Visali Sriram
 · 

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...44

.http://www.youtube.com/watch?v=5adqzc2GRPU

இன்று மலர் விடு தூது....ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி ஒன்றில் வெளி வந்த என் அபிமான இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் "தேன் நிலவு "படத்திலிருந்து சுசீலாம்மா பாடியிருக்கும் "மலரே மலரே தெரியாதோ?"இந்தப் படத்திற்கு இசையமைத்தவர்.எ.எம்.ராஜா அவர்கள்...பாடல் வரிகள் கவியரசர்.மென்மையான குரல் வளம் பொருந்திய எ.எம்.ராஜா அவர்கள் இசையமைத்த பாடல்களும் மென்மையாகவே இருக்கும்.பின்னணி இசையும் பின்னணியிலேயே மேன்மை சேர்க்குமே அன்றி ஆரவாரமாக,தடால்,புடால் என்று இருக்காது....மென்மையில் ஒரு மேன்மை.

இந்தப் பாடல் ஒரு மலரிடம், மலரினும் மென்மையான இதயம் படைத்த கதையின் நாயகி தன காதலரைக் கண்டால் தன் நிலையை,இயலாமையை,பிரிவுத்துயரை எடுத்தியம்ப சொல்கிறாள்.அதை அதே மென்மையுடன்.....ஊடே ஒரு இழை சோகத்தையும் சேர்த்து வழங்க யாரால் முடியும் அம்மாவைத்தவிர......கவியரசர் பிரிவுத்துயரை எடுத்துரைக்கும் மேன்மையைப் பாருங்கள்..."தெரியாதோ?மனதின் நிலைமை புரியாதோ?எனை நீ அறிவாய் உன்னை நான் அறிவேன்.என்று மலரும் மங்கையும் ஒரு ஜாதி என்கிறார்....பெண்மைக்கு சிறப்பு செய்ய கவியரசருக்கு சொல்லித்தரவா வேண்டும்?

உன்னை நானறிவேன்....இந்த "நான்"அங்கு ஒரு அழுத்தம்....ஒரு நெருக்கம்(மலருடன்)ஒருவேளை என் காதலர் என்னைக் காணவந்தால் என் நிலையை கதையாகவாவது சொல்லிவிடு"என்கிறாள்.

என்ன சொல்ல வேண்டுமாம்?"கண்களில் தோன்றும் காட்சியெல்லாம் அவனே.."கலந்தே நின்றானே....இது சந்தத்துக்காக சொன்னதா?இல்லை அம்மாவின் குரலில் உள்ள சோகம் மலரின் அடி வேர் வரை சென்று அதன் தீவிரத்தை உணர்த்தவோ...தெரியவில்லை...காட்சிகள் மாறும் காலம் போல இந்த வாழ்க்கையும் மாறாதோ?ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....நான் மட்டும் மாறமாட்டேன்....இதை"யார் மாறியபோதும் பாவை எந்தன் இதயம் மாறாது என் நிலையும் மாறாது"இதை குரலினிமையாலேயே உறுதியாக உரைக்கும் வித்தை அம்மாவுக்கே உரியது!பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா....இது மாதிரி அவளுக்கு"கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய் கலந்தே நிற்கிறான்....நினைவுகள் தோன்றும் நெஞ்சிலும் அவனே நிற்கிறான்....இதையெல்லாம் மலரிடம் சொல்லி ,இறுதியாக ஆரூடம் கேட்கிறாளோ மலரிடம்?இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும் திருநாள் வாராதோ?அது வந்து விடுமாயின் அதுவே என் மணநாளாகுமே!!!என்ற ஏக்கத்துடன் முடிக்கிறாள்.இந்தப் பாடலின் சிறப்பு என்று பார்க்கப் போனால் வரிகளும்....அதற்கு தேவையான மென்மையான இசையும்(மிகக் குறைந்த வாத்தியக் கருவிகளே இசைக்கப் பட்டிருக்கும்),இந்த மென்மைக்கெல்லாம்

நான் ஒன்றும் சளைத்தவளில்லை என்று கட்டியம் கூறும் சுசீலாம்மாவின் மென்மையான குரலும் பாவமும்தான்.ஒரு பாடல் ஐம்பது வருடங்களைத் தாண்டியும் இன்னும் இதயத்தை வருடிக்கொடுக்கிறது என்றால் அது பாடலின்,பாடகியின்,பாடல் வரிகளின் சாகாவரமேயன்றி.....வேறு என்னவாக இருக்கமுடியும்.....இதோ பாடல் உங்களுடன்....

http://www.youtube.com/watch?v=2rAHnte6XGo&feature=relatedஇதேபாடல் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அம்மா நேரடியாகப் பாடினார்கள்.அதே மென்மை,ேன்மையுடன்......ஆண்டு பலவாயினும் முதுமை முகத்தில்தான் இல்லையென்றால்.....குரலிலும் சிறிது கூட இல்லை....அதே இனிமை....இசையில் பயணித்துக் கொண்டே இருக்கும்போது முதுமை கூட எட்டியே நிற்கும் போலிருக்கிறது....உங்களுக்காக அதையும் பகிர்கிறேன்.AGE CANNOT WITHER HER:)