Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...54.

பாடல் வாயிலாகத் திரைப்படத்தின் கதை..கதாநாயகியின் நிலை..எல்லாமே அத்தனை அற்புதமாக விளக்கும் பாடல் வரிகள்...படம்..காவியத்தலைவி...1970,வருட வெளியீடு.....இன்றுவரை மனதைக் கவ்விக்கொண்டிருக்கும் சோகத்திற்கு இந்தப் படத்துக்கும் பாடலுக்கும் ஒரு சிறிய இடம் உண்டு...

படத்தில் அத்தனை பாடல்களுமே ஹிட் பாடல்கள்.இசை மெல்லிசை மன்னர்...சொல்லவும் வேண்டுமோ???சுசிலாஅம்மாவின் நெஞ்சை உருக்கும் குரல்....அடிக்கடி இந்தப் பாடலை நான் கேட்பதில்லை...ஆனால் அடி மனத்தில் எப்போதும் அந்த ஷெனாயும் சாரங்கியும் சுசீலாம்மாவும் உறுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்...வில்லியம் வெர்ட்ஸ்வொர்த்தின் "சாலிட்டரி ரீப்பெர் மாதிரி"...

கதையின் நாயகிக் காலத்தின் கோலத்தால் காதலனை விட்டு காமுகன் ஒருவனுக்கு மனைவியாகிறள்..ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகும் அவளை அவன் தகாத இடத்தில் சேர்த்து

ஒளிகிறான்....குழந்தைக்காகத் தன் இசையல் பிறரை மகிழ்வித்து ஜீவனம்.....அங்கு காதலன் பிரவேசம்.....அவனுக்குத் தன் கதையைப் பாடலாகச் சொல்லும் காட்சிப் பாடல்...கதையில் ஒரு திருப்பு முனை....சிச்சுவேஷன் பாடல்

மெல்லிசை மன்னர் பாடல் முழுவதும் வட இந்தியக் "கோட்டே"..பாடலாக,சாரங்கி,தபலா,ஷெனாய் வாத்தியங்களால் ஒரு களை சேர்த்திருப்பார்.....அம்மாவின் "அமீர் கல்யாணி"...அது பற்றி நாம் பல பாடல்களில் ரசித்திருக்கிறோம்(என்னுயிர் தோழி,தித்திக்கும் பாலெடுத்து)...இது ஒரு சோகம் பின்னிப் பிணைந்து வரும் பெண்ணின் அவலப் பாடல்....உருக்கி விடுவார்கள் அம்மா..கல் நெஞ்சக் காரர்களையும்....

"நலம் கேட்க வந்தாயோ? ஓ ஓ...இல்லை சுகம் காண வந்தாயோ....

முகம் பார்க்க வந்தாயோ???என் கதை கேட்க வந்தாயோ????என் கதை கேட்க வந்தாயோ????...ஆரம்ப இந்த 4 வரிகளில் உருக்க ஆரம்பிப்பார்...துணைக்கு சாரங்கியும் ஷெனாயும்...வந்தாயோ???இங்கு ஒரு ஓஓ??

இல்லை....அந்த இல்லையில் துன்பத்தின் எல்லையாய் ஒரு சங்கதி...."சுகம் காண வந்தாயோ??அந்த ஓஓ....

முகம் பார்க்க...பார்க்க இங்கே ஒரு சங்கதி...அதை சொல்லக் கூட முடியாத மின்னல் சங்கதி....

"இல்லை.".இங்கு ஒரு அழுத்தம்......"என் கதை கேட்க வந்தாயோ......ஒரு இறக்கம்...என் கதை கேட்க வந்தாயோ???

முதல் சரணம்...நடக்கும் கதைக்குள் நடந்த கதை..."பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணிரும் தெரியவில்லை...கண்ணிரில் கதை எழுதிச் சொன்னாலும் புரியவில்லை...இரண்டாவது புரியவில்லையில் ஒரு புரியாத புலப்படாத தெய்வ சங்கதி...அம்மா....ஆஹா..

"மாலையிட்ட பாவியிடம் மஞ்சளுக்கு மகிமையில்லை

மானமுள்ள பாவையென வாழ ஒரு வாழ்க்கையில்லை..

கட்டிலுக்குக் கடன் கொடுத்தாள்..தொட்டிலுக்கு விலை கொடுத்தாள்..கட்டளையில் பிறந்த பிள்ளைக் காவல் காண வாழுகின்றாள்..."

நடந்த கதை இதுதான்...திருமணம் செய்து கொண்டக் கணவன் என்னும் பாவி அந்த பந்தத்தை மதிக்கவில்லை...மானத்தோடு வாழவும் வழியில்லை...மனைவியாக அவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக் கடன்....அது தந்த பரிசு ஒரு குழந்தை...அதற்கும் அந்தப் பாவி ஒரு விலை பேசி வாங்கிக் கொள்கிறான்....இனி வரும் காலம் குழந்தைக்காக ஒரு வாழ்க்கை,அதன் காவல் அவள் அதற்குத் தரும் வேலி...

அடுத்த சரணம்...தன் நிலை விளக்கம்..

"குங்குமத்தில் வாழ்ந்திருந்தால் மண்டபத்தில் வேலை இல்லை

கோவிலுக்குள் தெய்வமில்லை வாசலுக்கு வெளியில் வந்தாள்..

பொட்டு வைத்து அலங்கரித்தாள்,புன்னகையில் பொய் வளர்த்தாள்..

பட்டவரைப் போதுமென்று பாட்டுப் பாட சபை புகுந்தாள்....."

கணவன் சரியாக அமைந்திருந்தால் நானும் கௌரவமாகக் குடும்பத்து விளக்காக வாழ்ந்திருப்பேன்...அது சரியாக இல்லாததால் படி தாண்டியப் பத்தினியானேன்...ஊருக்காகப் பொட்டு வைத்து அலங்கரித்துக் கொண்டு,பொய்யாகப் புன்னகைத்துக் கொண்டுப் போதுமடா இந்த வாழ்க்கை என்று நொந்து வெந்துதான் பாட்டுப் பாட அரங்கத்துக்கு வந்தேன்....சொல்லி விம்முகிறாள்...இந்த சோகத்தை அப்படியே,வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தைக் கேட்பவர் மனதை நெகிழ வைக்க சுசீலாம்மவைத் தவிர வேறு யாரால் முடியும்??/மெல்லிசை மன்னருக்கு அது தெரியும்....களமிறக்கியிருக்கிறார்...அம்மாவும் பிழிந்து எடுத்து விடுவார்கள்...இனிமையிலும்,உணர்ச்சிகளிலும்...காட்சியில் ஜெமினி மனம் இளகாமல் கல்மனதாய்க் காசை வீசி எறிவதாய்க் காட்சி முடியும்.....நாயகி தொய்ந்து தளர்ந்து உள்ளே செல்வதாய் முடியும் காட்சி....

நாயகி உள்ளே போனாலும்...பாடலும்..அம்மாவின் குரலும் நம் உள்ளேப் புகுந்து கொள்ளும் என்பதுதான் நிஜம்..."பாட்டுப் பாட சரண் புகுந்தாள்"இரண்டாம் முறை ஒலித்ததும்..ஒரு இடம் விட்டு"பெண் பார்க்கும் மாப்பிள்ளைக்குக் கண்ணிரும் புரியவில்லை"....காலத்தை வென்று கலங்கடிக்கும் பாடல் இது....மேலே இது பற்றி எழுத வார்த்தையும் இல்லை எனக்குத் தெரியவும் இல்லை....தொடர்கிறேன் பாடலை உங்களுடன்....http://www.youtube.com/watch?v=q9E06eEyjQk