Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...62.

மெல்லிசைமன்னரின் பியானோ..அம்மாவின் குரலோடு....ஆஹா...தேனோடு கலந்த செந்தமிழ்...கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல்....பாடலைத் தொடர்ந்து செல்ல இதை விட வேறு காரணம் வேண்டுமா???வரிகள் கவியரசர்...காட்சியில் முதல் அறிமுகம் என்றாலும் முத்தான அறிமுகம்...அழகு கொஞ்சும் ஜெயலலிதா...ஸ்ரீதர் சார் இயக்கம்...இதெல்லாம் சேர்ந்தால் எப்படி இருக்கும்....இப்படித்தாங்க!!!

1965 ,வெண்ணிற ஆடைத் திரைப்படம்...பாடல்கள் எல்லாம் அதி அற்புதம்...இப்போது"என்ன என்ன வார்த்தைகளோ...சின்ன விழிப் பார்வையிலே...சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்...சொன்ன கதைப் புரியவில்லை"....இதைப் பற்றி என்ன எழுதுவது?அதுவும் புரியவில்லை..

மெல்லிசை மன்னரின் பியானோவோடு பாடல் ஆரம்பம்...ஸ்ரீகாந்த் பியானோவில்...விரல்களின் வித்தை ஜாலம் மெல்லிசை மன்னர்.மனோநலம் பாதிக்கப்பட்ட பெண்ணான ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்ய வந்த ஸ்ரீகாந்த்..அவள் மனோ நிலையை சரி செய்து மனதிற்குள்ளும் புகுந்து விடுகிறார்...அதை லாவகமாகப் பாடல் மூலம் தெரிவிக்கிறாள் இவள்.இந்தப் பாடல் முழுவதும் ஒரு 17 வயதுப் பெண்ணின் இன்னஸென்ஸ்..குறும்போடு பாடி இருப்பார் சுசீலாம்மா..சின்ன விழிப் பார்வையிலே...அதில் கொஞ்சும் குமரியின் குழந்தைத் தனம்....இனிமை ...அத்தனை இனிமை...

சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்...சொன்ன கதைப் புரியவில்லை....தமிழில் இந்த மாதிரி சொல்லடுக்குகள் சொல்லி சொல்லி...கொஞ்சம் கடினம்தான்...அதை அத்தனை அழகோடுப் பாடிக் கொடுத்திருப்பார்..

முதல் சரணத்துக்கு முந்தய பியானோ பிஜிஎம்....அதைத் தொடரும் ஆஹா ஹா...பியானோ...தொடரும் ஆஹாஹா......பியானோ...அஹா அஹா ஆஆஹாஹா..

இதைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு இசைஞானம் எனக்கு இல்லை...ஒன்று மட்டும் சொல்லுவேன்...இனிமேல் இது மாதிரியெல்லாம் யாராலும் பாடமுடியாது....அது ஒரு தனி தேவராகம்...

"உன்னைத் தான் கண்டு சிரித்தேன் நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்...என்னைத்தான் எண்ணித் துடித்தேன் ,எண்ணம் ஏதோ ஏதோ வளர்த்தேன்..பெண்மைப் பூவாகுமா?இல்லை நாளாகுமோ...இல்லைத் தேனோடு பாலாகுமா?"

உச்சஸ்தாயியில் உன்னைத்தான் கண்டு சிரித்தேன்...

இறங்கி நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்...

என்னைத்தான்...இங்கு ஒரு மயக்கம்.எண்ணித் துடித்தேன்....ஒரு அழுத்தம்...எண்ணம் ஏதோ ஏதோ வளர்த்தேன்...எத்தனை அழகாகக் காதலைச் சொல்லுதல்....அருமை..வரிகள்..இசை...பாடி இருப்பது....சுகங்களின் சங்கமம்...

தொடரும் பியானோ...ஆஹா....ஒஹோ ஹோ..."ஓஹோ ஹோ"....

'நிலவே உன்னை அறிவேன் அங்கே நேரே ஓர் நாள் வருவேன்...

மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லைப் பனி போல் நானும் மறைவேன்..

இன்னும் நான் என்பதா இல்லை நீ என்பதா..இல்லை நாமென்று பேர் சொல்வதா???"

மனநிலை சுத்தமாகத் தெளிந்தவள்தான்..ஆனாலும் குழந்தைத் தனம் மாறாத குமரி....இன்னும் நிலவை மறக்காமல்....நேரே வருவேன்...அங்குதான் மலர்வேன்...அது நடக்கவில்லை என்றால் நிலையில்லாதப் பனித்துளி போல மறைந்து போவேன்...இனிமேல் எல்லாம் உனக்கு சொல்லிவிட்டேன்...அதனால் இனிமேல் நீ என்றும் நான் என்றும் ஏன் தனித்தனியாக...நாம் என்றே பேர் சொல்லலாமா????கேட்பதுடன் பாடல் முடிகிறது....

எப்போது கேட்டாலும் கேட்பவர் மனம் துள்ளிக் குதிக்கும் சந்தோஷத்தில்....பசுமையான பாடல்...காலத்தை வென்ற பாடல்..உங்களுடன்...https://www.youtube.com/watch?v=CsqxRsGCpR8