Visali Sriram

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..5.

இன்று 1972க்கு ஒரு ரீவைண்ட்...உடன் வருவது சுசீலாம்மா...

சுசீலாம்மாவுடன் இன்று தேனிசைப்பயணம்...அவர்களின் எல்லாப் பாடல்களுமே எனக்கு தேனிசைதான் என்றாலும் இந்தப் பாடல் தேன்மழை.அவருடைய சிறந்த பத்து பாடல்கள் எடுத்துக் காட்டச்சொன்னால் அது கடலின் ஆழத்தை அளப்பதற்கு சமம் என்றாலும் இந்தப் பாடல் மேலே துள்ளித் தெரியும் ஒரு அலை....

இசை வல்லுனர்களே கொஞ்சம் திகைக்கும்,தடுமாறும் பாடல்....கேட்கும் போது சாதாரணமாகத் தோன்றும் பலருக்கு பாட முயற்சிக்கும் போது செப்படி வித்தை காட்டும் பாடல்...கோவில் மணி,பியானோ,குழல்,ஒரு ரிதம்,ஒரு தந்தி.....இத்துடன் ஒரு சவாலான பாடல்.மெல்லிசை மன்னர் இசை....ஞான ஒளி படம்...கவியரசரின் வரிகள் இசையரசியின் குரலில் மணமேடை மலர்களுடன் தீபம்.....

ஊர்வசி சாரதா பாடலின் மென்மைக்கு மேன்மை சேர்த்திருப்பார்....நாயகி காதலன் காமுகன் என்று தெரியாமல் தன்னை அவனிடம் தோற்கிறாள் அவன் நல்வாழ்வு தருவானென்று....அவள் ஆசை,கனவு,இந்தப் பாடல்....ஆரம்பமே ஒரு அழகான ஹம்மிங்...பாடலின் முழு எசென்ஸ் அதில் தெரியும்....மணமேடை....மலர்களுடன் தீபம்...மங்கையர் கூட்டம் மணக்கோலம்....மாப்பிள்ளை பெண்ணென்றால் இவர் என்பார் என்றும் வாழ்க மணமங்கை என்பார்....ஒவ்வொரு வார்த்தையுமே கோணம் இடறினால் அதல பாதாளம் தான் என்கிற மாதிரி இடுக்கு பாடல்....அனாயாசமாக வழியெங்கும் பூமழையாக பொடி பொடி சங்கதிகளை தூவிக் கொண்டே பாடியிருப்பார்கள் சுசீலாம்மா....சரணம் துவங்குவதற்கு முன்னாலெல்லாம் ஆ...ஆ......ஆஹா....லோயர் நோட்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்....அது இந்தப் பாடலில் அவர் எவ்வளவு நயத்துடன் பாடி இருக்கிறார்கள் பாருங்கள்...அப்படி ஒரு சுத்தம்.....நான் இரவில் எரியும் விளக்கு....நீ என் காதல் மணிமாளிகை....நீ பகலில் தெரியும் நிலவு நான் உன் கோவில் பூந்தோரணம்...

.மணியோசை ஒலிக்கும்....அவள் கிறிஸ்தவப் பெண்....அந்த மணியோசை கூட தேவாலயத்தின் மணியோசை.....மெல்லிசை மன்னர்....மணியோசையில் எத்தனை விதம் காட்டியிருக்கிறார்...ஆலயமணி....தேவன் கோவில் மணி....பள்ளிக்கூடமணி......வித்தகர்....

அடுத்த சரணம் அவளின் நெருக்கம்...'தேகம் தழுவும் குளிர் காற்று...மோகம் பரவும் பெருமூச்சு...இந்த பெருமூச்சு பாடலில் ஒலிக்கும் மென்மையாக....அதுதான் அம்மாவின் சிறப்பு....தனிமையான அவள் உலகில் தாய் வீடு நினைவே இல்லை.....உன் துணை போல சுகமும் இல்லை....ஏமாறுகிறோம் என்று தெரியாமல் ஏமாறுகிறாள்...பாவம்....அதற்கு ஆண்டவனிடம் அருள் கேட்கிறாள்....நம்பிக்கையுடன்...அருள் புரிவான் தேவன்...நம் பாதை எங்கும்......"பேதையே....ஏமாந்து திரும்பப் போகிறாய் என்று நம் மனம் பத பதைத்தாலும்....பாடலின் இனிமையால் நாமும் ஒரு சில நிமிடங்கள் அவளோடு மயங்கித்தான் போய்விடுவோம்.....அப்படி ஒரு அருமையான இசை...அழகான வரிகள்....அற்புதமான பாடல் இதோ உங்களுடன்.....மணமங்கை வாழ்க......வாழ்க.....அந்த இறுதி சங்கதிக்காக சுசீலாம்மா வாழ்க பல்லாணடு

பாடல் - மணமேடை மலர்களுடன் தீபம்|.இதோ உங்களுடன்...http://www.youtube.com/watch?v=cfUedZ9DCjs

 

மணமேடை மலர்களுடன் தீபம் - Manamedai Malargaludan Deepam

பாடல் - மணமேடை மலர்களுடன் தீபம் | Song - Manamedai Malargaludan Deepam திரைப்படம்...

YOUTUBE.COM

Top of Form

LikeLike

 ·  · Share

·         10 people like this.

·        

Jagannatha Kalenahally TNX...

1 hr · Like

·        

Dharma Solai Excellent movie Ghana oli

1 hr · Like

·        

Naguln Apk உங்கள் சிந்தனையும் செயளும் அப்படியே என்னை போலவே உள்ளது

1 hr · Like

·        

Thendral Varum very nice

1 hr · Like

·        

Aravind Karthik இது துருவ நட்சத்திரம் அக்கா.. என்றும் ஜொலிக்கும்.

37 mins · Like · 1

Bottom of Form