பாடலைத்
தொடர்ந்தே சென்றேன்....4
.பாடல் ஒரு மறக்கமுடியாத
பாடல்.இது போல
இதுவரை ஒரு பாடல்
வந்ததும் இல்லை...வரப்
போறதும் இல்லை...பாடல்
வரிகள் வாலி அவர்கள்....இசை...ஹம்மிங்
மெல்லிசை மன்னர்...பாடியது
...வேற யார்?பாட முடியத சாதனைப்
பாடல்களை அவரன்றி
வேறு யாரால் பாட
முடியும்?
தன்னை
விட்டுப் பிரிந்து
போன காதலனை நினைத்து
காதலி பாடும் ஏக்கப்
பாடல்...பாடலின்
சிறப்பு பின்னணியில்
ஒலிக்கும் மீனவர்களின்
ஹொய்..ஹொய்யா....மெல்லிசை
மன்னரின் ஓலமான
ஹம்மிங்.அவருடைய
மேக்சிமம் மேல்
சுருதிக்கு அம்மாவின்
சுருதி....இது வேற
யாராலாயும் முடியாத
ஒன்று...மேல் ஸ்தாயியில்
ஒரு மயிரிழை கூட
சுருதி பிசகாமல்
இனிமையே சாறாக
வடித்துப் பிழியும்
சோகம்....
அவன் இப்போது
அவளுடன் இல்லை...ஆனால்
அவன் எப்படியும்
வந்து தன்னுடன்
இணைவான் என்ற நம்பிக்கை
மாத்திரம் அவளுக்கு
எள்ளளவும் குறையவில்லை....பாடல்
முழுவதும் போனாண்டி
என்ற சோகம் வரும்
போதெல்லாம் வந்தாலும்
வருவாண்டி என்கிற
அசைக்க முடியாத
நம்பிக்கை...
பாடல் காட்சியில்
சரோஜாதேவி அம்மா...அவர்
அழகை சொல்ல வார்த்தையே
இல்லை...கடலின்
மறு கரையில் அவர்
காதலன் புரட்சித்
தலைவர்...அவருடைய
உடை அலங்காரத்தையும்
அந்
த வண்ணத்தையும்
காணக் கண் கோடிதான்
வேண்டும்...
பாடல் துவக்கத்தில்
கடற்கரை...மீனவர்களின்
பின்னணி இசை,மெல்லிசை
மன்னரின் குரலையும்
தொடர்ந்து அம்மாவின்
ஆரம்பம்...என்னை
எடுத்துத் தன்னைக்
கொடுத்துப் போனவன்
போனாண்டி....தன்னைக்
கொடுத்து என்னை
அடைய வந்தாலும்
வருவாண்டி....போனவன்
போனாண்டி...ஓ...போனவன்
போனாண்டி....வருவாண்டியில்
ஒரு சங்கதி...பொடிசுதான்....ஆனால்
பெரிசு....நமக்கு
பரிசு...
சின்ன வயதுக்கு
ஏக்கத்தை வைத்துப்
போனவன் போனாண்டி...ஏக்கத்தைத்
தீர்க்க ஏனென்று
கேட்க வந்தாலும்
வருவாண்டி....ஹோய்...ஹோய்...ஹோய்....போனவன்
போனாண்டி....அந்த
ஹோய் ஹோய்.....அய்யோ.....அது
அதுதான்..
நெஞ்சை எடுத்து
நெருப்பினில்
வைத்துப் போனவன்
போனாண்டி...ஹோ......இந்த
வரிகளை இந்த ஸ்தாயியியில்
இப்படி துல்லியமாக
இவரைத் தவிர வேற
யாராலையும் பாடமுடியாது......
நீரை எடுத்து
நெருப்பை அணைக்க
வந்தாலும் வருவாண்டி....ஹோய்
ஹோய்....போனவன் போனாண்டி...
ஆசை மனதுக்கு
வாசலை வைத்துப்
போனவன் போனாண்டி....வாசலைத்
தேடி வாழ்த்துக்கள்
பாடி வந்தாலும்
வருவாண்டி....போனவன்
போனாண்டி....ஹோய்
ஹோய் ஹோய் போனவன்
போனாண்டி.....
பாடல் வரிகள்
முடிந்தாலும்
பின்னால் மெல்லிசை
மன்னரின் ஓ ஓ....அது
ஓஹோ....
விரகப் பாடலைக்
கூட சுசீலாம்மா
பாடுபோது துளி
கூட விரசம் என்பதே
தெரியாது....ஒன்று
பாடலின் இனிமை....மற்றொன்று
பாடுபவர் சாக்ஷாத்
கலைவாணி....மானுட
உணர்ச்சிகளுக்கு
அப்பற்பட்ட உணர்வுதான்
பாடல் முழுவதும்...
பாட்டுக்கு
ஒரு படகோட்டி படத்திலிருந்து
இந்தப் பாடல்
....1966இலிருந்து எனக்கு
ஒரு புரியாத புதிர்தான்.....
வரிகளில் பிரமிப்பு...இசையில்
ஒரு ஆச்சர்யம்...பாடியவர்
குரலில் ஒரு மயக்கம்...எனக்கு....
சிறு வயதில்
பாடிப் பாடி பார்த்து
ஒரு நாள் இதெல்லாம்
நமக்கெல்லாம்
வராது என்று ஒரு
ஞானம் வழங்கிய
பாடல்.
https://www.youtube.com/watch?v=T9uUWp-_ArA
என்னை
எடுத்து தன்னைக்
கொடுத்து - Ennai Eduthu Thannai Koduthu - YouTube - Google+ - Padagotti
"Iniya Paadalgal " The Best Tamil Songs in Tamil...
YOUTUBE.COM