Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..57.

இன்று சுகமோ சுகம்...சுசீலாம்மா பாடலே சுகம்...வேறென்ன புது சுகம்???பாடலே சுகத்தைப் பற்றியது....நடிகர் திலகத்திடம் ஒரு விவாதத்துக்குப் பிறகு "பளார்"என்று கன்னத்தில் அடி வாங்கிய விஜயாவுக்கு அந்த அடி சுகம்...அவருக்கு அது வலித்ததோ இல்லையோ...சுசீலாம்மா சுகம்..சுகம்...சுகம்...என்று பாடத் தொடங்கியதும் அடித்த நடிகர் திலகம் மட்டுமா விழுந்தார்...நாமும் அந்த இனிமையில் விழுந்து விடுவோம்....

1967 இல் வெளி வந்த தங்கைத் திரைப்படத்தில் எல்லாப் பாடல்களுமே சிறந்த பாடல்கள்....வரிகள் கவியரசர்...இசை மெல்லிசை மன்னர்கள்..சுசீலாம்மா பாடிய இந்தப் பாடலைத் தொடர்ந்து இன்று செல்வதாயிருக்கிறேன்...

ஊடலுக்குப் பின் கூடலுக்கு அஸ்திவாரம் இந்தப் பாடல்...காதலி மனம் திறந்து காதலை அவனிடம் சொல்லும் பாடல்...

வலியோடு வந்த சுகம் துன்பமான இன்பமானது...இதைக் குரலில் எத்தனை விதமாகக் குழைத்துக் கொடுக்கிறார்கள் கேளுங்கள்...பாடல் முழுவதும் அம்மாவோடு பயணிக்கும் பியானோ.....

சுகம்..சுகம் அது துன்பமான இன்பமானது...இரண்டாம் முறை...சுகம்...சுகம்ம்....ஒரு அழுத்தம்...

"மனம் பேதை மனம் அது மாறாத சொந்தமானது...'..அடி வாங்கினாலும் சொந்தம் மாறாத சொந்தமானது...உரிமையோடு கை நீட்டியதாலோ???

"இனம்...பெண்களின் இனம் அது பூப்போல மென்மையானது"....பெண்ணினம் மெல்லின வகையைச் சேர்ந்தது...பூப்போல மென்மையானது...(.சில நேரங்களில் அதனாலேயே வாடிவிடுவதும் உண்டு)

'நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது..

என் பெண்ணுள்ளம் எதிரொலி போல் நான் என்றது,

நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது

நான் வேறோ நீ வேறோ யார் சொல்வது?"

மனதைக் கேட்காமலேயே வாய் உன் பெயர் சொன்னது...என் பெண்ணுள்ளம் அதன் எதிரொலி போல நான் என்றது....இருவரும் ஒன்றாகி நாம் ஆன பின் ஏன் வேறு படுத்தி சொல்ல வேண்டும்????

சுகம்...சுகம்....அதைத் தொடரும் ஒரு ஆ ஆஹா...ஆஅ..ஆஅ ஆஹா ஹா ஹா...ல ல ல லா ல ல...அந்த இனிமை...தேன் கூட்டிலிருந்து சொட்டும் துளிதுளித் தேன்...

"உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது

வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது

பூவாகிக் காயாகிக் கனியானது,

நீயாகி நானாகி நாம் ஆனது"

உன்னோடு இணையும் நாளும் வந்தது...இந்த இடத்தில் அந்த நாளின் சிறப்பைச் சொல்லும் ஒரு சங்கதி...நாள்...வந்தது...

இருவரும் ஒன்றானதும் சுகம் துக்கம் இரண்டும் இருவருக்கும் பொதுவானது...பூ காயாகி கனியானது....திருமண பந்தத்தில் பூவாக இருந்த என் உறவு காயாகிப் பின் தாய்மையாக கனிந்தது...நீயும் நானும்...நாம் ஆனோம்.....இது எல்லாம் அவள் கற்பனையே....எத்தனை தூரம் கற்பனை செய்திருக்கிறாள்......?

இங்கு நாமாகி...அங்கு ஒரு அழுத்தம் கொடுத்து சுகத்தைக் கூட்டி இருப்பார்கள் குரலில்.....

சுகம்...சுகம்.....சுகம்......பாடல் முழுவதும் பரவி,நிறைந்து நிற்கும் சுகம் உங்களுடன்.....