·
பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்..56...
ஸ்ரீதர்
இயக்கத்தில் 1960 இல்
வெளிவந்த
படம் மீண்ட
சொர்கம்...இசை
சலபதி ராவ்....ஜெமினி
கணேஷ்,பத்மினி
அவர்கள்
நடிப்பில்....பாடல்கள்
எல்லமே
அருமை...இந்தப்
பாடல் என்
விருப்பம்....எத்தனை
பேருக்குப்
பரிச்சயம்
என்று
தெரியாது...அதனால்
இந்தப்
பதிவு...
நாட்டியத்துக்காகத்
தன்னை
அர்ப்பணிக்க
வேண்டிய
கட்டாயம் நாயகிக்கு...காதல்
வயப்
பட்டிருக்கிறாள்
...காதலைத்
துறக்க
வேண்டிய
வற்புறுத்தல்..என்ன
செய்வாள்
பேதை...புலம்புகிறாள்...இசையாக..
கவியரசரின்
வரிகள்
சுசீலாம்மாவின்
தேன்குரலில்...
ஆரம்பமே
ஒரு நீண்ட
அகாரம்....வலியை
வரிந்து கட்டிக்
கொண்டு
இசைத்து
இழைக்கும்
சாரங்கி.....எங்கோ
ஒரு
பரிச்சயமில்லாத
இடத்திற்கு
நம்மை
அழைத்துச்
சென்று
விடும்....
"மன
நாட்டிய
மேடையில்
ஆடினேன்..கலை
காட்டிய
பாதையில்
வாடுகிறேன்...உயிர்
காதலிலே,உடல்
மேடையிலே
..இந்த
வாழ்க்கையின்
முடிவெங்கே???
4 வரியில்
நச்சென்று
அவள்
டயலெமா....குழப்பம்......கவியரசர்
இங்கு நிற்கிறார்
என்றால்
சுசீலாம்மா
கொடி கட்டிப்
பறக்கிறார்கள்.....சோகம்...அந்த
சோகத்தையும்
தூக்கி
நிறுத்தும்
குரல்...உணர்ச்சிப்
போராட்டத்தை
சொல்லழகோடு
ராக
பாவமாக......அதுவும்..."இந்த
வாழ்க்கையின்"...வாழ்க்கையின்
இங்கு ஒரு
சரட் மின்னல்
சங்கதி....போதுமே...முழு
சோகத்தையும்
அது
சொல்லிவிடும்...
"புவி
வாழ்வினில்
காதல் இன்பம்..அதில்
ஏழையின்
காதல்
துன்பம்...திரு
நாளுமில்லை..மணவாழ்வுமில்லை
இந்த
வாழ்க்கையின்
முடிவெங்கே????இந்த
வாழ்க்கையின்
முடிவெங்கே??பத்மினியின்
அழகு பாடல் முழுவதும்...எழுத்தில்
வடிக்க இயலாத
அழகு..
வெறும்
காவியக்
காதல் போலே
எந்த காதலும்
ஆனதனாலே
உடல்
வாழவில்லை
உயிர்
சாகவில்லை
இந்த
வாழ்க்கையின்
முடிவெங்கே?"...
நடை
பிணம்...இதைக்
கவியரசர்
சொல்லும்
நயம்..உடல்
வாழவில்லை..உயிர்
சாகவில்லை....ஆஹா....சில
அமங்கலமான
சொற்கள் கூட
இந்தக்
கவிஞனின்
எழுது கோலில்
சாகா வரம்
பெறுகிறதே!!!
ஒவ்வொரு
முறையும்
இந்த
வாழ்க்கையின்
முடிவெங்கே
ஒரு
தெய்வீகம்தான்...ஆரம்ப
அகாரம்...முதல்
இறுதி
வாழ்வதெங்கே
வரை நடுவில்
எத்தனையோ
அருமையான
வரிகள்
இசைத்திருந்தாலும்
இன்றும்
இந்தப்
பாடலின்
பின்னே
சென்று கொண்டிருப்பதன்
காரணம்
என்னவோ...அந்த
வாழ்வதெங்கே...சங்கதிக்காக
என்று
சொல்லவும்
வேண்டுமோ?????இப்படி
ஒவ்வொரு
பாடலிலும் பல
சங்கதிகளை அடைத்து
வைத்திருக்கும்
சுசீலாம்மாவின்
இசைப்
பெட்டகத்துக்குள்
போனவர்
மீளவும் முடியுமோ????பாடல்
உங்களுடன்...http://www.youtube.com/watch?v=m17IHu3UkLM