Visali Sriram

 · 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...61...

மெல்லிசை..இதற்கு இலக்கணம் இந்தப் பாடல்....மென்மையான காதற்பாடல்..கன்னியொருத்தித் தான் காதல் கொண்ட அனுபவத்தைப் பகிரும் பாடல்...பாடல் முழுவதுமே ஒரு எல்லையில்லா ஆனந்தம்...காரணம் கவியரசர்,மெல்லிசை மன்னர்கள்,சுசீலாம்மா...கண்ணழகி இ.வி.சரோஜா...துள்ளும் இளமைப் பாடல்...பாக்கியலக்ஷ்மி திரைப்படத்திலிருந்து "காதலென்னும் வடிவம் கண்டேன்"..இன்றும் இந்தப் பாடல் டி.வியில் வந்தால் கையில் இருக்கும் பொருளைக் கூட மறந்து...அடுப்பில் இருக்கும் பாலைக் கூட மறந்து "ஆ"என்று வாய் பிளந்து கேட்டு முடித்துத்தான் மறு வேலை...பால் போனால் என்ன...இந்தப் பாடல் அப்புறம் எப்போ வருமோ???

வெகு எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் பாடல்...காதலென்னும் வடிவம் கண்டேன்,கற்பனையில் இன்பம் கொண்டேன்...மாலையிடும் நாளை எண்ணி...மயங்குகிறேன் ஆசைக் கன்னி".....அவனைக் கண்ட நாள் முதல் காதல் பெருகி மணநாளை எண்ணிக் காத்திருக்கும் கன்னி...பாடல் ஆரம்பமே ரம்யமானப் புல்லங்குழல்,மாண்டலின்....மென்மைக்கு மேன்மை சேர்க்க சுசீலாம்மா....

"துள்ளாமல் துள்ளும் உள்ளம்,ின்னாமல் மின்னும் கன்னம்,தொட்டவுடன் மேனியெல்லாம் துவண்டு விடும் கொடியைப் போல..."

இந்த மெல்லியலாளின் அழகு சொல்ல இடையினம்,மெல்லினம்,வல்லினம்...எல்லப் ப்ரயோகங்களும்....இம்மி கூட பிழையில்லாமல் சுசிலாம்மாவின் பளிச் உச்சரிப்பில்....."மின்னாமல்"...இங்கு ஒரு பொடி சங்கதி....

தொடரும் ஓ ஓ ஓ ஓஹொ ஓஹொ...ஆ ஆ ஆ ஆஹ ஆஹ....."ஆஹா...".

"நாளெல்லாம் திருநாளாகும் நடையெல்லாம் நாட்டியமாகும்,

தென்றலின் தேரின் மேலேச்

சென்றிடுவோம் ஆசையாலே"...

அவனோடு வாழப்போகும் ஒவ்வொரு நாளும் திருநாள்...என் நடை கூட நாட்டியமாகும்(அசைந்து,நெளிந்து,படர்ந்து)தென்றலென்னும் தேரிலேறி....இது மன்மதனையும் ரதியும் குறிப்பதற்கு...மன்மதனின் தேர் தென்றல்.....கற்பனைக்கு காவியக் கதை..கவியரசர் கவியரசர் தான்...ரதி மன்மதன் போல் காதல் வானில் தேறேரிப் பறப்போம் ஆசையாலே...

தேரில் ஏறி....இதைப் பாடும்போது ஏறுவதைக் குரலில் காண்பித்திருப்பார்கள்...

எளிய பாடல்...எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியாது...ஆனால் என் இதயம் தொட்ட பாடல் உங்களுடன்...