Visali Sriram

September 16 at 8:04am

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...15.

இன்றைய திரைகானம் ஒரு தேவகானம்...நரமனிதர்கள் கேட்கத்தான் முடியுமோ ஒழிய மறுபடியும் பாட முயலமுடியாத கானத்திற்கு அதுதானே பெயர்!

இதுவரை எத்தனையோ பேர் இந்தப் பாடலைப் பாட முயன்று சொதப்பி...என் கண்ணில் மட்டும் ரத்தம் வரவில்லை...நெஞ்சிலிருந்து கூட குருதி வெள்ளம்தான்...படம் ஒரு ப்ரும்மாண்டம்...நாயகனைப் பற்றி நான் சொல்ல வேண்டாம் ..உலகம் சொல்லும்...கவியரசரின்

_____சிகரத்தில் ஒரு மணிமகுடம்..மெல்லிசை மன்னர்களின் சிரசிற்கு வைரக் கிரீடம்...

பாடியவருக்கு நான் அடிமை...ஆமாம் இன்றைய பகிர்வு என்னுயிர் தோழி.....

ஒரு மகாராணியின் அந்தரங்க ஏக்கம்...யாரிடம் சொல்வது....தோழியிடம்....ஆரம்பத்தில் நீதி கேட்பதாகத் தொடங்கி அவன் பெருமை கூறி...அனைவருக்கும் காட்சிக்கு எளியவன் கடும் சொல் சொல்லான்...ஆனால் என் நிலையைப் பார்....மக்கள் நலம் காப்பவனுக்கும் மனையாள் நினைவு மட்டும் ஏனோ வருவதே இல்லை.....வருகின்ற வழக்கையெல்லாம் தீர்க்கிறவன் மனைவியின் வழக்கை மனத்திலும் நினையான்....இன்றாவது அவன் என் நிலைமையை உணர்வானோ....இளமையைக் காக்க துணை வருவானோ....நன்று தோழி நீ தூது செல்வாயோ....நங்கையின் துயர சேதி சொல்வாயோ....என்று தூது அனுப்புகிறாள்...

.இன்றைய பயணம் ஒரு சுகமான பயணம்.காட்சி அமைப்பின் பிரும்மாண்டம்....அரண்மனையின் வளமை...அரசியின் கம்பீரம்....வார்த்தைகளின் கவிதை நயம்..மெல்லிசை மன்னர்களின் இசைக்கோர்வை...வாத்தியங்களின் அருமையான பின்னணி...சாவித்திரி அம்மாவின் பாவம்...இறுதியில் மறைந்து பார்க்கும் துரியோதனன் அசோகன்....குறும்பு கொப்பளிக்கும் நடிகர்திலகம்.....மறைந்து கொள்ளசொல்லும் அசோகனின் அருமையான கையசைவு......அற்புதம்.....இதை எல்லாவற்றையும் நாம் பார்க்காவிட்டாலும் தன குரலிலேயே அதிசயம் செய்திருக்கும் சுசீலாம்மா...ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அம்மாவின் ராஜபாட்டைதான்...இதுதானோ உங்கள் மன்னவன் நீதி....என்று சங்கதியிலே நீதி கேட்கும் பாங்கு அப்பப்பா....அவருக்குத்தான் வரும்...

.தலைவன் என்றாயே.....இங்கு ஒரு ஏக்கமான ஏளன த்வனி..அரண்மனை அறிவான் அரியணை அறிவான்.......ஆ...ஆ...ஆஹா....அந்த அகாரத்துக்கு என் ஆயுள் முழுவதும் நான் அவருக்கு அடிமை....

அரண்மனை அறிவான் அரியணை அறிவான்......ஆஹா அ அ அ ஆ....இந்த அகாரத்துக்கு ஒரு பாதி சொத்து...பின்னால் வரும் மின்னல் அகாரம்...மூச்சு விடாமல்....அதை தாளத்தோடு இணைக்கும் ஒரு பதவிசு.....இனிமேல் மண்ணுலகில் இப்படி ஒரு சங்கீதம்....கனவுதான்...

பாடலில் சுசில்லாம்மாவுடன் பயணித்திருக்கும் சாரங்கி கலைஞருக்கு என் வணக்கங்கள்.அதற்குப் பிறகு அந்த சங்கதிகளைப் பற்றிப் பேச மனிதர்களுக்கு வார்த்தையில்லை...அப்படி ஒரு தேவகானம்...ஒரு தேன்மழை நிற்காமல் பொழிந்து தள்ளிவிடும்.....இறுதியில் நங்கையின் துயர சேதி.....அந்த துயரத்தில் ஒட்டுமொத்த விரகத்தையும் கொட்டி தீர்த்திருப்பார் விரசமில்லாமல்....ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரு மந்திரத்தில் கட்டுண்டவராக பாடலுடன் பயணிப்போம் என்றால்....இன்று வரை அதைக் கேட்கும் பொழுதெல்லாம் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி மலங்க மலங்க விழித்துக் கொள்ள

தரமுடியும்......பாடல் உங்களுடன்....