·
பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்....7
இன்று
பௌர்ணமி....ஒரு
பாடல்...
..... ஒரு
அருமையான
பாடல்...இந்தப்
பாடலைப்
பற்றி நான்
சொல்லப்
போவதில்லை...அது
நாடறிந்த
பாடல்...அம்மாவுக்கு
தேசிய அளவில்
பரிசு
வாங்கித் தந்த
பாடல்..."நாளை
இந்த வேளை
பார்த்து ஓடி
வா நிலா"உயர்ந்த
மனிதன்
திரைப்
படம்....பலமுறை
பார்த்து அணு
அணுவாய்
ரசித்த படம்....
அதிலும்
இந்தப் பாடல்
காட்சி.......அற்புதம்...கொடைக்கானல்...குளிர்
நிலவு...எட்டிப்
பார்க்கிறது...வாணிஸ்ரீ
அதனிடம் ஒரு
கோரிக்கை
வைக்கிறார்"என்
தலைவன்(நடிகர்
திலகம்)இன்று
இங்கு
என்னோடு
இல்லை...அதனால்
நீ இன்று போய்
நாளை வா"..
.பாடல்
துவக்க
இசை...ஆஹா...தொகையறா
ஆஹா.
ஹா..."பால்
போலவே வான்
மீதிலே...யார்
காணவே நீ காய்கிறாய்?
"சென்று
வா
நிலா....பாடும்
சுசீலாம்மாவும்...கையை
போய்
வரும்படி
அபிநயிக்கும்
வாணிஸ்ரீயும்
இன்றுவரை...இந்த
நிமிடம் வரை
நச்....பாடலை, மறைந்து(வாணிஸ்ரீக்குத்
தெரியாமல்)ரசிக்கும்
நடிகர்
திலகம் பச்...பளிச்...எண்ணம்
என்னும்
மேடையில்
பொன் மாலை சூடினான்....கன்னி
அழகைக் காணவே
அவன்
கவிஞனாகினான்.....என்ன
வரிகள்!....
.சொல்ல
நினைத்த
ஆசைகள்
சொல்லாமல்
போவதேன்...சொல்ல
வந்த
நேரத்தில்
"பொல்லாத
"நாணம் ஏன்?யதார்த்தம்...
மன்னன்
நடந்த
பாதையில் என்
கால்கள்
செல்வதேன்....இந்த
இடத்தில்
காலை அழகாக
மாற்றி
மாற்றி வைக்கும்
வாணிஸ்ரீயின்
நளினம்.....
பீலு
வையும்,சாருகேசியையும்
இணைத்து
மெல்லிசை
மன்னரின்
இசைக்கோலம்...அதற்கு
சுசீலாம்மாவின்
தேன்
குரல்...அதில்
சொட்டும்
பாவம்....எளிய
எழிலான வரிகள்....காட்சிக்கு
மெருகு
ஏற்றும்
நடிகர் திலகம்...வாணிஸ்ரீ....
இன்னும்
எத்தனை
பௌர்ணமி
வந்தாலும்
நிலவைப்
பார்க்கும்
போதெல்லாம்
நம்
மனக்கண்ணில் காணொளியாயும்....செவியில்
தேனாறாகவும்
பாய்ந்து
குளிர்விக்கும்
இந்த நிலவுப்
பாடல் சுசீலாம்மாவிற்கு
விருது
சேர்த்ததில்
அர்த்தமுள்ளது....உங்களுடன்.
இந்தப்
பாடலை இந்த
சுருதியில்
இவரைத் தவிர
வேறு யாராலும்
பாட
முடியாது.......முயற்சி
எல்லாம்
வீணாவதுடன் vocal chord... கிழிந்து
தான்
போகும்....இனிமை
இருக்காது....இது
ஒரு
எச்சரிக்கை
என்று கூட
சொல்லலாம்....