Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...52..

"தண்ணிலவு தேனிறைக்க...தாழை மரம் நீர் தெளிக்க".....இனிமையாக குயில் கூவ ஒரு பாடல்.

பாடல் இடம் பெற்றத் திரைப்படம்..படித்தால் மட்டும் போதுமா?கவியரசர்,மெல்லிசை மன்னர்...சுசீலாம்மா....

வாத்தியப் பின்னணி எதுவும் இல்லாமல் அம்மாவின் தெளிந்த குரலில் மென்மையாகத்"தண்ணிலவு தேனிறக்க"வரிகள்...தொடரும் குழல்....சாவித்திரி அம்மா....கையில் ஒரு குடத்துடன்(அதையும் தோளில்)வைத்துக் கொண்டிருக்கும் காட்சி கண்முன்னே விரிகிறது....அந்த முகத்துக்கே பாதி சொத்தைக் கொடுத்துடலாம்...மீதி பாதி பாடுபவர்க்கு....என்ன செய்வது?எமக்கு அத்தனை வசதி இல்லையே???அதனால் வார்த்தையிலாவது வாயாரச் சொல்கிறேன்...

அன்பர் உள்ளத்தை நினைந்து பாடும் நாயகிப் பாடல்...நெஞ்சமென்னும் ஆழ்கடலுக்குள் அவன் நினைவுகள் தொடர்ந்து அலையலையாய்....அவனைத் தன் மனதாரத் தஞ்சம் அடைந்த பெண்மலர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கலங்க.."அஞ்சி அஞ்சி"..இடை துவள வந்தாள்...கவியரசரின் கவி நயம்....காதல் வயப்பட்ட நாயகிக்கு இடை மெலியுமாம்,உடை தளறுமாம்,நடை பின்னுமாம்.....இங்கே துவளுகிறது இடை...அப்படி ஒரு விரகம்...அங்கு அன்பர் உள்ளம் தனை நினைந்து நின்றாள்"...நினைந்து நின்றாள்"..ஆ ஆ ஆ...

சுசீலாம்மவின் உச்சரிப்பு ...இங்கு அதை பற்றிப் பேசியே ஆக வேண்டியக் கட்டாயம்...தாய் மொழி தெலுங்கு...எனக்குத் தெரிந்த வரை அந்த மொழியில் மெல்லின சொற்கள் அவ்வளவாக இல்லை...இந்த சரணம் முழுக்க மெல்லியலாளுக்காக மெல்லினத்தை சற்று தாராளமாக ஏற்றி இருப்பார் கவியரசர்...

அஞ்சி,அஞ்சி...நெஞ்சம்...நினைந்து....இதை அம்மாவைப் போல் இன்று வரைத் தமிழ் பாடல்களில் யாரும் உச்சரித்ததில்லை....அப்படி ஒரு சுத்தமான உச்சரிப்பு...அவருடைய பலம் அது...கவியரசருக்கும் அவர் மேல் அப்படி ஒரு நம்பிக்கை...பாதி பாடல்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான்..

நடை பயில வந்தாள்....இந்த வந்தாளில் ஒரு சங்கதி...ஆனந்தமான அற்புதம்...

அடுத்த சரணம்...மெல்லினம்..இடையினம் கலந்து..

விண்ணளந்த மனம் இருக்க,

மண்ணளந்த அடி இருக்க,

பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்..

ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்...கண்டு நின்றாள்.....அங்கு நாமும் கொஞ்சம் நிற்கிறோம்..

அடுத்த சரணம்....வல்லினம்...டகாரம்....

பொட்டிருக்கப் பூவிருக்க பூத்த மலர் மணமிருக்கக் கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள்..ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்..கண்டு நின்றாள்...

நினைத்துப் பாடிய நாயகன் நேரில் வந்து நின்றால்.....அதை அப்படியே குரலில் சுசீலாம்மவும்...முகத்தில் சாவித்திரி அம்மாவும் காட்டி விடுவார்கள்...இது ஒரு ஆடியோ வீடியோ ட்ரீட்...

இதில் நடுவில் தாராளமாகத் தேன் பொழியும் ஆஹா ஹா..அஹா ஹா...

ஒரு குளுமையான பாடல்...மென்மையான சாவித்திரி....தமிழோடு சொப்பு வைத்து விளையாடி இருக்கும் கவியரசர்....இவர்களுக்கு நல்ல தீனி போட்டிருக்கும் மெல்லிசை மன்னரின் இசை விருந்து.....

அழகான பாடல்....உங்களுடன்....
NB.....
பாடல் வரிகள் மாயவனாதன்....கவியரசர் கண்ணதாசன் அல்ல....தவறுக்கு வருந்துகிறேன்.....மன்னிக்கவும்.