாது
கேட்கத்தான் வேண்டும்....
அடுத்தது
அகாரம்....நிறுத்தி
நிதானமாய் ஆஹா...ஓஹோ...ஒரு
டேக் ஆப் அங்கே....ஒரு
சில வினாடி எங்கே
போகிறோம் என்றே
தெரியாத ஒரு ஆஹா...ஓஹோ....கொத்தும்
கிளி கன்னங்களால்....இங்கு
ஒருடோலக் டேகா.....அது
ஒரு மெல்லிசை மன்னர்
அக்மார்க்....அருமை....கோடிட்டதும்...கோடி
சுகம்....நேரிட்டதா
இல்லையா....வரிகளுக்கு
வாழ்வு இங்கே....கோடி
சுகத்தையும் ஒரு
சங்கதியிலேயே.....!!!!கண்பட்டதும்,கைபட்டதும்
புண்பட்டதா இல்லையா...புண்
பட்டதும் பெண்மை
கொஞ்சம் பண்பட்டதா
இல்லையா.....இங்கு
பெண்மை....என்றால்
என்ன?ஒரு விளக்கம்
அவர்கள் அதைப்
பாடி இருக்கும்
மென்மையில் தெரியும்.....மிக
மென்மையான பெண்மையான
குரல் இந்த உலகத்திலேயே
இந்த அம்மாவுக்குத்தான்.....அது
ஒரு பெரிய பாக்கியம்....என்ன
இனிமை...என்ன இனிமை.....பாடல்
முழுவதும் அந்தக்
கிளியும் பதில்
சொல்லிக் கொண்டே
வரும் அழகு என்ன...புன்னகை
மாறாமல் குறும்பாக
அதோடு பேசும் விஜயாவின்
வனப்பு என்ன...பின்னணி
இசையின் பெருமையை
சொல்ல வார்த்தையே
இல்லை....வரிகள்
வைரம்.....மொத்தத்தில்
அத்தனை அழகுக்
கொட்டிக் கிடக்கும்
பாடல் இதோ உங்களுடன்.
http://www.youtube.com/watch?v=uvUAsOIHYlE&feature=share