Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...6.

இன்று கங்கைக்கரைத்தோட்டம்....http://www.youtube.com/watch?v=ZuBAsgf0gjw

வானம்பாடி படத்தில் கண்ணனுக்கு முன்னால் கன்னி பாடுவதாக அமைந்த இந்தப் பாடல் படத்தில் ஏற்படுத்திய பரவசத்தைவிட தனியாக கேட்கும்போது ஒரு மோனநிலைக்கு இட்டு சென்று விடும் ஒரு தியானம்

.கண்ணனிடம் சரணாகதி அடையுங்கள் அதுவே சாஸ்வதம் என்பதைக் கவியரசர் எத்தனை வலிமையாக வரைந்துள்ளாரோ,அதை மென்மையாக,இனிமையாக சுசீலாம்மா பாடிக் கொடுத்திருக்கிறார்கள்

மாமா இசையமைப்பில்....அழகே வடிவமாய் தேவிகா....மெய்மறந்து ரசிக்கும் டி.ஆர்.ராஜகுமாரி....பாடலில் தன்னையிழந்து நிற்கும் கண்ணன் சிலை...கொள்ளை அழகு

கங்கை கரைத் தோட்டம்,கன்னிப் பெண்கள் கூட்டம்....இங்கே ஒரு இடைவெளி...நம்மை அங்கே இழுத்துச் செல்ல....கண்ணன் நடுவினிலே...காலை இளம் காற்று....பாடிவரும் பாட்டு....வரிகளுக்காகப் பாட்டா....பாடுவதற்காகவே(சுசீலாம்மா பாடினால் இன்னும் வேகமாக கண்ணன் வருவான்)இனிமையாக சுசீலாம்மாவா....எதிலும் அவன் குரலே....சர்வாந்தர்யாமி...அவன் எங்கும் நிறைந்தவன்..

கன்னிப்பெண்கள் கூட்டம் கண்டேன்...கண்டவுடன் நாணம் கொண்டேன்..இந்த இடத்தில் நாணம் நிஜமாகவே உணரப்படும்...அப்படி ஒரு வசீகரம் அந்தக் குரலில்.....என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ....கண்ணீர் பெருகியதே....இது ஆனந்தக் கண்ணீர்...எக்ஸ்டசி என்பார்கள் ஆங்கிலத்தில்..

இந்த மனம்,கண்கள்,பரமாத்வை என்ன வேண்டும்,அவனையே காணவேண்டும்,அவனுடன் ஐக்கியமாகவேண்டும்...அதுவே இந்த ஜீவனின் நோக்கமாக இருக்கவேண்டும்....அதை கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை....கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ...காற்றில் மறைவேனோ...

.ஒரு ஆன்ம வேகம்...தாகம்...இறைவன் கூவியழைத்தும் வரவில்லையே....அவன் வராமலேயே இந்த உயிர் மாய்ந்து விடுமோ?என்ற ஒரு பதபதைப்பு....இது ஒவ்வொருவர்க்கும் தன்னை உணர்தலின் தாக்கத்தில் ஏற்படும் உணர்வு...

.அதை வார்த்தைகளில் கவியரசர் கொட்டியிருந்தாலும்,ுசீலாம்மாவின் குரல்,அதில் அவர் காட்டும் ஏக்கம்....அப்படியே நெஞ்சிற்குள் இறங்கி துளைத்து எடுக்கும்..

இதற்கெல்லாம் சிகரம் அந்த இறுதி கண்ணா...கண்ணா...ஓலம்....அந்த மணிகளின் ஓசை.....

நாத்திகனையும் ஆத்திகனாக்கும் பாடல் இது.....கண்ணனோ...மன்னனோ....மனம் ஒன்றும் நிலை....அதை இதைவிட எந்த மந்திரமோ,தியானமோ சொல்லி விளங்க வைக்க முடியாது என்பது என் கருத்து...

.கருத்தில் உடன்படாவிட்டாலும் கானத்தில் அனைவரும் ஒன்றிவிடுவீர்கள் என்பதால் பகிர்கிறேன்...