Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...58.

சோகத்தை சுமந்து வரும் சுபபந்துவராளி....கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னர்களின் இசையில் "பாலும் பழமும்"...திரைப் படப்பாடலைத் தொடர்ந்தே செல்கிறேன்...ஒரு சுகமான தொகையறா.."பாலும் பழமுமென ஒன்றாகச் சேர்த்தாய்..

பாதிவழி சென்றவளை மறுபடியும் அழைத்தாய்...

கண்கொடுத்து கண்பறித்தாய்..

காணவும் வைத்தாய் தாயே..

கல்யாணமானவளைக் கன்னிபோல் ஆக்கிவிட்டாய்"......இந்த நாலு வரிகள் கதையைச் சொல்லி விட்டதால் அது பற்றிச் சொல்லத் தேவையில்லை...

கண்ணில்லாத நடிகர் திலகம்,நர்ஸாக வந்திருப்பது மனைவிதான் என்பது தெரியாமல்....அவள் இறந்து விட்டதாக எண்ணி மறுமணமும் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்...சரோஜாதேவி மனைவி...அவளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தல்....தாங்குவாளா????கதறுகிறாள் அம்மன் முன்...இன்னும் எத்தனை நாள் இப்படி ஒரு நாடகத்தில் என்னை நடிக்க வைக்கப் போகிறாய்??கேட்கிறாள்.."இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா..இன்னும் எத்தனை நாளம்மா....நாளம்மா....அதில் குமுறும் குமுறல்..."

அவர் இரவையும் பகலையும் ஒன்றாய்க் காண்பது எத்தனை நாளம்மா..அம்மா...எத்தனை நாளம்மா..."

இரவையும் பகலையும்.....இங்கு ஒரு கமறல்....எத்தனை நாளம்மா....எத்தனை நாளம்மா.....நாளம்மா....அங்கே சுபபந்துவராளியின் ரசம் தூக்கலாக....

வானும் நிலவும் பிரிந்தே இருப்பது எத்தனை நாளம்மா???மற்றொரு வானம் நிலவைக் கேட்பது எத்தனை நாளம்மா..அம்மம்மா...எத்தனை நாளம்மா??

நிலைக் கண்ணாடியில் முகத்தை மறைப்பது எத்தனை நாளம்மா?? முகத்தை...இங்கு ஒரு அபார சங்கதி.... அவர் நெய்யைப் பால் போல் எண்ணி இருப்பது எத்தனை நாளம்மா????

அவள் அவனுடைய மனைவி...அவனால் அவளைப் பார்த்து உணர்ந்து கொள்ள முடியாததால் அவளைத் திருமணம் ஆகாத கன்னி என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்...இதைக் கவியரசர் சொல்வது"நெய்யைப் பால் போல் எண்ணி இருப்பது""எத்தனை அழகான சொல்லாடல்....கட்டிய தாலியைக் கண்ணுக்கு மறைப்பது எத்தனை நாளம்மா...இதில் மற்றொரு தாலிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எத்தனை நாளம்மா??/அம்மா எத்தனை நாளம்மா...."....கேட்டுக் கொண்டே வந்தவள் இனிமேலும் சாதரணமாகக் கேட்பதில் பயனில்லை என்றுக் கதறுகிறாள்...அம்மனிடம்.."நாடகம் ஆடிடும் நாயகி நீயே...என்னையும் நாடகம் ஆட வைத்தாயே..

என் கதி இப்படி ஆயினும் நீயே...என்னுயிர்த் துணைவரைக் காத்தருள்வாயே!!!!

இந்த நிலைக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் நீயே என் துணைவரையும் காப்பாயே என்று அவள் காலில் தன் பாரத்தை இறக்கி ஓய்கிறாள்.....இறுதி நாலு வரிகளையும் சுசீலாம்மா பாடி இருப்பதில் ஒரு வேகமும் சோகமும் போட்டி போட்டிக் கொண்டு இனிமை சற்றும் குறையாமல் ஒலிப்பதை வியந்து அதன் பின்னே சென்று கொண்டே இருக்கிறேன்......பாடல் உங்களுடன்....