Visali Sriram

 · 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...41.

இன்று கிருத்திகை விரதம் ...எனவே இன்றைய பதிவு...சக்தியும் அவள் பிள்ளை கார்த்திகேயனும்...

சொல்ல சொல்ல இனிக்கும் பயணம்....கேட்க கேட்க தெவிட்டாத பயணம்....கந்தன் கருணை திரைப் படத்தில் கவியரசரின் வரிகளுக்கு,திரை இசைத்திலகம் மாமாவின் இசையமைப்பில்,நடிகையர் திலகத்தின் அற்புதமான பாவத்தில் இன்னிசைமழை பொழிந்திருக்கும் சுசீலாம்மாவின் இந்தப் பாடல் ஒரு தெய்வீக கானம்...

.அன்னை உமையவள் தன் அழகு மகன் கந்தனின் பெருமை கூறும் அந்தமான பாடல்....காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு......ஆனால் உலகநாயகிக்கு அவள் மகன் நிஜமாகவே பொன்முருகு...என்ன பெருமிதம்

அந்த தொகையராவில்.....தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருள் உரைத்து..தகப்பன் சாமி என்று பெயர் பெற்ற முருகா.....மண்ணுக்கும் விண்ணுக்கும் சாமியென வந்த என் சுவாமிக்கு நாதனே.....சுவாமிநாதா.....இந்த வரிகளை இப்படி ஒரு உச்சஸ்தாயியில் இவ்வளவு இனிமையாக இவரைத்தவிர வேறு யாராலும் பாடமுடியாது என்பது எனது முடிவு.....

கோபம் கொண்டமுருகன் இந்த குயில் கூவலிலே சினம் தணிந்தான் என்று கூறவும் வேண்டுமோ?

சுவாமிக்கு நாதனே இங்கு ஒரு அழுத்தம்....சாமிநாதா.....இங்கு ஒரு சங்கதி....பரவசம்...

.சொல்ல சொல்ல இனிக்குதடா....உள்ளமெல்லாம்....உளமார அனுபவித்து பாடின வரிகள்....இனிக்காமல் என்ன செய்யும்?உன் புகழ் இந்த உலகே பாடும்....யுகங்கள் மாறி மாறி சந்திக்கும் போது உன்னுடைய முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது.....

முருகு....அன்னை உமையவள் அளித்தவரம்....முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்....அந்த அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்.....ஒரு தாயின் பெருமிதம்....சுசீலாம்மா அற்புதமாகப் பாடிய வரிகள் அது.....உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும் போது..அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ....முருகா...ஆ..ஆ...ஆஹா...இதயக் கோவிலில் அவன் குடி கொண்டுவிட்டால் ஆனந்தம் நமக்கு மட்டுமா....நாம் அன்போடு வாழ்த்தும் அனைவரையும் உள்ளிருந்து அவன் வாழ்த்துவதால் எங்கும் ஆனந்தம்,எல்லோருக்கும் பேரின்பம்.....அந்த இறுதி முருகா.....அது சொர்க்கம்.....அப்படியே குரலோடு சேர்த்து கட்டிப் போட்டு சுவர்கத்திற்கு கூட்டிக்கொண்டு போகும் அம்மாவின் இந்தப் பாடல் இதோ உங்களுடன்......குந்தலவராளி ராகத்தில் படு சுத்தமாக அமைத்திருக்கும் மாமாவையும்....ஒரு சிறு இடறில்லாமல் அனாயாசமாகப் பாடி இருக்கும் அம்மாவையும் என்ன சொல்வது......அருமை...அருமை.......

http://www.youtube.com/watch?v=ZCEVEOB7hao