பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்...19.
....ஒரு
கன்னிக்கும்..கடலம்மாவுக்கும்
நடக்கும்
ரகசிய
உரையாடல்....
அறுபத்தி
ஐந்தாம்
வருடம்
வெளிவந்த
அருட்செல்வர்
எ.பி.என்.அவர்களின்
திருவிளையாடல்
திரைப்படத்திலிருந்து
திரை
இசைத்திலகம் மாமாவின்
இசையமைப்பில்
கவியரசரின்
வரிகளில்,சுசீலாம்மாவின்
கோகிலக்குரல்
சாவித்திரி
அம்மாவுக்காக
ஒலித்த நீலச்
சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திரப்
பொண்ணு.....
திருவிளையாடற்புராணத்தில்
வலைவீசி
மீன்பிடிக்கும்
படலம் கதைக்
களம்....களத்திற்கு
சுவையும்
மெருகும்
சேர்க்க அன்னை
உமையவள்
மீனவப்
பெண்ணாக
வந்து,இறையனார்
வலை வீசி மீன்
பிடித்து
மீன்விழியாளையும்
கரம்
பிடிக்கிறார்.
மீனவப்
பெண்ணாக
வரும்
உமையவள்.....கடலம்மாவிடம்
அவளின் இல்லற
அனுபவம்
கேட்கும்
பாடலாக அமைக்கப்
பட்டிருக்கும்...மீனவர்களின்
ஏல எலோ ஏலேலோ
கோரசுடன்
ஆரம்பிக்கும்
பாடலில்
ஒரு ஓ,ஓவுடன்
களமிறங்குவார்கள்
சுசீலாம்மா.....அந்த
ஒரு எட்டு
நொடி ஓ,ஓ,........ஓஹோ....நீலச்சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திரப் பொண்ணு.....நீ
நெளிஞ்சு
நெளிஞ்சு
பார்ப்பதென்ன
சொல்லடி
கண்ணு.....யாரைக்
காண
துடிக்கிறையோ
கரையிலே
நின்னு....
அந்த
நின்னு....இனிமையில்
அங்கேயே கடல்
நின்றுவிடும்....அப்படி
ஒரு குறும்பு
இனிமை குரலில்.....அந்த
ஆள் வராமல்
திரும்புறியோ
சொல்லடி கண்ணு....
.கண்ணுவில்
சாவித்திரி
கண்ணடிக்க
அதை குரலிலேயே
அடித்திருப்பார்கள்
சுசீலாம்மா....
ஒரு
சுருக்கமான
ஓ.ஓ....ஆனால்
அழகான ஓ
ஓ....வலையை
வீசிக் கயிறு
போட்டு வளைக்கவில்லையா....நதி
வந்து வந்து
உன் உடலைக் கலக்கவில்லையா...ஏலேலோ....இனிமை...இனிமை...அத்தனையும்
அப்படி ஒரு
இனிமை...
எனக்கு
நெஞ்சம்
துடிக்குதடி
திருமணம் கொள்ள
மனம் ஏங்கி
ஏங்கி ......இந்த
ஏக்கத்தை
இதைவிட அழகாக சொல்ல
முடியாத
ஏக்கம்...
உனக்கு
வந்த
அனுபவத்தை
சொல்லடி...மெல்ல....
அது
சொல்லும்போது
குரலை அடக்கி
மென்மையாய்.....ஆஹா.....எனக்கும்
ஒருவன் வந்து
சேரும்போது அவனிடம்
சொல்ல...இந்த
சொல்லிலஓராயிரம்பாவம்...மென்மை,நாணம்,ஆசை....ஆர்வம்...
.மெல்ல...சொல்ல...என்ன....எண்ண
இந்த சொற்கள்
எப்போதும்
தமிழில்
கொஞ்சம் கத்தி
மேல் நடப்பது
போல்
தான்.....தாய்மொழி
தெலுங்கானாலும்
சுசீலாம்மாவின்
சொல்லாட்சி....அவர்களைத்
தமிழ்த்
திரைப்பாடல்களின்
முடிசூடா
ராணியாக
அரசாட்சியில்
அமர்த்தி இருக்கிறதோ? என்று
தோன்றுகிறது...
பொருளுணர்ந்து
பாடும் அழகு
என்ன!.....டிக்க்ஷன்
என்று
ஆங்கிலத்தில்
சொல்வார்கள்....அது
அம்மாவிடமிருந்துதான்
கற்கவேண்டும்......அது
முடிந்து ஒரு
பதினைந்து
நொடிகளுக்கு
ஒரு
ஏலேலோ......அது
மானுட கானமே
இல்லை...தேவகானம்தான்...பாடல்
உங்களுடன்.....https://www.youtube.com/watch?v=DDWHo03Q_2A