Visali Sriram

September 18 at 8:42am · Bangalore

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..17.கலங்கரை விளக்கம் திரைப் படத்திலிருந்து என்னை மறந்ததேன் தென்றலே பாடலைத் தொடர்ந்தே நான் செல்ல உங்களையும் அழைத்துச் செல்லும் ஆசையுடன்.....

ஒரு அமானுஷ்யம் கலந்த ஏக்கம்...இந்தப் பாடல் கேட்ட நாளிலிருந்து ஒரே கேள்வி என் மனதில், எப்படி இவ்வளவு வார்த்தைகளையும், தாய்மொழிதமிழ்அல்லாதஒருவர்சிறிதுகூடபிசகாமலஅத்துணைபாவத்துடன்இன்னிசையாய்...செந்தமிழாய்.பொழியமுடிந்தது.????

கவியரசர் தமிழோடு விளையாடி இருப்பார்,மெல்லிசைமன்னர் அந்த தமிழுக்கு அழகு சேர்க்கும் விதமாக இசைகோர்வை அமைத்திருப்பார்....

சுசீலாம்மாவோ தன் தேன் குரலால் யாருமே தொடமுடியாத ஒரு உச்சத்தை வெகு லாவகமாகத் தொட்டுத் திரும்பியிருப்பார்.

ஒரு ஒரு வரியும் சுமக்கும் ஓராயிரம் அர்த்தம்,ஏக்கம்....

என்னை மறந்ததேன் தென்றலே....சென்று நீ என் நிலை சொல்ல வா.....

தென்றலே.....அழைக்கும் இனிமையில் கல்லும் கரையும்....என் நிலை....இங்கு ஒரு ஏக்கம்....குரலோடு இழையும் இனிமையும்,தனிமையும்.....அருமை....காற்றோடு வளரும் சொந்தம்...காற்றோடு போகும் மன்னவா....கண்ணோடு மலரும் அன்பு கனியாக மாறாதோ????"மன்னவா"வில் ஒரு கெஞ்சல்...."மாறாதோ"வில் ஒரு நம்பிக்கை.....கலையாத காதல் நிலையானதென்று அழியாத சிலைகள் செய்தாயோ?காதலன் பல்லவனாக இருந்திருக்க வேண்டும்....சிலை செய்தான் என்பதனால்....அறியாத பெண்ணின் மனவாசல் கண்டு திறவாமல் எங்கே சென்றாயோ????இந்த கவிநயம் இனிமேல் எங்கு காணப் போகிறோம்??அருமை....மனவாசல் தொட்டு திறவாமல்......வரிகள் வைரமென்றால்,பாடி இருக்கும் நயம் அது கோர்க்கப்பட்ட மாலை....

.நிழல் நிஜமாகும் நாள் என்று...இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும்,உன்னை நான் ஆளும் சொந்தம் இல்லையோ?ஊருக்கே ராஜாவானாலும் அவன் மனையில் அவனை ஆளுவது அவன் மனையாள் தானே.....என்னே கவித்துவமான உண்மை!!!

இங்கும் ஒரு மன்னவா கெஞ்சல்....மாறாதோ?உறுதி....நம்பிக்கை..

.தொடராமல் தொடரும் உறவு....அதில் வளராமல் வளர்ந்து நின்ற உறவு....முடியாமல் முடியும் பனிபோன்ற கனவில் நின்றாயோ?உறவின் நிலை, இரண்டுங்கெட்டான் நிலையில்,மதில் மேல் பூனையாய்....பனி போன்ற கனவில்....என்ன அருமையான உவமை.....

பனி....நிரந்தரமில்லை...கதிரவன் வந்தால் அத்துடன் முடிந்தது....கனவும் அப்படியே....உறக்கம் கலைந்தால் முடிந்தது....கரையில் நிற்கும் என் நிலையை, வந்தோடும் அலைகள், அவனிடம் என் காதல் பாடாதோ?என் நெஞ்சமும் என் நாளும் உன்னைத் தேடி வாராதோ?என்று ஒரு ஓலம்....ஏக்கத்தை,சோகத்தை ஒரு அமானுஷய்த்துடன் கலந்து சொல்லும் இந்தப் பாடல் இசையரசியை ஒரு தொடமுடியா வானமாக உயர்த்தி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.....பாடல் உங்களுடன்.....நெஞ்சைக் கிழிக்கும் சோகம் என்றாலும்...மயிலிறகாய் வருடி மருந்திடும் தேனிசை......