http://www.youtube.com/watch?v=I6gHcj4jM6s&playnext=1&list=PLA981540D921734B4&feature=results_video

இசை....செவி வழிப் புகுந்தால் மட்டுமா  இசையாகிறது??....புலன்கள் ஒவ்வொன்றையும் தடவி...இறுதியாக ஆன்மாவுடன் ஐக்கியமாகி....நம்மை நாம் இழக்கும் தருணம்....காட்சி தெரியாது....கானம் மட்டும் கேட்கும்...எப்போது கண்மூடினாலும் மனத்தை உற்று கவனிக்காமல் சலனமில்லாமல் இருந்தால் அதுவே ஒரு மோன நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும்....ஆள் அரவமில்லாத அந்த இடத்தில் பரமானந்தம்...இறையுடன் சங்கமம்....அதற்கு மந்திரங்கள் வேண்டாம்...பூஜை வேண்டாம்...வார்த்தைகள் கூட வேண்டாம்....மென்மையான அந்த குரல்.....அது அது தான் மோன பரவச நிலை....அந்த நிலையை அடைய முனிவர்களும் யோகிகளும் செய்யும் தவத்தை நான் செய்ய வில்லை....இந்தப் பாடலை ஒலிக்க விட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டேன்....என்னை மறந்தேன் ....பாஷை புரியவில்லை...ஆனால் ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம்...பாடல் முடிந்து வெகு நேரம் எதுவுமே புரியாமல் மலங்க மலங்க முழித்துக் கொண்டு....பிறகு சுதாரித்துக் கொண்டேன்.....எங்கிருந்து வீசுதோ......இனிதான இளந்தென்றல்....என்கிற மாதிரி ஒரு குளிர்ச்சி......இதோ உங்களுடன்......மறுபடியும்.