Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...48.

..

ஊனம் ஒரு குறையல்ல.....சமீப காலங்களில் நாம் அடிக்கடி கேட்கும் சங்கதி...2004 ஆண்டு வெளிவந்த ஆட்டோகிராப் திரைப் படத்தில் வந்த ஒரு பாடல் இதை வலியுறுத்துவதாக இருந்ததற்காக பாடலுக்கு,கவிஞருக்கு,பாடகிக்கும் தேசிய விருது கிடைத்தது நினைவிருக்கலாம்....இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் இது புத்தம் புதியதாக இருக்கலாம்..ஆனால் சுமார் 45 வருடங்களுக்கு முன்னரே இந்தக் கருத்தில் பின்னப்பட்ட பாகப் பிரிவினை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் இன்றைய பகிர்வு.....அன்று அந்தக் கவிஞனும் உணரப்படவில்லை....பாடலை இன்றுவரை நெஞ்சில் நிறுத்தியிருக்கும் அந்தக் குரலுக்கும் ஒரு விருதும் தரப்படவில்லை.....விருதுகளுக்கெல்லாம் அப்பற்பட்ட இந்தக் கலைஞர்கள் எதையும் எதிர்பாராமல் வாரித் தந்த பொற்குவியல்கள்தான் எத்தனை எத்தனை??

பாகப் பிரிவினைத் திரைப் படத்தில் நடிகர் திலகத்துக்கு ஒரு கை ஒரு கால் ஊனம்....மனமோ தங்கம்...வாலிபனாகும் அவனுக்கு மணம் பேசி முடிக்கிறார்கள் ...பொன்னி என்ற ஏழைப் பெண் மனைவியாகிறாள்...அன்று அவர்களுக்கு முதலிரவு...ஒரு கை மடிந்தும்,இழுத்து இழுத்து நடக்கும் ஒரு காலுடன் அவன் கண்ணாடி முன்னால் நாணத்தோடு வந்து நெற்றிப்பொட்டை சரி செய்து கொண்டு பள்ளியறைப் பிரவேசம்...மனசுக்குள் ஒரு தயக்கம்...தாழ்வு மனப்பன்மை...அதை அவன் முகம் காட்டுகிறது....அவள் குணவதி...புரிந்து கொள்கிறாள்...பாடல் தொடங்குகிறது...

கவியரசரின் வரிகள்...இசை மெல்லிசை மன்னர்கள்...பாடியிருப்பது சுசீலாம்மா....

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ....உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ???அங்கம் குறைந்தவனுக்கு ஊக்கப்படுத்த புது மனைவியே என்னும் போது அதற்கு யானை பலம் இல்லையா???

மாசறு பொன்னே...மாத்துக் குறைந்தாலும் தங்கம் தங்கம் தானே ....அழகாக அங்கே அங்கத்துக்காக தங்கத்திற்கு உவமை...உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ....அவனுக்குள் மின்னல் போல் ஓராயிரம் நம்பிக்கை ...அதை அழகாகக் காட்டி இருக்கும் நடிகர் திலகம்...

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ??சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே மாற்றம் காண்பதுண்டோ...மாற்றம் காண்பதுண்டோ???

சிங்கத்தை ஏன் இழுத்தார் இங்கே....காட்டுக்கு ராஜா...மிருகங்களில் ஒரு கம்பீரமானது அதை அந்த ஆண் மகனுக்கு சொல்கிறள்!!!காலில் பழுது என்றால் சிங்கம் முயலாயிடுமா என்ன...எண்ணமும் செயலும் ஒன்றாக செயல்படும் வரையில் மாற்றம் காண்பது அரிது....சொல்ல வருவது இந்த சின்னக் குறையை மறந்து விட்டு ஒன்றி செயல் படுதல் அவசியம் என்பதே...

அவனுக்கு இன்னும் கொஞ்சம் ஊக்க மருந்து கொடுக்கிறாள்..."கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா???இதைப் பாடி இருக்கும் அழகைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்....தவழ்ந்து வரவில்லையா??கேட்கும் அழகில் நாம் காட்சியை காணொளியில் பார்க்கும் ஒரு எபெக்ட் கொடுத்து விடுவார்கள் அம்மா...இரு கைகளினாலே மலர்களை அணைத்து வாசம் தரவில்லையா???வாசம் தரவில்லையா...இரண்டாம் முறை பாடுவது கருத்துக்கு ஒரு அழுத்தம் கொடுக்க...

இறுதி சரணம்...காலம் பகைத்தாலும் கணவன் பணி செய்து காதல் உறவாடுவேனே...துயர் வானம் பெரிதென்று வாழும் குலமாதர் வாழ்வின் சுவை கூறுவேனெ....வாழ்வின் சுவை கூறுவேனே...

இந்தத் திருமண பந்தத்தில் என்ன இடர் வந்தாலும் சமாளித்து,உனக்காகவே வாழ்ந்து இந்த குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுவேன்...கட்டியம் கூறுகிறாள்...

இந்த வரிகளின் வலிமைக்கும்...இசையின் இனிமைக்கும்,அம்மா பாடி இருக்கும் மேன்மைக்கும் கிடைக்காத விருதுக்கு மதிப்பில்லை....ஆங்கிலத்தில் இதை டெடிகேஷன் என்று சொல்வார்கள்..அம்மாவுடைய அர்ப்பணிப்பு இந்தப் பாடலில் நூறு சதவிகிதம்....சரோஜாதேவியும் காட்சியில் மிக சிறப்பாக செய்திருப்பார்கள்...மற்றவரைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?ஒரு முழுமையான பாடல்...பின்னணி இசைக் கருவிகளும் மென்மைக்கு மேன்மை சேர்க்கும்...http://www.youtube.com/watch?v=ZCwKgD9E7Qo