Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..47.

இதயகமலம்.....எல்.வி ப்ரசாத்...கவியரசர்..மாமா கே.வி எம் கூட்டணியில்....அத்தனை பாடல்களும் பின் தொடர்ந்து செல்லவேண்டியவைதான் என்றாலும் இன்றைய பகிர்வு..."என்னதான் ரகசியமோ இதயத்திலே"...எல்லாப் பாடல்களும் (ஒன்றைத் தவிர)சுசீலாம்மாவின் சாம்ராஜ்யம்தான்...

அழகான பீலு ராகத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இந்தப் பாடல் கவியரசரால் புனையப் பட்டது...

நாயகி விஜயா இறந்து விட்டதாக நம்பிக்கொண்டு அவளையே நினைத்துக் கொண்டிருக்கும் நாயகன் மனதை மாற்றி மறுமணம் செய்து வைக்க முடிவாகிறது....ரவிச்சந்திரன் மனதை மாற்றும் எண்ண்த்தில் களமிரங்கும் ஷீலா.....அவர் பாடுவதாகப் பாடல்...சிருங்கார ரசம் கொஞ்சம் தூக்கலாகவே.....ஷீலாவின் நடனம் கனகச்சிதம்...விரகத்தை வாரி இரைக்கும் வரிகளுக்கு கண்ணியத்தையும் பெண்ணியத்தையும் கலந்து இசைத்திருப்பார்...மென்மையாக...மேன்மையாக..சுசீலாம்மா.

"என்னதான் ரகசியமோ...ஒரு பொடி இடைவெளி விட்டு வரும் இதயத்திலே...நினைத்தால்...எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே...சிரிப்பு வரும்...ஒரு குறுஞ்சிரிப்புடன்....

விழிப் பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச் சொல்லாது...மனம் பேசச் சொன்னாலும் வாய் வார்த்தை வராது...அச்சம் பாதி ஆசை பாதி பெண்படும் பாடு....பாடைப் பாடலாகப் பாடும் லாவகத்தை என்ன சொல்வது....??வாய் வார்த்தை வராது....வாய்...அது பாடும் அழகு....ஒவ்வொரு வார்த்தையை உச்சரிக்கும் அழகைப் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம்...

நாணத்தை வாய் வார்த்தையில் கவியரசரைப் போல் இத்துணை நேர்த்தியாக யாரால் வடிக்க முடியும்???

அடுத்த சரணம் பாடிக் கொண்டிருப்பது ஷீலா என்றாலும் ரவிச்சந்திரனுக்கு மனைவி விஜயாவாகவே தெரிவதான வரிகள்...மனைவிக்கான அந்தரங்கம் என்பதால் கொஞ்சம் உணர்வுகள்...சிருங்காரம் தூக்கலாக...."மலர் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது...அது பள்ளி கொண்டாலும் துயில் கொள்ளவிடாது...முள்ளாய்த் தைக்கும் விரகம்..."ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது...அமைதி கொள்ளாது...ள்ளாது....அந்த ஒரு அழுத்தம்....ஆஹா...சுசீலாம்மா!!!!

நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே...இப்படி ஒரு பாடலுக்குள் சக்கிரவியூகத்தில் நுழைந்த அபிமன்யு போல தவிக்கிறோமே என்று!...எல்லாம் அந்தக் குரல் செய்யும் மாயம்...

"முதல் இரவு வந்ததும் அந்த உறவு வந்ததும்...நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும்...என் கன்னத்தின் மீது கோலம் போட்டு சிரிக்க வைத்ததும்...சிரிக்க வைத்ததும்....நினைத்தால்""".....சிரிப்பு வரும் சமயத்திலே...

இறுதி சரணம் பாடும் போது மறுபடியும் ஷீலா...

வரிகளின் வலிமையைப் பாருங்கள்..."பேரழகிருந்தென்ன ஒரு ரசிகன் இல்லாமல்...தேன் நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்...என்ன பெண்மை என்ன மென்மை இன்பமில்லாமல்"....அர்த்தம் உள்ளங்கை நெல்லிக்கனி என்பதால் நாம் அம்மாவின் இசைக்கு செல்வோம்...

விரகத்தைக் கூட தெய்வீகமாய் அம்மாவால் மட்டுமே பாடமுடியும்....வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து,உணர்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து...என்ன பெண்மை...என்ன மென்மை...நினைத்தால் எனக்கு ப்ரமிப்புத்தான் வருகிறது...தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்த வாணியாகத்தான் அவரை நினைக்கத் தோன்றும்....இன்பம் இன்பம் பேரின்பமே.....இன்பத்தோடு தொடர்ந்து செல்கிறேன் உங்களோடு....http://www.youtube.com/watch?v=f0sdmE7TM34..